jaga flash news

Tuesday, 18 December 2012

SEPTIC TANK


கழிவு தொட்டி - SEPTIC TANK


வடமேற்கு உகந்தது.
இரண்டாவது பட்சமாக மேற்கு திசையில் வைக்கலாம்.


பெருநகரங்களில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு டிரைனேஜ் வசதி இருக்கிறது. கிராமப் பகுதிகளில் டிரைனேஜ் வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீர் தேங்குவதற்காக செப்டிங் டேங்க் அமைக்கிறார்கள் அந்த செப்டிக் டேங்கானது எந்த இடத்தில் அமைத்தால் சிறப்பு என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே வடமேற்கு, மேற்கு ஒட்டிய வடக்கு, வடக்கு ஒட்டிய மேற்கு தென்கிழக்கு, தெற்கு ஒட்டிய கிழக்கு, கிழக்கு ஒட்டிய தெற்கு ஆகிய திசைகளில் உள்ள பகுதிகளில் செப்டக் டேங்க் அமைக்கலாம் வடகிழக்குப் பகுதியில் நீரோட்டம் இருப்பது நல்லது என்றாலும், ஈசான்ய மூலை என்பதால் கழிவுநீர் தேங்குவது நல்லதல்ல. அதனால் வடகிழக்குப் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது. ஒரு மனையில் தென்மேற்குப் பகுதியில் பள்ளம் இருக்க கூடாது என்ற காரணத்தாலும் செல்வத்தை குவிக்கும் உன்னத ஸ்தானம் தென்மேற்கு ஸ்தானம் என்பதாலும், தென்மேற்கில் செப்டிக் டேங்க் அமைக் கூடாது.

ஒரு மனையில் உள்ள நுழையும் தலைவாசல் பகுதியல் நடைபாதைக்கு கீழே செப்டிக்டேங்க் கழிவுநீர் தேங்கும் சேம்பர், கழிவுநீர் குழாய் அமைவது கண்டிப்பாக கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் கழிவுநீர் குழாய் மட்டும் அமைவது தவறல்ல.

No comments:

Post a Comment