jaga flash news

Friday, 30 November 2012

புத்தாண்டு பலன் ரிஷபம் ராசி 2013 ரிஷபம்


ரிஷப ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் ரிஷபம் ராசி 2013 | rishaba rasi 2013
ரிஷபம்:
கிருத்திகை(2,3&4); ரோகிணி;மிருகஸ்ரீஷம ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
[சாதகமான காலம்:--ஆண்டின் துவக்கம் முடஹ்ல் 30.1.2013 வரையிலான  குருவின் வக்கிர சஞ்சார காலம். மற்றும் 27.5.2013 முதம் 7.11.2013 வரையிலான குருவின் 2-மிட சஞ்சாரம். சனி மற்றும் ராகுவின் சஞ்சாரங்களும் யோகமானவையே.
அனுகூலமற்ற காலம்:–31.1.2013. முதல் 26.5.2013 வரையிலான குருவின் ஜென்ம சஞ்சாரம். மற்றும் 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரையிலான குரு வக்கிர நிலை. கேதுவின் 12-மிட சஞ்சாரமும் சாதகமற்றது.
ஆண்டின் தொடக்கத்தில் 30.1.2013 வரை குரு வக்கிர சஞ்சாரத்தில் ருக்கிறார். அதோடு   மற்ற மாதக் கிரக சஞ்சாரங்களும்   துணையாக இருப்பதால் உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. எதிர்ப்படும் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு சாமர்த்தியமாய் நஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்த்திடுவீர்கள். மகன் மகளால் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதியடையும். வருமானம் பெருகினும் செலவுகளும் கூடும். மன இறுக்கம்  நீங்கி புதிய தெம்புடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் நோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்தவர்கள் குணமடந்து வீடு திரும்புவர். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த மனக் கசப்புகள் மாறும். குடும்பச் சடங்குகள் ,தெய்வ ஆராதனைகள், திருமண வைபவங்கள் நிகழும். பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம்  கையில் சரளமாகப் புரளும். கூட்டுத் தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.
இனி 31.1.2013 முதல் 26.5.2013 வரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்  குரு அவ்வளவு நற்பலன்களைத் தரமாட்டார்.  ஆனல்,  இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும் ஆண்டாக இருக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்,நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்ன?குரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2013- மே மாதம் 27-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால்  வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 26–ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம குருவின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். மே மாதம் 27-ம் தேதியில் குரு சாதகமாவது மட்டுமில்லாமல் , சனி, ராகு ஆகிய கிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
ஆண்டின் முற்பாதியில் குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள்.  பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சிகாண முடியும். மேற்படிப்பு நினைத்தவண்ணம் அமையாது. வேலை கிடைக்காமலும் கஷ்டப்படநேரும். நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் தடைப்படும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.  உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும்.  உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.  யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப்போட்டு அந்தப் பணத்தை நீங்கள் கட்டச் சொல்லி தீர்ப்பு வரும்.  பூர்வீகச் சொத்தில் இழுபறி  தொடரும்.  தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்குட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கள் ஏற்படும். உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவநம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்துகொள்ளும். ஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் ,சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய் கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும். எனவே கடன், கைமாற்று, இவற்றை  சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும். சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்ரும். பிள்ளைகளாலும் கவலை ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும்.
கேதுவின் 12-மிட சஞ்சாரமும் தொல்லை  தருவதாகவே அமையும். பண விரயம், பொருள் நஷடம் இவைகளைத் தவிர்க்க முடியாது. கணவன்-மனைவி உறவு சண்டை சச்சரவாகவே இருக்கும். வீண் அலைச்சல் மிகும். எந்த லாபமும் தராத பயணங்களை மேற்கொண்டு உடல் தளர்ச்சியடைவதுதான் மிச்சம். சரியான உறக்கமின்றி ரத்த அழுத்தம் அதிகமாகும். நிம்மதியற்ற சூழ்நிலையில் அல்லாட வேண்டியிருக்கும். சாது, சந்நியாசிகளின் சாபத்துக்கு ஆளாக வேண்டிவரும். சிலருக்கு பயணங்களின்போது கைப்பொருள் களவு போகும். தவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சிறை செல்லவும் கூடும்.
ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 26 வரைதான்.
மே 27-2013-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி  குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகும்.  பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வந்து மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும்  திருமண யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில்- வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வீடு,மனை என்று சொத்து வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். ரிப்பேர் செலவு வைத்துக்கொண்டிருந்த வாகனங்களை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் வெற்றி பெற்று, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.  திரைப்படத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் உண்டாகும். விவசாயிகள் நல்ல லாபம் காண்பார்கள்.
இது மட்டுமின்றி , ஆண்டு முழுவதும் சனிபகவானின் 6-மிடத்து சஞ்சாரமும் நல்ல பலன்களைக் கொடுக்கும். துலா ராசியில் உச்ச சனியாக சஞ்சரித்து உங்களுக்கு பலவித யோகங்களுக்கு  சனி பகவான் வழிகாட்டுவார். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் ஒரு சேர நிகழ்ந்து உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். அதுபோலவே ராகுவின் 6-மிடத்து சஞ்சாரமும் ,தான் நிற்கும் இடத்தில் சேர்ந்திருக்கும்  சனிபகவானுடன் சேர்ந்து சனி பகவான் தரும் நற்பலன்களையே வாரிவழங்கும்.
ஆண்டின் இறுதியான 8.11.2013 முதல் ஆண்டின் இறுதிவரைலான குருவின் வக்கிர சஞ்சார காலத்தில் உங்களுக்கு நற்பலன் நிகழ வாய்ப்பில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கும். சிலருக்கு உடல் நலத்தில் சின்னச் சின்ன தொந்தரவுகள் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளும், வீண் குழப்பங்களும், வம்புகளும் என்று ஏதாவது தொல்லை  இருந்துகொண்டிருக்கும்.  26.5.2013 முன்பு  4 மாத காலங்களுக்கு   ஜென்ம ராசியில் நடந்த குருவின்  சஞ்சாரத்தின்போது இருந்தது போல் அத்தனை கஷ்டங்களும் இருக்கும். சில விஷயங்கள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகும். குடும்ப அமைதி காணாமல் போய் சண்டை  சச்சரவுகள் மிகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி தராது. வண்டி வாகனங்களுக்கு ரிப்பேர் செலவு வரும். வேண்டாத வழக்குகளிலும் சிக்கிக்கொள்ள நேரும்.  சனி பகவான் உச்ச நிலையில் 6-மிடத்தில் சஞ்சரிப்பதாலும் அவருக்கு குரு பார்வை கிடைப்பதும்  தொல்லைகளை பெருமளவுக்கு குறைக்கும்.
இப்படியாக ஆண்டின் முற்பகுதியில்  சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத இறுதியில்  வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு  இனிய குரு பெயர்ச்சியினாலும், -ராகு  இவர்களின் சாதகமான சஞ்சாரத்தாலும் இனிமை தரும் நல்லாண்டாகும்.
பரிகாரம்:
உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில்  ஒரு முறை  மிருத்யஞ்ச்சய  ஹோமமோ அல்லது ஆயுஷ் ஹோமமோ செய்யுங்கள். ஆதித்ய ஹிருத்யம்  தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகரை வழிபாடு செய்வதுடன் வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்யவும். ஆண்டின் முற்பாதிவரை குருவின் சஞ்சாரம் சரியில்லாததால வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்திக்கு மஞ்சள் மலர் மாலையும் கொண்டக்கடலை மாலையும் அணிவித்து வழிபடவும்.  உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.
வாழ்க பல்லாண்டு!சிறக்கட்டும் புத்தாண்டு!

புத்தாண்டு பலன்கள்: மீனம்


மீன ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் மீனம் ராசி 2013 | Meena rasi 2013
2013 மீன ராசி
2013 மீன ராசி
புத்தாண்டு பலன்கள்:
    மீனம்:
 பூரட்டாதி(4),உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
              [சாதகமான காலம்:-- குருவின் வக்கிர சஞ்சார காலமான ஆண்டின் துவக்கம் முதல் அதாவது 1.1.2013 முதல் 30.1.2013 வரையும் குருவின் 4-மிட சஞ்சாரமான 27. 5.2013 வரையும் .
           சாதகமற்ற காலம்:--குருவின் 3-மிட சஞ்சார காலமான 31.1.2013 முதல் 26.5.2013 வரையும் ஆண்டின் இறுதியான 8.11.2013  முதல் ஆண்டின் இறுதிவரையும்.  மற்றும் சனி,ராகு மற்றும் கேது சஞ்சாரங்கள் சாதகமில்லை. ]
                           இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-மிடத்தில் சஞ்சரிக்கிறார்.  குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 26-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள்  ராசிக்கு 8, 2 -ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
                 ஆண்டின் துவக்கமான 1.1.2013 முதல் 30.1.2013 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்தபடி வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.  கிரக நிலவரங்கள் சாதகமான இடங்களில் காணப்பட்டு வருவதால், வருஷ ஆரம்பமே மிக மிக சிறப்பாகவும் யோகமாகவும் காணப்பட்டு வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் ,மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் தாமதங்கள் அனைத்தும் விலகிவிடும். சுப நிகழ்ச்சிகள் நடக்கறதுக்கும் வாய்ப்பு உள்ளது. தொட்டது துலங்கும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டம், மனக் கஷ்டம் இரண்டுமே  நீங்கிவிடும். உங்களது உடல்நலத்தில் இருந்துவந்த தொந்தரவுகள் நிவர்த்தியாகி நல்ல ஆரோக்கியம் காணப்படும். உங்களது நீண்ட நாளைய முயற்சிகளுக்குக்க்கூட இப்போது பலன் கிடைக்கும். ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றியடைய முடியும். வேலை இல்லாதவர்களுக்கு இப்போது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் இப்போது புதிய தொழில் ,வியாபாரம் தொடங்கலாம். வரவேண்டிய பணம் உடனடியாக கைக்கு வரும்.
                                   இனி வக்கிர நிவர்த்தியாகும்  குரு 31.1.2013 முதல் 26.5. 2013 வரை  உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனை  சாதகமற்ற சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. குடும்பத்திற்காக  நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக  தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நலம் குறையும் . முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள்  தங்கள்  கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின்  கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன்  வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
                சனி, ராகு மற்றும் கேதுவின்  சஞ்சாரங்களும் சாதகமாக இல்லை . இனி  பலன்களைப் பார்க்கலாம்.  பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக் கொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன்  காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குரிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தின்ப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும்.
                     இந்த் சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம் உண்டாகும். . கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு  நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள்  ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
                               புத்திரர்கள் சம்பந்தமான நற்காரியங்கள் சிறிது தாமதமாக நடந்தேறும். அஷ்டம சனி உறவினர்களிடையே பகையை வளர்க்கும். சம்பந்திகளிடையே தேவையற்ற மனத்தாங்கல்கள் வரும். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் பல விஷயங்களில் மனக்கஷ்டம் உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி வகையில் அடிக்கடி பிரிவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரக நிலைகளை அனுசரித்து நடந்துகொண்டால், விதியை மதியால் வெல்லலாம். நிலம், வீடு வாங்கும் விஷயங்களை தள்ளிப்போடுவது ந்ல்லது. கடன், நோய் ஏற்படும். உங்களுக்கு சொந்தமான மூதாதையர் நிலங்கள் உறவினர்களிடம் பறிபோக உள்ளது. ஆரோக்கியக் குறை ஏற்படலாம். சனிக்கு குரு பார்வை கிடைப்பதால், பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  கடன் வாங்கி கடன்காரனாகவும் ஆவீர்கள். நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள்.
                        ஆண்டின் பிற்பகுதியில் மே மாதம்  27-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார்.  சாதாரணமாகப் பார்த்தோமானால், 4-மிடத்தில் குரு நற்பலன்களை வழங்குவதில்லை. ஆனால் , தற்போது இந்த சஞ்சாரத்தில் ஏனைய கிரக சஞ்சாரங்களாலும், குரு பார்வையினாலும் இந்த சஞ்சாரத்தில் உங்களுக்கு நற்பலன்களை வழங்கப் போகிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள்  கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.  அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன்மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம். இந்த நற்பலன்கள் குருவின் 4-ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நிகழ்ந்து 7.11.2013 வரையில் முடிவடையும்.
                  குரு  நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல்  ஆண்டின் இறுதிவரை , வக்கிரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள்  ஏற்படும்.  கல்வியில்  சில தடைகள் உண்டாகலாம்.  மருத்துவச் செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தொலைதூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  குருவின் வக்கிர பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. முக்கிய விஷயங்களை தள்ளிப் போட்டீர்களால் பிரச்சினைகள் குறையும்.
 பரிகாரம்:
ஆண்டு  முற்பகுதியில் குரு  3-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. .தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி அஷ்டமசனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  8-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை  தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவ்ன் 2-ம் இடம் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். கோவிலை சுத்தம் செய்து வணங்கவும் . கொள்ளு தானம் செய்யவும்.
     இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் அமைந்த சாதகமான குரு சஞ்சாரம் உங்களைக் காப்பாற்றும்.
               வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.

தினசரி 6000 அடி நடங்க ஆரோக்கியமா இருக்கலாம்!


தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
walk 6 000 steps daily a healthier life
பெண்கள் மெனோபாஸ் பருவத்தை எட்டிய உடனே நீரிழிவு தொடங்கி இதயநோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து குடியேறிவிடுகின்றன. உடல் நோய்களோடு மனஅழுத்தமும் சேர்ந்து பெண்களை பாடாய் படுத்திவிடும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மெனோபாஸ் காலத்தை எட்டிய பெண்களின் நலனுக்காக பிரேசில் நாட்டில் நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 45 வயது முதல் 72 வயதுடைய 292 பெண்கள் பங்கேற்றனர். அவர்களின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அடி வயிறு கொழுப்பு, ரத்த சர்க்கரை ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் ஆய்வில் பங்கேற்ற பெண்களை தினசரி 6 ஆயிரம் அடிகள் நடக்குமாறு பணிகள் கொடுக்கப்பட்டன.
4 வாரங்களுக்குப் பின்னர் அவர்களின் உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்களான நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் பாதிப்பு ஏற்படுவது குறைந்து இருந்தது. அவர்களின் ஹார்மோன் சுரப்பும் சீராக இருந்தது தெரியவந்தது.
இதன்மூலம் நன்றாக நடந்து ஓடி ஆடி வேலைபார்க்கும் பெண்களுக்கு நோய்கள் ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உட்கார்ந்த நிலையிலேயே இருக்கும் பெண்களுக்குத்தான் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே தினசரி 6000 அடி நடப்பவர்கள் நோய்களில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

Thursday, 29 November 2012

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..
கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

மேஷம்,மீனம்,ரிஷபம்,கன்னி

மேஷம்,
02.12.2012  முதல் 20.06.2014  வரை
அசுவதி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
60/100
சுற்றும் கேது வருவதனால் சுப விரயங்கள் உருவாகும்!  
எந்த ஒரு காரியத்திற்கும் ஆலோசனை கூறுவதில் வல்லவர்களாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் மிகுந்த பலம் பெற்ற கிரகமாக விளங்குவதுதான் உங்கள் ராசி நாதனான செவ்வாய். எனவே தைரியம் உங்கள் உடன்பிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை உங்கள் உயிர்மூச்சாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வரை உங்களுக்குத் தூக்கமே வராது.
பிரயாணங்களில் அதிகம் பிரியம் வைப்பவர்கள் நீங்கள். உழைப்பின் மேல் நீங்கள் அதிக அக்கறை செலுத்துவதால்தான் இழப்புகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.
அவசரமும், படபடப்பும் உங்களை அண்டியிருக்கும் பொழுது ஆதரவுக் கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை குறையும். எனவே நிதானத்துடன் செயலாற்ற நீங்கள் கற்றுக்கொண்டால் நிலையான எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக்கொள்ள இயலும். உங்களுக்கு அஷ்டமாதிபதியாகவும் செவ்வாயின் வீடு அமைவதால், தனக்குத்தானே எதிரியாகும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உண்டு.
எனவே முன்கோபத்தை விட்டுவிட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் விதத்தில் அன்பாகப் பேசிக் காரியம் சாதிக்கக் கற்றுக்கொண்டால் அகில உலகத்திலும் உங்களுக்கு இணை யாருமில்லை. உங்களுக்கு இந்த ராகு–கேதுப் பெயர்ச்சி எப்படியெல்லாம் மாற்றத்தைக் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வந்த கேதுவிற்கு வழிபாடு தேவை!
சப்தம ராகுவிற்கு சுவாமி துணை தேவை!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான் வெளிப் பயணத்தில் 2.12.2012 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிவகுக்கப் போகிறார்கள். தேடி வந்த கேதுவைத் திருப்திப்படுத்த வந்த அன்றே வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இல்லையேல் வந்த முப்பது நாட்களுக்குள் உங்களுக்கு அனுகூலம் தரும் நட்சத்திரம் மற்றும் நாள் பார்த்து, யோகபலம் பெற்ற நேரத்தில் சர்ப்ப சாந்தி வழிபாடுகளை உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
ஜென்ம கேது சிறப்பான பலன்களை வழங்குமா? ஏழாமிடத்து ராகு இனிய பலன்களை கொடுக்குமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மேஷ கேது உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தில்தான் உணர்ந்து கொள்வீர்கள். ஏனென்றால் கேதுவிற்குரிய நட்சத்திரமான ‘‘அசுவதி’’ உங்கள் ராசியில்தானே இருக்கிறது. எனவே தன் பாதத்தில் அது சஞ்சரிக்கும் பொழுது ‘‘பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும்’’ இன்னும் பெருக வழிவகுக்கும்.
கேது ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல் நலம் சீராக இருக்குமா? என்று நீங்கள் நினைக்கலாம். பாம்புக் கிரகங்கள் ராசியில் சேரும் பொழுது, வீம்பு செய்பவர்களை விட்டு விலக வேண்டும். வெற்றிக்கு வழிகாட்டும் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பொழுதே ஆலோசனைகளை மருத்துவரிடம் பெற வேண்டும்.
‘‘ஞான காரகன்’’ எனப்படும் கேதுவைத் திருப்திப்படுத்த அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அனுதினமும் செல்ல இயலாவிட்டாலும்கூட வாரம் ஒருமுறை சென்று வழிபடலாம். நவக்கிரகத்தில் உள்ள கேதுவை வழிபடலாம். கேதுவிற்குரிய தெய்வமாக வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்யலாம்.
ஜென்ம கேதுவின் ஆதிக்கம் வரும்பொழுது, ஞானம் உங்களைத் தேடி வரும். அஞ்ஞானம் உங்களை விட்டு அகன்று ஓடும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்வீர்கள். நட்பிலும் சரி, உறவிலும் சரி பாசம் காட்டுபவர் யார், வேஷம் போடுபவர் யார் என்பதை இனம் கண்டு கொள்வீர்கள்.
இருப்பினும், நேசம் காட்டுபவர்கள்கூட இந்தக் கேதுவின் ஆதிக்கத்தால், ஒருசில சமயங்களில் பகையாக மாறலாம். பாதியில் சில பணிகள் நிற்கலாம். மோதிவந்த பிரச்சினை முற்றுப் பெறாமல் போகலாம். எனவே வாதிடுபவர்களைக் கண்டால் விலகிச் செல்லலாம். வம்பு செய்பவர்களைக் கண்டால் நெம்பு கோலாக மாறாமல் நீங்கள் விலகிச் செல்லுங்கள். பயணங்கள் அதிகரிக்கும். எனவே இந்த நேரத்தில் வாகன மாற்றம், வசிக்கும் இடத்தில் மாற்றம், வளர்ச்சி தரும் விதத்தில் அமையலாம்.  
வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகிறது என்று கவலைப்பட வேண்டாம். தர்ம காரியங்கள் செய்யும் அளவிற்குத் தனவரவைக் கொடுப்பவனும் கேதுதான். பெருமையோடு செலவழித்து வந்த நீங்கள் பேச்சிலும், செயலிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வைப்பவனும் கேதுதான்.
அந்தக் கேது உங்கள் சுயஜாதகத்தில் ஒரு இடத்தில் இருக்கலாம். உங்கள் மனைவி, மக்களுக்குக்கென்று உள்ள சுய ஜாதகத்தில் ஒரு இடத்தில் இருக்கலாம். அதில் உள்ள கேது மற்றும் ராகு எந்த நட்சத்திரக்காலில் இணைந்திருக்கிறார். எந்தெந்த கிரகங்கள் எல்லாம் அதைப் பார்க்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப அவர் நல்ல பலனை வாரி வழங்க உள்ளபடியே செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? எந்த ஸ்தலத்திற்கு சென்று வந்தால் வந்த துயரங்கள் மறுநிமிடமே விலகி ஓடும் என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்டு செயல்பட்டால் இந்த நேரம் இனிய நேரமாக அமையும்.
ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு இனிய பலன்களை ஏற்படுத்துமா?
ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் ஏழாமிடத்தில் தான் ராகு சஞ்சரிப்பார். ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் என்றும், குடும்ப ஸ்தானம் என்றும் சொல்லப்படும் இடமாகும். துலாமில் சஞ்சரிக்கும் ராகு தொல்லைகளைக் கொடுக்குமா, இல்லை நல்ல பலன்களை வாரி வழங்குமா? என்ற சிந்தனை உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும். அது சனியோடு இணைவதால் சராசரி மனிதனைக்கூட சக்கரவர்த்தியாக்கிவிடும் யோகம் உண்டு. பதவி உயர்வும், பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பும் உருவாகும்.
உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனியோடு அவர் இணைகின்றார். இடையில் 2013ம் ஆண்டு மே மாதம் குருவாலும் பார்க்கப்படப் போகிறார். எனவே கல்யாணக் கனவுகளை நனவாக்கி வைக்கும். களத்திர ஒற்றுமைக்கும் வித்திட வழிவகுக்கும். பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் ஆற்றல் சனிக்கு உண்டு. சனி உச்சம் பெறும் பொழுது அது நடைபெறும். அதுவும் சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெற்றால் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிட்டும்.
அந்த அமைப்பு உங்களுக்கு இப்பொழுது இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டு நடப்பர். கடுமையாக முயற்சித்த காரியங்கள் இனி எளிமையாக முடியும். வெளிநாட்டுப் போக்குவரத்தும் விரும்பும் விதத்தில் அமையும். வீடு கட்டவும் முடியவில்லை, வாங்கவும் முடியவில்லையே... வாழ்க்கை முழுவதும் வாடகை வீடுதானா என்று நினைப்பவர்களுக்கெல்லாம் வழிகாட்டப் போகிறது இந்த சப்தம ராகு.
இடத்தை வாங்குவீர்கள். மனையைக் கட்டுவீர்கள். இருக்கும் பணத்தோடு பற்றாக்குறை ஏற்படுமானால் பண உதவி செய்ய பக்கத்தில் இருப்பவர்களே முன்வருவார்கள். பொதுவாக விரயங்கள் அதிகரிக்க வைக்கும் இந்த ராகு கேது பெயர்ச்சி, விழிப்புணர்ச்சி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நற்பலன் களைக் கொடுக்கும்.
பாதசாரப்படி கேது தரும் பலன்கள்
மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைத்த கேது, சூரியனின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் மாறும். உடன் பிறப்புக்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
சுக்ரன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மூன்றாம் நபரால் பிரச்சினைகள் உருவாகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. வாகன மாற்றம் உருவாகும். பழைய வாகனத்தால் பழுதுச் செலவுகள் உண்டு. நாடு மாற்றச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
கேது தன் சொந்தக்காலில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க முன்வருவீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
பாத சாரப்படி ராகு தரும் பலன்கள்!
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு குரு காலில் சஞ்சரிக்கும் பொழுது திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். தெய்வீக காரியங்களுக்கும் செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊர்மாற்றம், இலாகா மாற்றம் ஏற்படும். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட வழக்குகள் தீரும்.
ராகு சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அதிகரிக்கும். இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு உருவாவதற்கு வழிபிறக்கும்.
ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணச் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்றவற்றில் இருந்த தடை அகலும். கல்வி முன்னேற்றம், புதிய உத்தியோகம் உருவாகும். வருமானம் இரு மடங்காகும் சூழ்நிலைகள் ஏற்படலாம். சகோதர ஒற்றுமைக்குறைவு ஏற்படாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மீனம்,
02.12.2012 முதல் 20.06.2014  வரை
பூரட்டாதி 4ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
40/100
அஷ்டமத்தில் வரும் ராகு!  ஆலயம் சென்றால் பலனுண்டு!
எவரிடமும் எளிதாக நெருங்கிப் பழகும் இயல்பைப் பெற்ற மீன ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் ‘சுப கிரகம்’ என்று போற்றப்படும் ‘குரு’ உங்கள் ராசிநாதனாக விளங்குகிறார். எனவே சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களையும் வசப்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக விளங்குவீர்கள்.
முயற்சி ஒன்றையே முழு ஆயுதமாகக் கொண்டு முன்னுக்கு வருபவர்கள் நீங்கள்தான். நாகரீகப் பொருட்களின் மீது மோகம் அதிகம் கொண்டவர்கள். நண்பர்கள் கூட்டத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
எந்தவொரு செயலுக்கும் காரணம் உண்டு என்று சொல்லும் நீங்கள் அரசியல்வாதிகளின் நட்பை அதிகம் பெற்றிருப்பீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றம் செய்வீர்கள். உறுதியான மனமே உங்கள் மூலதனமாக இருப்பதால் இறுதியாக நீங்கள் எடுக்கும் முடிவே எல்லோரும் ஒத்துக்கொள்வதாக இருக்கும்.
ராசியில் கடைசியாக இருந்தாலும் பண வளர்ச்சியில் முதல் ராசியாகக் காட்சியளிப்பீர்கள். ஆனால் பண பலத்தால் சாதிக்க முடியாததை பக்கபலமாக இருக்கும் நண்பர்களால் சாதிப்பீர்கள்.  இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி என்னென்ன மாற்றங்களையும், எப்படிப்பட்ட ஏற்றங்களையும் வழங்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.
அலைச்சலால் ஆதாயம் தரும்  அஷ்டமத்து ராகு!
ஆலய வழிபாட்டால் பலன் கொடுக்கும் இரண்டாமிடத்து கேது!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான் வெளி பயணத்தில் பின்னோக்கிச் சென்று பெரிய மாற்றங்களைக் கொடுக்கப் போகிறார்கள். அஷ்டமத்தில் ராகு அடியெடுத்து வைப்பது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சனியுமல்லவா சஞ்சரிக்கிறது.
அதுவும் சாதாரண சனியல்ல. உச்சம் பெற்ற சனி என்பதால் விடிந்தால் விரயம் காத்திருக்கிறது என்று சொல்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறும் சூழ்நிலை சிலருக்கு உருவாகும்.
ஆனாலும், ஒரு சில காரியங்கள் ஒரு முறைக்கு இரு முறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். நினைத்த நேரத்தில் நினைத்தபடி செயல்பட முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளின் வழியிலும், உற்றார், உறவினர் வழியிலும் ஒரு சாரார் பாசமாக இருப்பர்.
எதைச் செய்தாலும், இறை வழிபாட்டை மேற்கொண்டு அதன்பிறகு காரியத்தை தொடங்கினால்தான் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். சம்பளம் போதுமானதாக இல்லையே என்று ஒரு சாரார் கவலைப்படுவர். சம்சாரம் ஒத்துவரவில்லையே என்று ஒரு சாரார் கவலைப்படுவர். குழந்தைகளின் குணம் சரியில்லாமல் போகிறதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். ஆரோக்கிய பாதிப்பாலும் கவலைப்பட நேரிடலாம்.
கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் வந்து விட்டதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். கூட்டாளிகள் விலகி விட்டார்களே என்று ஒரு சிலர் வருத்தப்படுவர். இப்படி ஏதேனும் ஒரு வருத்தத்தை அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகு வரவழைத்துக் கொடுக்கலாம். இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. விபரீத ராஜயோகத்தை செயல்படுத்தும் சனியோடு அது இணைந்திருப்பதால் திட்டமிடாது செய்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
திடீர், திடீரென தன லாபம் வந்து சேரும். தெய்வப்பற்று மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் தீங்குகள் விலகிச் செல்லும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தக்க துணையாக வைத்துக் கொள்ளுங்கள். சாதுர்யமான பேச்சால் சண்டை சச்சரவை தீர்த்துக் கொள்ளுங்கள், அன்பை விதையுங்கள். ஆனந்த பயிரை அறுவடை செய்யுங்கள்.
பண்பு மிக்கவர்கள் என்று போற்றப்படும் நீங்கள், பகல் இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காத நேரமாக இது இருந்தாலும், உழைப்பை மூலதனமாக்கி உயர்வை காணுங்கள். சுய ஜாதகத்தில் திசா புத்தி பலமிழந்தவர்கள் வீடு மாற்றம், நாடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று ஏதேனும் ஒரு மாற்றத்தை காண நேரிடும்.
எனவே வரும் மாற்றம் நல்ல மாற்றமாக வரவும், வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளவும் உங்கள் சுய ஜாதகத்தை ஒரு முறை அலசி ஆராய்ந்து பாருங்கள். அதில் ராகு, கேதுக்கள் இருக்குமிடம், பார்க்கும் கிரகம், பாத சார பலமறிந்து எந்த ஸ்தலத்திற்கு சென்று பரிகாரங்கள் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்த ஸ்தலத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் உங்கள் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். சிகரத்தைத் தொடும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்.
என்ன செய்யும் இந்த இரண்டாமிடத்து கேது!
இதுவரை 3 ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் 2ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும்போது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம்தான்.
எனவே யாருக்கும் வாக்குக் கொடுக்கும் முன் ஒரு கணம் யோசித்துக் கொடுப்பது நல்லது. குடும்பத்திலும் முன்கோபத்தை தவிர்த்து முதியவர்கள் முதல் இளையவர்கள்வரை அன்பு செலுத்துவதன் மூலமே ஆதாயம் காண இயலும். சில பிரச்சினைகளைக் கண்டும், காணாமலும் இருப்பதே நல்லது. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே அன்னியோன்ய உறவு அதிகரிக்கும்.
வாங்கல் கொடுக்கல்களிலும் சில சமயங்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உரு  வாகலாம். பெருந்தொகை வாங்கும்போதும், கொடுக்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதே நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். எனவே மனக்குழப்பம் கூடும்.
வரவைவிட செலவு இருமடங் காகும். இந்த நேரத்தில் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதே நல்லது. வீடு கட்டும் பணியை தொடரலாம். கட்டிய வீட்டை பழுதுபார்க்கும் அமைப்பு சிலருக்கு கிடைக்கும்.
வாகனப்பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். எனவே பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க அனுசரிக்கும் குணம்தான் தேவை. வேலைப்பளு கூடும். சொந்த வேலை எதையும் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டு விழா, பெற்றெடுத்த குழந்தைகளின் திருமண வைபவம், பெற்றோர்களின் மணிவிழா நிகழ்ச்சி என்று ஏதாவது ஒரு சுப காரியம் வீட்டில் நடக்க வாய்ப்பு உருவாகும். அங்ஙனம் சுப விரயம் செய்ய முற்பட்டால் வீண் விரயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும்.
வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முற்படலாம். தங்கம், வெள்ளி, நூதன கருவிகள் வாங்கி வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வருமானம் எவ்வளவுதான் வந்தாலும் செலவு கூடும். யாருடன் பேசினாலும் சுருக்கென்று பேசாமல் சுகமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வதே நல்லது.
பாத சார அடிப்படையில் பலன் தரும் ராகு!
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு முதலில் குரு காலில் சஞ்சரிக்கப் போகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகவே இருக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்த மாற்றம் இனிய மாற்றமாக அமையும்.
ராகு தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, எதிலும் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்பட்டு அகலும். மாற்று மருத்துவமும் இக்காலத்தில் குணமடைய வைக்கும். வீட்டு பிரச்சினை முதல் நாட்டு பிரச்சினை வரை அலைமோதும் இந்த நேரத்தில் பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிப் போகலாம்.
ராகு செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
பாத சார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!
கேது மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது முதலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இக்காலத்தில் எதிரிகளின் பலம் கூடும். எனவே வீண் விவகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீ.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு சுய தொழில் தொடங்க முன்வருவர். அரசு வழி கடன் உதவிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும்.
கேது சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்காது. இனம்புரியாத கவலை மேலோங்கும். குடும்ப பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைக்க முன்வருவீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.
கேது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, புகழ் கூடும். பொருளாதார நிலை மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூட்டு முயற்சிகள் தனியாக மாறும். சுதந்திரமாகச் செயல்பட தொடங்குவீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
ரிஷபம்,
02.12.2012  முதல் 20.06.2014 வரை
