jaga flash news

Wednesday, 26 September 2012

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...


தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறீருகளோ, அதேப்போல் தலை வழுக்கை ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இயற்கையிலேயே அழகாக காணப்படும் ஆண்களின் அழகைக் கெடுப்பதில், வழுக்கை முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு திருமணம் கூட நடைபெறுவது கடினமான விஷயமாகிறது. மேலும் வழுக்கைத் தலை மாப்பிள்ளையை எந்த பெண் தான் விரும்புவாள். ஆகவே ஆண்களே எதற்கும் கவலை படாமல், தலை வழுக்கை ஆவதற்குள் கவனமாக கூந்தலை பராமரித்து வருவதற்கு சில டிப்ஸ் இருக்கிறது.
* நிறைய ஆண்கள் கூந்தல் ஸ்டைல் செய்கிறேன் என்று கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த ஜெல், கலர் என்று வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் உதிர்தல் தான் ஏற்படும். ஏனெனில் அவை தலையில் உள்ள மயிர்கால்களின் வளர்ச்சியை தடுத்துவிடுகிறது. ஆகவே எப்போதும் ஸ்கால்ப்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஆண்களுக்கு கூந்தல் குறைவாக இருப்பதால், அவர்கள் தினமும் கூட தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கலாம். இதனால் ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும். கூந்தலும் வளரும்.
* வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் தலையில் உள்ள மயிர் கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமோ, அதேப்போல் கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும். மருத்துவர்களிடம் கூந்தல் உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று கேட்டால், அவர்களும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, ஜிங்க், காப்பர் மற்றும் புரோட்டீன் குறைவாக இருப்பதால், கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது என்று கூறுவார்கள். ஆகவே டயட்டில் முட்டை, ப்ராக்கோலி, கீரைகள் மற்றும் மீன் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கூந்தலின் அடர்த்தியை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று. அதற்கு முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பீர் நல்ல பலனைத் தரும். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை கூந்தலுக்கு உபயோகித்து வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.
ஆகவே மேற்கூறியவாறு கூந்தலை பராமரத்து வந்தால், வழுக்கை ஏற்படுவதை தடுப்பதோடு, கூந்தல் நன்கு அடர்த்தியாக, ஆரோக்கியமானதாக இருக்கும்

No comments:

Post a Comment