jaga flash news

Tuesday, 9 October 2012

திருமண வாழ்க்கையில் தோல்வி ஜாதகமா ?


இனி நாம் பார்க்க இருப்பது திருமணத்திற்கு முன்பே ஒருவரது ஜாதக அமைப்பை கொண்டு திருமண வாழ்க்கையில்  தோல்வி நிலை இல்லாத ஜாதகமா ? என தெரிந்து கொள்வதை பற்றி .


கிழ்கண்ட முறையில் உள்ள ஜாதக அமைப்பை சேர்ந்த வதுவரனை, தவிர்த்துவிட்டாலே நிச்சயம் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் .


) ஒருவரது ஜாதகத்தில் சூரியன் எனும் கிரகமும் , சந்திரன் எனும் கிரகமும் 100  சதவிகிதம் ராகு கேதுவால்  பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்க, வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை .


) ஒருவரது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் , களத்திர ஸ்தானம் இரண்டும் 100  சதவிகிதம்  பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்க, வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை .


) ஒருவரது ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் வக்கிரகம் பெற்று அந்த கிரகங்கள் அமர்ந்த வீடுகள் அனைத்தும் 100  சதவிகிதம்  பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்க, வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை .


) ஒருவரது ஜாதகத்தில் லக்கினமும் , பூர்வ புண்ணியமும் 100  சதவிகிதம் பாதிக்க பட்டு, பூர்வீகத்தில் குடியிருந்தால், அந்த ஜாதகரின் இல்லற வாழ்க்கை நிச்சயம் தோல்வி அடையும் .

ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று திசையை நடத்தும் பொழுது , நான்காம் வீடு சம்பந்தம் பெற்ற திசைகளை குறிக்கும் வீடுகளில் ஜாதகர் குடியிருந்தால் நிச்சயம் விவாகரத்து ஜாதகர் வீடு தேடி வரும் .

) மருமகன் , மருமகளை பற்றி புரிந்துகொள்ளாத மாமனார் மாமியார் , மற்றும் சொந்த பந்தங்கள் , நண்பர்கள் இருந்தாலும் இல்லற வாழ்க்கை தோல்வியை  தரும் .

) தம்பதியரிடம் அன்பு பற்று , விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லை என்றாலும் , ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்றாலும், இல்லற வாழ்க்கை தோல்வியை  தரும் .  

No comments:

Post a Comment