jaga flash news

Wednesday, 5 December 2012

செட்டிநாடு சிக்கன் பிரியாணி


செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
 



தேவையான பொருட்கள்
  • அரிசி – 1 /2 கிலோ
  • சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
  • கொத்தமல்லி – 1 /2 கட்டு
  • புதினா – 1  கட்டு
  • பச்சை மிளகாய் – 4
  • வெங்காயம் – 250  கிராம்
  • தக்காளி – 250  கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது – 50  கிராம்
  • தயிர் – 1 /2 ஆழாக்கு
  • எண்ணெய் – 1  குழிக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • கடற்பாசி – 1 /2  தேக்கரண்டி
  • பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 4  தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம் மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
  2. பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  5. சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
  6. ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
  8. பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
  9. பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.
குறிப்பு
  1. சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
  2. தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்.

Monday, 3 December 2012

How to wash car by hand?


How to wash car by hand?
  • 1. Park the car out of direct sunlight. This prevents premature drying which can leave splotches on the paint.

  • 2. Set everything you will need near the car.

  • 3. Fill a bucket with water and add car wash soap in the quantity directed on its bottle.

  • 4. Fill another bucket with plain water.

  • 5. Hose off the car to loosen the dirt. Don't use a strong jet, as this can rub grit over the paint and scratch it.

  • 6. Soak a large wash mitt or sponge in the soapy water, being certain to wash out any dirt in it, and begin applying it to the car.

  • 7. Wash the car section by section, starting at the top. Circle around the car several times, washing lower areas with each round.

  • 8. Rinse frequently the dirt out of the wash mitt or sponge in the bucket with plain water.

  • 9. After one section is washed, rinse it with the hose before moving on. You don't want the soap to dry on the paint and stain it.

  • 10. As you progress, keep the entire car wet, as this will prevent droplets from drying on the paint and leaving water-spots. You want to be able to dry the car with towels before it air-dries.

  • 11. Scrub the lower body and the wheels last, as these are the dirtiest, grittiest parts. It's a good idea to use a seperate wash mitt or sponge on the bottom six or so inches of the car's body, as this can get especially gritty. Use a long, skinny wheel-brush for cleaning the openings of the wheels, and steel-wool soap-pads on the tires, one or two per tire; remove all that dull-brown oxidized rubber.

  • 12. Dry the vehicle with fresh towels.

  • 13. If bug, tar or sap residue remain, remove it using the procedure to: Remove Bugs, Tar, and Sap from Your Car.

  • Steps to do car Exterior Detailing. 

  • First clean the wheels and tyres well with water

  • Get rid off the dust, dirt and wax residue from the wheels

  • Then, consider the scratches on the car paint and carefully sand them with wet or dry grit

  • Wash cars under shade or in cooler temperature, preferably during early morning or late afternoon. Direct sunlight can cause severe damage to car polish and wax

  • Always use a formulated car wash or a mild detergent to wash cars

  • Use a 100% terry cloth to clean the car and rub off the dirt from the exterior panel

  • Indulge a habit of spraying water to the car everyday

  • Rinse the car well after applying soap or car wash or else the soap will dry on the car paint and spoil the look

  • While washing the car windows, don’t neglect the edges. Let the car dry completely before rolling down the window

  • Ensure that there is no accumulation of wax between the panels

  • License plate if often ignored while cleaning a car. Gently scrap out the bug and tar residue from the plate

  • There is incredible amount of bug accumulation on the rear mirror. Clean those using glass cleaners.

  • Use a separate towel to remove the dirt from the gas cap

  • Use a clean polish to remove any kind of contaminants and then wax the car

  • After the car dries completely, clean the headlights bucket

  • Wash the car at least once a week to keep the harmful elements like dirt, dust, spills and rain acid away.

  • Steps to do Car Interior Detailing
  • Vacuum the carpets, mats and upholstery to clean them. Wash them using a mild shampoo and warm water. Let them dry in sun

  • Use wet vacuum on the car seats to remove stains and refresh the look

  • Remove small scratches from dashboard, door panel and speedometer

  • Scrap off the dust and fingerprints from the music instrument using a blow dryer or anything that can blow pressurised air

  • Vacuum the side pockets and clean off the dirt with a damp cloth

  • Use a separate cloth to clean the interior car moldings

  • Wash and clean the glass well with water or using glass cleaners

  • Treat vinyl areas like dashboard and door panel with conditioner so as to keep vinyl pliable.
  • ஏழரை சனிக்கு என்ன பரிகாரம்..?

    ஏழரை சனிக்கு என்ன பரிகாரம்..?

    காலம் காலமா இருக்குற பரிகாரம்....சனியை காக்கா பிடிக்க காக்காவுக்கு சோறு வைங்க!!!

    வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது ஏன்?


    வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது ஏன்?
    Temple images
    தன் ஊரில் கிழக்கேயும், வேற்று ஊரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக இந்த நியதி சாஸ்திரங்களிலும் காணப்படுகிறது. ஆனால், தெற்கே தலை வைத்துப் படுப்பது, சில இடங்களில் காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. இது வீட்டுக்கு ஆகாது என்று சொல்வர். வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமுண்டு இதனால் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது, ரத்த ஓட்டம் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும் மூளை பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். திசை காட்டும் கருவியின் முள் வடக்கு நோக்கி திசை காட்டுவது, அந்த திசையின் காந்த சக்தியால் தான்.
    தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.

    வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா?


    வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா?
    Temple images
    நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது. பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
    கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    கலியுகம் எப்போது முடியும்?


    கலியுகம் எப்போது முடியும்?
    Temple images
    கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

    கண்கள் துடித்தால் யாருக்கு கேடு?


    கண்கள் துடித்தால் யாருக்கு கேடு?
    Temple images
    இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். ஆண்களுக்கு வலதுகண் துடித்தால் நல்லது என்பர்.

    கண்திருஷ்டி உண்மையா?


    கண்திருஷ்டி உண்மையா?
    Temple images
    உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லக் காரணம் கண்கள் தான். நேர்மையானவர்கள் மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவர். ஆனால், பொய் சொல்பவர்கள் நேருக்கு நேர் பேசத் தயங்குவர். அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியே மற்றவருக்குப் பரவுகின்றன. இதில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது பொறாமை. அதையே கண்திருஷ்டி என்கிறார்கள்.
    குழந்தைகள் தவறு செய்து விட்டு விழித்தால், முழிக்கிற முழியைப் பாரு என்று சொல்வது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இவன் முழியே சரியில்லே என்று காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காணுகின்றனர். பிறந்த குழந்தையை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றவே கருஞ்சாந்துப் பொட்டு வைப்பர். கட்டடங்கள் எழுப்பும்போது பூதம் போன்ற பொம்மை வைப்பதும் திருஷ்டியிலிருந்து தப்புவதற்குத் தான். கிராமப்புறங்களில் திருஷ்டி கழிக்க உப்பையும், மிளகாயையும் சேர்த்து தலையைச் சுற்றி நெருப்பில் போடுவது வழக்கம். வியாபார நிறுவனங்களில் செவ்வாய், வெள்ளி தேங்காய் உடைப்பதும் திருஷ்டிக்காகவே. உக்ர தெய்வங்களான காளி, நரசிம்மர், துர்க்கை போன்ற தெய்வ வழிபாடு செய்யும் இடங்களில் மட்டும் திருஷ்டிதோஷம் இருப்பதில்லை. தற்போது கண்திருஷ்டி கணபதி வழிபாடு பெருகியுள்ளது.

    இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?


    இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?
    Temple images
    இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

    பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?


    பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?


    +
    Temple images
    பெண்குழந்தைக்கு ஏழுவயதுக்குள் முடியிறக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். முடியாத பட்சத்தில் ஒன்பது வயதுவரை செய்யலாம். அதற்குப்பிறகு பெண்கள் முடியிறக்குவது கூடாது. அதுவும் திருமணமான பெண்கள், சுமங்கலிகள் என்ற பெயர் பெற்று விடுவதால் கண்டிப்பாக முடியிறக்கக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகிறது.