jaga flash news

Sunday 16 December 2012

திருமணம் செய்தவர்களுக்கு 60ல் சாந்தி.. செய்யாதவர்களுக்கு என்ன?


திருமணம் செய்தவர்களுக்கு 60ல் சாந்தி.. செய்யாதவர்களுக்கு என்ன?
Temple images
60 வயது நிரம்பிய நாளில் செய்ய வேண்டியதுதான் சாந்தி. திருமணம் நடந்திருந்தாலும் நடக்காமல் இருந்தாலும் 60 வயது நிரம்பும். திருமணம் செய்து கொள்ளாதவனும் சுகாதாரத்துடன் வாழ வேண்டும். 60 வயது வரை கால தேவதைகளின் ஒத்துழைப்பில் வளர்ந்து ஓங்கிச் செழிப்புற்றான். 60-க்குப் பிறகு உடலுறுப்புக்கள் தகுதி இழக்கும்போது. அந்த இழப்பை ஈடுகட்டும் அளவுக்கு அருள்பாலிக்க, சிறப்பு வழிபாட்டால் கால தேவதைகளை மகிழ்விப்பதே சாந்தி.
திருமணம் ஆனவர்களிடமும் அவனுக்கு மட்டும் தான் 60-வயது நிரம்பியிருக்கும்; மனைவிக்கு அநேகமாக பூர்த்தியாகி இருக்காது. ஆக, அப்போதும் தனியாகத்தான் சாந்தி செயல்படுத்தப்படுகிறது. முதுமை எட்டிப்பார்க்கும் வேளையில், பலவித பிணிகளைச் சந்திக்கிறது இன்றைய சமுதாயம். மருத்துவம் ஒத்துழைத்தாலும் பலருக்குப் போதுமான நிம்மதி கிடைப்பதில்லை. வைத்திய முறையில் தெய்வத்திடம் முறையிடுவதும் உண்டு. அதற்கு, தெய்வவ்யபாச்ரய சிகிச்சை என்று பெயர் வைத்திருக்கின்றனர். நமது காலத்தைப் பறிப்பவனிடம் மண்டியிட்டு வேண்டினால் காலத்தை நீட்டித் தருவான், உயிர் இருந்தால், உடலை ரிப்பேர் செய்து செயல்படவைக்கவே மருத்துவர்களால் இயலும். அவர்களால், ஒருவருக்கு உயிர் அளிக்க இயலாது என்று ஆயுர்வேதம் எச்சரிக்கும் (நவைத்ய: ப்ரபுராயுஷ)
காலதேவனின் வழிபாட்டைக் கொண்டாட்டமாக எண்ணி வழிபடும் எண்ணம் சிலரிடம் உண்டு. அவசியமான சாந்தியை அலட்சியப்படுத்தும் போக்கு துரதிர்ஷ்டமானது. என்னை அணுகினால், காலத்தை நீட்டித் தருவேன் என்ற எண்ணத்தோடு தேவதைகள் இருக்கும்போது, அதை அலட்சியப்படுத்துவது நமக்கு இழப்பு. பூஜை, வழிபாடுகளால் மனத்தை திசை திருப்பி, நல்ல சிந்தனையில் ஆரோக்கியத்தை தக்கவைக்கும் தருணத்தை, மக்கள் மனம் ஏனோ அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தவறான தகவல்கள்- மனத்தை ஈர்க்கும் விளக்கங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கடவுள்தான் நல்லெண்ணத்தை வரவழைத்து அருள்புரிய வேண்டும்.

1 comment: