jaga flash news

Wednesday, 12 December 2012

வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?


வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?


வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும் ?
அயல் நாடுகளில் ஒருவருக்கு மிக சிறப்பான வேலை அமைந்து ,கைநிரைவாக வருமானம் பெற்று தனது தாய் நாட்டில் வாழும் , தனதுஉறவுகளின் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று தனதுவாழ்க்கையை பணயம் வைத்து கடும் உழைப்பால், முன்னேற்றம்அடைந்து தானும் நன்றாக  வாழ்ந்து, தன்னை சார்ந்தவர்களையும்நன்றாக வாழ வைக்கும் ஜாதக நிலைகளை பற்றி கொஞ்சம் ஆய்வுசெய்வோம் !

 6  ம்  வீடு

முதலில் வெளி நாடு செல்வதற்கு ஒரு ஜாதகத்தில் ஆறாம் வீடு சரராசியாகவோ( மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்) , ஸ்திர ராசியாகவோ( ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்) அமைந்து, ஆறாம் பாவகம்  100 சதவிகிதம் நன்றாக அமைந்து அந்த ராசி மண் தத்துவம் (ரிஷபம்,கன்னி, மகரம்) அல்லது நீர்தத்துவம் (கடகம், விருச்சிகம். மீனம்) அமைப்பை பெற்று இருக்குமாயின் ஜாதகருக்கு வெளிநாடுசெல்வதற்கு , எந்தவித தடைகளும் ஏற்ப்படாமல் பயணம்மேற்கொள்ள வசதி வாய்ப்புகளை நிச்சயம் வழங்கும் , பயணங்களில்எந்தவிதமான உடல் தொந்தரவுகளோ அல்லது சட்ட சிக்கல்களோஏற்ப்படாமல், இனிமை நிரந்த பயணமாக அமையும் .

மேலும் மற்ற நாடுகளில் உள்ள உணவு வகைகளை ஏற்றுகொள்ளும்உடல் அமைப்பு , சீதோசன நிலையை ஏற்றுகொள்ளும் உடல்அமைப்பு , வெளிநாடுகளில் வாழும் மக்களின் முழு ஆதரவுஅவர்களின் ஒத்துழைப்பு என, பல விஷயங்களை நல்ல முறையில்அமைய நிச்சயம் இந்த  ம்  வீடு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் .

  8  
ம் வீடு

இரண்டாவது ஜாதகர் வெளிநாடு வந்தாகிவிட்டது, தான் வேலைசெய்யும் இடத்தில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் , தனது மேல்அதிகாரியின் உதவியும் , தான் தங்கும் இடத்தின் தன்மையும் , அங்கேஅமையும் சிறப்பான வசதிகளும்.

 பணியில் விரைவான முன்னேற்றமும், பயணம் செய்ய நல்ல வாகனவசதியும் , பயணம் செய்யும் காலங்களில் எவ்வித பாதிப்பையும்தராத நிலையும் ஜாதகருக்கு அமைய வேண்டுமெனில் ஜாதகத்தில் ம் வீடு சர ராசியாகவோ( மேஷம்கடகம்துலாம்மகரம் ஆகியவை சர ராசிகளாகும்) , ஸ்திர ராசியாகவோரிஷபம்சிம்மம்விருச்சிகம்கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்) இருந்து 100  சதவிகிதம்நன்றாக 
அமைந்து .

  8  ம் வீடு மண் தத்துவம்(ரிஷபம்,கன்னிமகரம்)  அல்லது நீர் தத்துவம்(கடகம்விருச்சிகம்மீனம்)  அமைப்பை பெற்றுஇருக்க வேண்டும் . மேலும் ஜாதகருக்கு கேளிக்கைகள் , விளையாட்டு, நல்ல பொழுது போக்கு அமைய வேண்டும் எனில் இந்த  ம் வீடு 100சதவிகிதம் நன்றாக இருப்பது நலம் தரும் .

 12  
ம் வீடு

முன்றாவதாக ஜாதகர் வெளிநாடு சென்று ஒரு நல்ல வேளையில்அமர்ந்து , அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் யோகத்தைபெற்றாகி விட்டது , சரி இனி ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தும் தனதுசந்ததியினருக்கும் சேமித்து பாதுகாக்கும் தன்மை , அந்தநாட்டு குடிஉரிமையை பெறுவதில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலை .

 வெளிநாடு செல்லும் பொழுதும் , வரும்பொழுதும் பாதுகாப்பானபயணம் , வெளிநாடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்குநிம்மதியான வாழ்க்கை , அங்கேயே ஒரு நல்ல வாழ்க்கைதுணையை அமைத்து கொள்ளும் தன்மை , நல்ல உணவு , தாய்நாட்டில் இருப்பவர்களால் எவ்வித தொல்லையும் அற்ற நிலை ,நிரந்தர வேலை , அந்த வேலையில் ஜாதகரின் ஈடுபாடு அதனால்ஜாதகருக்கு ஏற்ப்படும் முன்னேற்றம் , நல்ல ஆடை  ஆபரணசேர்க்கை , நல்ல சுக போகங்களை அனுபவிக்கும் யோகம்அனைத்தையும் ஜாதகருக்கு அளிப்பது 12  ம் பாவகமே , அதற்க்குஇந்த 12  ம் வீடு  சர ( மேஷம்கடகம்துலாம்மகரம் ஆகியவை சர ராசிகளாகும்)அல்லது  ஸ்திர( ரிஷபம்சிம்மம்விருச்சிகம்கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்)

ராசியாக வந்து , மண் (ரிஷபம்,கன்னிமகரம்)அல்லது நீர்தத்துவத்தை(கடகம்விருச்சிகம்மீனம்)  பெற்று 100  சதவிகிதம் நன்றாக இருப்பது அவசியம் .

மேற்கண்ட அமைப்பை பெற்று ஜாதகருக்கு லக்கினம் நன்றாகஇருந்து நடக்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் 6  8  12  வீடுகளின்பலனை நடத்துமாயின் ஜாதகர் நிச்சயம் வெளிநாடுகளில் சகலயோகத்தையும் அனுபவிக்கும் தன்மையை தடையில்லாமல்நிச்சயம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை .







மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்
உபயம்: உபய ராசியில் ஜெனித்த ஜாகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7ம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உண்டாகும். உடல் உபாதையும் நோயும் ஏற்படும். அதே சமயத்தில் மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புண்டு.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.
ஸ்திரம்: ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9ம் இட அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்று பெறாமல் தடை உண்டாகும்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
சரம்: சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அவன் தசை காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். இந்த பலன்கள் ஏற்படாமல் செல்வம் போன்ற யோக பலன்களை அளித்தாலும் வியாதிகளை உண்டாக்குவான். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள் அழியலாம். எனினும் லாப ஸ்தானாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களையே தருவார்
ஜலராசிகள்(Watery Signs)
கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful Signs என்றும் சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்.
காற்று ராசி (Airy sign)
நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர் கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.
நிலராசி (Earthy Signs)
ரிஷபம்,கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத் தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.
நெருப்பு ராசி (Fiery Signs)
மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை லக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

No comments:

Post a Comment