jaga flash news

Sunday, 9 December 2012

முக அமைப்புக்கேற்ப பொட்டு வைத்து அசத்துவது எப்படி????


முக அமைப்புக்கேற்ப பொட்டு வைத்து அசத்துவது எப்படி????


பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும். ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர்.
நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள்.
* வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும்.இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.
* இதய வடிவ முகம் கொண்டவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.
* ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
* சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
* முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

No comments:

Post a Comment