jaga flash news

Wednesday, 19 December 2012

விவாகரத்தை ஏற்படுத்தும் கிரகநிலைகள்


 விவாகரத்தை ஏற்படுத்தும் கிரகநிலைகள்


வணக்கம் நண்பர்களே ஒருவருக்கு விவாகரத்தை ஏற்படுத்தும் கிரகநிலைகள்   பற்றி இப்பதிவில் பார்ப்போம். 
ஏழாம் இடத்தில் பாவர் அமரும்போது திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
ஏழாம் அதிபர் ஆறாம் வீட்டில் சம்பந்தபட்டால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
ஏழாம் வீட்டில் சந்திரன் இருக்க அதை பாவர்கள் பார்த்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
ஒரு பெண் ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்து அதை பாவிகள் பார்த்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
ஏழாம் இடத்து அதிபனும் சுக்கிரனும் அஸ்தமனமாகி பாவர் பார்வை பட்டால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும்.
மேஷ லக்கனத்தை கொண்டவர்களுக்கு துலாத்தில் சூரியன் அமர்ந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
ரிஷபத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு எட்டில் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
மிதுனத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழில் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
கடகத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழில் சனி இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
சிம்மத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு எட்டாம் வீட்டில் சனி இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
கன்னியை லக்கனமாக கொண்டவர்களுக்கு எட்டில் குரு இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
துலாத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு எட்டில் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
விருட்ச்சிக லக்கனமாக கொண்டவர்களுக்கு சுக்கிரன் எட்டில் அமர்ந்து அதை பாவிகள் பார்க்க திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
தனுசுயை லக்கனமாக கொண்டவர்களுக்கு எட்டில் புதன் இருந்து அதை பாவிகள் பார்க்க திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
மகரத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழில் செவ்வாய் அமர்நது அதனுடன் தீயகிரகங்கள் இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
கும்பத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழில் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
மீனத்தை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழில் தீயகிரகங்கள் இருந்தால் திருமண வாழ்வில் பிரிவு ஏற்படும்.
மேலே சொன்னது அனைத்தும் பொதுவிதிகளே யாரும் பயம்கொள்ள தேவையில்லை.

No comments:

Post a Comment