அமிர்தயோகம்
திருமண நிகழ்ச்சிகள் சில நல்ல
யோகங்களில் நடத்தினால் திருமண தம்பதிகள் நீண்ட காலம் வாழ்வார்கள். இந்த
யோகங்களில் அமிர்தயோகம் சிறந்த யோகமாக இருக்கும் இதில் நீங்கள் திருமணத்தை
நடத்தலாம்.
ஞாயிற்றுக்கிழமையில் உத்திரம்,ஹஸ்தம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகம்.
திங்கள்கிழமையில் ரோகினி, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சுவாதி திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் வ்ந்தால் அமிர்தயோகமாகும்.
செவ்வாய்கிழமையில் ரோகினி, உத்திரம், மூலம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகமாகும்.
புதன்கிழமையில் கார்த்திகை,பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகம.
வியாழக்கிழமையில்அசுவினி, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்த யோகமாகும்.
வெள்ளிக்கிழமையில் அசுவினி, ஹஸ்தம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்த யோகமாகும்.
சனிக்கிழமையில் கார்த்திகை, ரோகிணி, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரம் வந்தால் அமிர்தயோகமாகும்.
இதை நீங்கள் காலாண்டர் மற்றும் பஞ்சாங்கதிலும் பார்த்து
தெரிந்துக்கொள்ளலாம் உங்களின் வசதிக்காக இதை தருகிறேன். அமிர்தயோகமாக
பார்த்து திருமண தேதியை குறித்துக்கொடுங்கள். தம்பதிகளில் நீண்ட காலம்
வாழ்வார்கள்.
No comments:
Post a Comment