jaga flash news

Thursday, 20 September 2012

எண் ஜோதிடப்படி உங்கள் பெயர் எண் கணிப்பது எப்படி?


எண் ஜோதிடப்படி உங்கள் பெயர் எண் கணிப்பது எப்படி?
தற்கால ஜோதிடத்தில் எண் ஜோதிடம் முக்கியத்துவம் வகிக்கிறது. பிறந்த எண், கூட்டு எண் கொண்டு உங்களுடைய எண் ஜோதிட பொது பலன்களை அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு எண் ஜோதிட பிரகாரம் தீய எண்கள் அமைந்துவிடுவது உண்டு. அதற்கு பரிகாரமே இந்த பெயர் எண்.
உங்கள் பிறப்பு எண், விதி எண் என்பன உங்களுக்கு துர்அதிர்ஸ்டமாக இருந்தாலும், அதிர்ஸ்டமான எண்ணில் பெயரை அமைத்துக்கொள்வதன் மூலம் அதிர்ஸ்டசாலியாகலாம்.
இப்போது உங்கள் பெயர் எண்ணை எப்படி கணிப்பது என்பதை பார்ப்போம்.
எண் ஜோதிடத்தில் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் எண் உள்ளது.
1 – A, I, J, Q, Y
2 – B, K, R
3 – C, G, L, S
4 – D, M, T
5 – E, H, N, X
6 – U, V, W
7 – O, Z
8 – F, P
உங்கள் பெயரை இனிஷலுடன் எழுதிக்கொள்ளுங்கள். அதன் பின் மேலுள்ளவாறு குறித்த எழுத்துக்களுக்குரிய எண்களை போட்டு கூட்டுவதன் மூலம் உங்கள் பெயர் எண்ணை கணித்துக்கொள்ளலாம்.
உதாரணம்:
P.Kannan = 8+2+1+5+5+1+5 = 27 = 2+7 = 9
P.Kannan இன் பெயரெண் 9.
இவ்வாறு உங்கள் பெயரெண்ணை கணித்துக்கொள்ளலாம்.
உங்கள் பெயரெண் ஆனது உங்கள் பிறந்த எண்ணுக்கு அதிர்ஸ்டமானதா என்பதை கணிப்பது தொடர்பில் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இரண்டாம் இணைப்பு

No comments:

Post a Comment