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
கேது  விலகுவதால் இனிமேல் கேட்ட உதவிகள் கிடைத்துவிடும்!
70/100
பிறரை மயக்கும் விதத்தில்  பேச்சாற்றலை பெற்ற  ரிஷப ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் அள்ளிக்கொடுக்கும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்கிரன் உங்கள் ராசிநாதனாக இருக்கிறார். எனவே வாழ்க்கையில் எல்லாவிதமான சுகங்களையும், சந்தோஷங்களையும் அனுபவிப்பவர்களாகவே விளங்கப்போகிறீர்கள்.
மற்றவர்களுக்கு துன்பம் வரும் பொழுதெல்லாம் மனம் உருகுவீர்கள். இப்படிச்செய்தால் உங்கள் நிலை மாறும் என்று இனிய ஆலோசனைகளை அள்ளி வழங்குவீர்கள். அதே நேரத்தில் களத்திரக்காரகன் சுக்கிரனே உங்களுக்கு 6–ம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கைத்துணை அமைய வேண்டுமானால், பொருத்தம் பார்த்தே திருமணம் செய்து கொள்வது நல்லது.   
பாதி வயதிற்கு மேல் பணம் சேர்ப்பதிலும், சம்பாதிப்பதிலுமே உங்கள் குறிக்கோள் இருக்கும். உணவில் இனிப்பு சுவையை அதிகம் நாடும் நீங்கள், மதிப்பும், மரியாதையும் மிக்கவர்களாக விளங்குவீர்கள். வசதி, வாய்ப்போடு பிறந்தவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் ராசியான ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படியெல்லாம் மாற்றத்தை கொடுக்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.
அஷ்டலட்சுமி யோகம் தரும் ஆறாமிடத்து ராகு!
ஆன்மிக நாட்டம் உருவாக்கும் பன்னிரண்டாமிடத்து கேது!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும் உங்கள் ராசியான ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளி பயணத்தில் பின்னோக்கி சென்று 2.12.2012 முதல் ஆறாமிடத்தில் ராகுவாகவும், 12ம் இடத்தில் கேதுவாகவும் சஞ்சரித்து முன்னேற்றப்பாதையில் நீங்கள் அடியெடுத்து வைக்கவும், முக்கிய திருப்பங்களை நீங்கள் காணவும் வழிவகுக்க போகிறார்கள்.
ஆறாமிடத்து ராகு அஷ்ட லட்சுமி யோகத்தை தரும் என்று சொல்வார்கள். தூரதேசத்தில் இருக்கும் நண்பர்களின் பழக்கத்தால் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை கிடைக்கும். காரசாரமாக பேசியவர்கள் எல்லாம் இனி கனிவோடு பேச முன்வருவர்.  
தாராள மனம் உங்களுக்கு இருப்பதால், நீங்கள் தாட்சண்யத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருப்பீர்கள். அதன் விளைவாக ஏராளமான பொருட்கள் விரயமாகி இருக்கலாம். இழந்த பொருள்களையெல்லாம் மீட்டுவரும் வாய்ப்பு இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு கிடைக்க போகிறது. கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லையே என ஏங்கியவர்களுக்கு புதிய வேலை கிடைத்து புன்னகை பூப்பீர்கள். மதிய நேரத்தில் கூட சாப்பிடமுடியாத அளவிற்கு சம்பாத்தியம் கூடும். அதிக கடன் வாங்கிவிட்டோமே என்ற கவலை குறையும்.  
தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் இனி விலகுவர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் என்பதால் அந்த மூலதனத்தை கொண்டும் உங்கள் மூளை பலத்தை கொண்டும் லாபம் தரும் தொழில் ஒன்றை செய்ய முன்வருவீர்கள்.
நாட்டுப்பற்று மிக்கவர்களும், நல்லவர்களும் உங்கள் வீட்டிற்கு வந்தே உதவ முன்வருவர். பெயர்ச்சியாகும் நேரத்தில் குரு வக்ர கதியில் இருக்கிறார். பிறகு மே 2012–க்கு மேல் குருவின் பார்வை ராகுவின் மீது பதிய தொடங்குகிறது. தேவ குருவின் பார்வை ராகுவின் மீது பதியும் போது உங்கள் ஆவல்கள் அனைத்தும் கைகூடும்.
பெயர்ச்சியாகும் ராகு தேக நலனில் மட்டும் கொஞ்சம் திடீர், திடீரென தொல்லைகளை கொடுக்கும். நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதே மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. ஆரம்பத்திலேயே எதையும் கவனித்தால் அப்புறம் சிரமப்பட வேண்டாம் அல்லவா? வழக்குகள் இதுவரை எத்தனை நடைபெற்றாலும் அவற்றில் ஒரு திருப்பத்தை தரப்போவது இந்த ராகு கேது பெயர்ச்சி தான்.
இந்த ராகு எதிரிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது எதிரிகளின் பலத்தை குறைய வைக்கும். அதிரடியாக பேசும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கும். புதிய திருப்பங்களை நீங்கள் புத்திசாலித்தனத்தினால் பெற்றுக்கொள்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டாகும். ஊதிய உயர்வும் வந்து சேரும். உயர் அதிகாரிகளின் தொல்லைகளை தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. மேலதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
அஷ்ட லட்சுமி யோகம் தரும் ராகு உங்கள் சுய ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கலாம். உங்கள் மனைவி, மக்களின் ஜாதகங்களிலும் அந்த பாம்பு கிரகங்கள் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எந்தெந்த கிரகங்கள் அதை பார்க்கின்றன, அது நல்ல பலனை அள்ளி வழங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த கோவிலுக்கு சென்றால் உங்கள் ஆவல்கள் நிறைவேறும் என்பதை நீங்கள் அறிந்துகொண்டு செயல்பட்டால் இந்த நேரம் இனிய நேரமாக அமையும்.
பரபரப்பாக செயல்பட வைக்கும் பனிரெண்டாமிடத்து கேது!
ஆறாமிடத்தில் ராகு சஞ்சரிக்கும் போது அதே நேரத்தில் 12ம் இடத்தில் கேது சஞ்சரிப்பார் அல்லவா? அதன் பலனால் விரயங்கள் அதிகரிக்கும் என்றாலும் வரும் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு அத்தியாவசிய பொருட்களை எல்லாம் வாங்கி குவிக்கப்போகிறீர்கள். இதுவரை சிக்கனமாக இருந்த நீங்கள் இனி செலவு செய்யத்தான் வேண்டும். தக்க விதத்தில் பொருளாதாரம் உங்கள் கைகளில் வந்து சேரும் பொழுது அது தானாகவே விரயமாகி செல்வதற்கு முன்னால் தாங்களாகவே ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பது நல்லது.
மனைவி, மக்களுக்கு வேண்டிய அளவு ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுக்கலாம். மண்டபங்களை கட்டி வாடகைக்கு விடலாம். பிள்ளைகளின் கல்யாண முயற்சிக்கும் கைகொடுத்து உதவ முன்வருவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து புதிய வீடாக்கும் பணி வெற்றிபெறும். நாகரீகமான முறையில், நல்ல அமைப்பில் வீடுகட்ட வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
உறவினர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கொடுத்து உதவி செய்வீர்கள். வெளிநாட்டு பயணம் விரும்பும் விதத்தில் அமையும். மனைவி, மக்கள் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். அரசியல்துறையில் ஈடுபட்டவர்கள் இழந்த செல்வத்தை, செல்வாக்கை மீண்டும் பெறுவர். மற்றவர்கள் உங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புக்களை முடித்துக்கொடுத்து உங்கள் மதிப்பை உயர்த்திக்கொள்வீர்கள்.
அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அலமாரியில் வைத்து அலங்கரிக்கும் நேரமிது. ஞானகாரகனாக கேது விளங்குவதால், புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி, புகழ்பெற்ற காசி, ராமேசுவரம் ஆகிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வேலைவாய்ப்பு தேடி காத்திருப்பவர்களுக்கு தற்சமயம் வேலை கிடைக்கும் அமைப்பும் உண்டு. சுயஜாதகத்தை ஒருமுறை புரட்டிப்பார்த்துவிட்டு பிறகு சம்மதிப்பது தான் நல்லது.
பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு குரு காலில் சஞ்சரிக்கும் போது இழப்புகளை ஈடு செய்ய வாய்ப்புகள் கிட்டும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மதிப்பு மிக்கவர்கள் உங்களுக்கு மனம் கோணாமல் உதவி செய்வர். துதிபாடும் கூட்டம் விலகும். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
ராகு சுயசாரத்தில் சஞ்சரிக்கும் போது வருமானம் இரு மடங்காகும். வசதி வாய்ப்புகள் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வர். பங்காளிப்பகை மாறும். பதவி உயர்வில் இருந்த தடை அகலும்.
ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் போது உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதியாக செவ்வாய் இருப்பதால், குடும்பத்தில் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகள் கூடும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. வரவு வரும் முன்னதாகவே செலவு காத்திருக்கலாம். நூதன கருவிகளில் சேர்க்கை உண்டு. அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம் இது.
பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!
மேஷ ராசியில் அடியெடுத்து வைத்தகேது முதலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, குடும்ப சுமை கூடும். கொள்கை பிடிப்புடன் செயல்பட இயலாது. ஏதேனும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். வீடு, இடம், வாங்குவது சம்பந்தமாக செலவிட்டு மகிழ்வீர்கள். தாய்வழியே தனவரவு உண்டு. வாகன மாற்றம் செய்யும் முயற்சியிலோ, வாங்கும் முயற்சியிலோ வெற்றி கிட்டும்.
ராசிநாதன் சுக்ரன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. எதிரிகளின் பலம் கூடும் நேரம் இது. இறை வழிபாடு இக்காலத்தில் உங்களுக்கு அதிகம் தேவை. உத்தியோகம், தொழிலில் திசா, புத்தி பலம் இழந்தவர்களுக்கு மாற்றம் ஏற்படும் நேரம் இது. ஊர்மாற்றம், இடமாற்றம் கூட ஒரு சிலருக்கு வந்து சேரும்.
கேது, கேது சாரத்தில் சஞ்சரிக்கும் போது விரயங்கள் மேலோங்கும். வருமானத்தை காட்டிலும் செலவு கூடும். வண்டி வாகனங்களை மாற்ற நினைப்பீர்கள். உடல் நலத்தாலும் ஒரு தொகையை செலவிட நேரிடலாம். உடனிருப்பவர்களாலும் ஒரு தொகையை செலவிட நேரிடலாம். தாட்சண்யம் தன விரயம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். யோசித்து செயல்படுவதோடு மட்டுமல்லாமல், இறைவனை பூஜித்தும் நாக கவசத்தை வாசித்தும் யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வதன் மூலமே சந்தோஷங்களை வரவழைத்து கொள்ள இயலும்.
கன்னி
02.12.2012  முதல் 20.06.2014  வரை
உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம்,
சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
50/100
பாம்புக் கிரகம் இரண்டில் வர பண வரவு திரண்டு வரும்!
சந்தோஷம் ஒன்றையே நாளும் சந்திக்க வேண்டும் என்று விரும்பும் கன்னி ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் ‘கல்விக் கிரகம்’ என்று போற்றப்படும் புதன் உங்கள் ராசி நாதனாக விளங்குகிறார். எனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவீர்கள். புதன் வலிமை இழந்திருப்பவர்கள் கல்வியறிவைக் காட்டிலும் அனுபவ அறிவு மிக்கவர்களாக விளங்குவர்.
‘சிக்கனம் வீட்டைக் காக்கும்! சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற வைர வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களும் நீங்கள் தான். எந்தக் காரியத்தையும் கடைசி வரை இருந்து முடித்துக் கொடுப்பீர்கள். எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
மாற்றுக் கருத்துக்களை யாரேனும் உங்களிடம் சொன்னால் மறுநிமிடமே அவர்களை விட்டு விலகி வந்து விடுவீர்கள். பாட்டி காலத்துப் பழக்க, வழக்கங்களிலிருந்து எல்லாவற்றையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு கேட்டவர்களுக்கு எல்லாம் எடுத்துச் சொல்வீர்கள். கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நீங்கள் ‘புனிதமானவர்’ என்று மக்களால் போற்றப்படுவீர்கள்.
உங்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி என்னென்ன மாற்றங்களை எல்லாம் கொடுக்கப் போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
வரவை அதிகரிக்க வைக்கும் இரண்டாமிடத்து ராகு!
ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் கொடுக்கும் அஷ்டமத்து கேது!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும், தனது வான்வெளி பயணத்தில் 2.12.2012 அன்று பின்னோக்கி சென்று உங்களுக்கு செல்வ வளத்தை பெருக்கப் போகிறார்கள். அதே நேரத்தில் அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்த கேது அதிக விரயங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறார்.
உங்களின் சுயஜாதகத்தின் அடிப்படையிலும் உங்கள் மனைவி, மக்களின் சுய ஜாதகத்தின் அடிப்படையிலும் ராகு கொடுக்கும் பலன்களில் மாறுபாடு இருக்கலாம். யோக ராகுவாக இருந்தால் யோகத்தை அள்ளி அள்ளி வழங்குவார். இல்லையேல் குறுக்கீடு சக்திகள் அதிகம் வரலாம்.
இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவைப் பொறுத்த வரை பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனம் போன போக்கில் எல்லாம் நீங்கள் செலவு செய்யாமல் மக்கள் செல்வங்களுக்காகச் செலவு செய்யுங்கள் அல்லது வாங்கிய கடனைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்து கொள்ளுங்கள். வாங்கிய கடனைத் தீர்ப்பதற்கு இயலாமல் அவதிப்படுகிறோமே என்று நினைத்தவர்களுக்குத் தங்கு தடை இல்லாமல் தானாகவே தனவரவு வந்து சேரும்.
நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும் விதத்திலேயே ராகுவின் சஞ்சாரம் இருக்கிறது. பொதுவாக வாக்கு, தனம், குடும்பம் ஆகிய இடங்களை ராகு சார்ந்திருப்பதால் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உயர்மட்டத்தில் உள்ளவர்களோடு நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்று குதூகலத்தை வழங்கப்போகிறது.
பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் மற்றும் கல்யாண காரியங்களைக் கண்டு மகிழ்வீர்கள். கல்யாண வாய்ப்புகள் கை நழுவிப் போகிறதே என்று கவலைப்பட்டவர்கள் இனி மகிழ்ச்சியடையும் விதத்தில் வரன்கள் வாயில்தேடி வரப்போகின்றன. கையில் பணம் வைத்துக் கொண்டல்லவா கல்யாணம் பேச வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் பையில் பணம் வந்து சேர பல வழிகளிலும் நண்பர்கள் முன்வருவார்கள். எனவே மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு விரைவில் உருவாகலாம்.
தொழில் வளர்ச்சியில் மூலதனம் போடத்தொகையில்லையே என்றவர்களுக்கெல்லாம், கூட்டாளிகள் புதிதாக வந்திணைந்து உறுதுணை புரிவர். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை செலுத்தியவர்களுக்கும் ஆதாயம் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிப் புதிய சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு, அந்நிய தேசத்தில் இருந்து ஆதரவுக்கரம் நீட்டுவோரின் ஆதரவு கிடைக் கும்.
அஷ்டமத்து கேதுவால் ஆதாயம் உண்டா?
அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் கேது அலைச்சலை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த கேதுவின் பார்வை தொழில் ஸ்தானத்திலும், புத்திர ஸ்தானத்திலும் பதிவாகிறது. எனவே தொழில் சம்பந்தமாக ஒன்றுக்கு இரண்டு முறை அலைச்சலைக் கொடுக்கும். முடிவில் ஆதாயம் கிட்டும். அதே நேரம் புத்திர ஸ்தானத்தின் மீதும் பதிவதால் பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் உருவாகலாம்.
இந்த நேரத்தில் கேதுவை மட்டும் திருப்திப்படுத்தினால் போதாது. அதன் வால் பகுதியாக இருக்கும் ராகுவையும் திருப்திப்படுத்தியாக வேண்டும். எனவே பூரணமாக சர்ப்ப தோஷ பரிகாரத்தைச் செய்தால் தான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.
அதிலும் எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் கட்டாயம் சிறப்பு வழிபாடுகள் தேவை. அது மட்டுமல்ல. மற்றவர்களுடன் பழகும் பொழுதும் கொஞ்சம் கவனமும் தேவை. வீட்டில் விவகாரங்கள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. போட்டியாளர்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதே உத்தமம்.
மாற்றங்கள் அதிகமாக வந்தாலும், வரும் மாற்றம் பெரும் மாற்றமா என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். ஒவ்வொரு நாளும் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. குடும்பத்து ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. இல்லையேல் விவகாரங்களைச் சந்திக்க நேரிடும். இடமாற்றங்கள் நிகழும் பொழுது சனியின் ஆதிக்கம் இல்லையா என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது.
சில சொத்துக்கள் விரயமாகலாம். அதே நேரத்தில் சில சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கை கூடி வரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 8–க்கு அதிபதியாக செவ்வாய் விளங்குகிறார். எனவே சொத்துப் பிரச்சினைகள் வரும் பொழுதோ அல்லது பத்திரம் பதிவுகள் வரும்பொழுதோ கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பாதசார மாற்றங்களால் பலன் தரும் ராகு!
விருச்சிக ராசியில் அடியெடுத்து வைத்த ராகு இப்போது துலாம் ராசியில் நுழையும் போது முதலில் குரு காலில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக தொழில்துறையில் முன்னேற்றம், தொடர்ந்து இருந்த நோய் விலகும் வாய்ப்பு, சகோதரர்களால் சகாயம் ஏற்படும். நாட்பட்ட கடன்கள் வசூலாகும். நல்லகாரியம் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ராகு தனது சுய காலில் சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொள்கைப்பிடிப்போடு செயல்படும் சூழ்நிலையும் கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்தபடி லாபமும் கிடைக்கும் நேரமிது.
ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. நண்பர்களால் ஏமாற்றமும், நல்லகாரியம் நடைபெறுவதற்கு இடையூறுகளும் ஏற்படலாம். எனவே இக்காலத்தில் தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
பாதசாரப்படி கேது தரும் பலன்கள்
மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் கேது, முதலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். விரயாதிபதி சாரம் என்பதால் விரயங்களே அதிகரிக்கும். வரவைக்காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் சிறிது தளர்ச்சி தோன்றும். இறை வழிபாட்டில் நீங்கள் ஈடுபாடு செலுத்தினால் தான் குறைவற்ற வாழ்க்கை வாழ இயலும். பயணங்கள் அதிகரிக்கும். பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும்.வண்டி, வாகனங் களின் பழுதுச் செலவுகள் உண்டு.
கேது சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. நகை வாங்கும் சூழ்நிலையும், ஆடைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கல்யாணக்கனவுகள் நனவாகும். தந்தை வழியில் தக்க உதவிகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். சிந்தனை அனைத்தும் சம்பாத்தியத்தின் மீது செலுத்த வேண்டிய மாதமாகும்.
கேது சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, முன்பு சம்பாதித்த சம்பாத்யங்களை எல்லாம் விரயம் செய்யும் சூழ்நிலை உருவாகும். வீட்டுப்பிரச்சினைகள் சிலவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் கண் திருஷ்டிக்கு ஆளாக நேரிடலாம். எனவே வளர்ச்சிகளை அளவோடு சொல்லி வளமோடு வாழ்வது நல்லது.



கொழுப்பு குறையனுமா?? வெண்டைக்காய் சாப்பிடுங்க…


வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

THIRUMANA PORUTHAM


I R CTC BOOKING


உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம். 

இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன். 

லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம். 


அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும். 

இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில் Magic Autofill  என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.



இதில் பயணிகள் குறித்த தகவல்களை முதலில் நிரப்பி விடுங்கள். பின்னர் I'm Feeling Lucky என்பதை கிளிக் செய்து அதற்கடுத்து "Magic Autofill" என்பதை உங்கள் உலவியில் Drag செய்து Bookmark Toolbar பகுதியில் விடவும். 

செய்யும் முறை:

கவனிக்க நீங்கள் இந்த பக்கத்தை Bookmark செய்யகூடாது. Firefox மற்றும் Chrome உலவியில் Bookmark Toolbar Enable செய்து இருக்க வேண்டும், அப்போது தான் இது அங்கே Add ஆகும். Bookmar Toolbar Enable செய்ய. 

Firefox - இதில் URL பகுதிக்கு மேல் Right Click செய்து Bookmark Toolbar என்பதை Enable செய்ய வேண்டும். 


Chrome - இதில் Wrench Icon >> Bookmarks >> Show Bookmarks bar என்பதை கிளிக் செய்ய வேண்டும். 


இப்போது Drag செய்து Bookmark பகுதியில் விட்டால் Magic Autofill - ஐ விட்டால், அது கீழே உள்ளது போல தோன்றும். 

In Chrome
In Firefox
இப்போது IRCTC தளத்தில் பயணிகள் தகவலை நிரப்பும் போது இந்த Magic Fill என்பதை அழுத்தினால், அது ஒரே நொடியில் அனைவருக்கும் தகவல்களை நிரப்பி விடும். 

இது கூடுதலாக உள்ள Food, ID Card No, ID Card Type என்பதை குறித்த கவலை வேண்டாம், நீங்கள் புக் செய்யும் போது அது கேட்கப்படவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. 

என்ன நடக்கிறது ? 

இந்த Magic Autofill ஒரு Java Script ஆகும் நீங்கள் நிரப்பும் தகவல்கள் உங்கள் உலவியில் சேமிக்கப்படும், நீங்கள் கிளிக் செய்யும் போது IRCTC தளத்தில் உள்ள கோடிங் உடன் மேட்ச் ஆகி தகவல்கள் ஒரே நொடியில் நிரப்பப்பட்டு விடும்.