jaga flash news

Thursday, 20 September 2012

வளைகாப்பு


வளைகாப்பு எனப்படும் சீமந்தம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ,கணவனுக்காகவோ செய்யப்படுவது இல்லை..கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்காக செய்யப்படும் முக்கிய பரிகாரம்...கர்ப்பம் உறுதியாகும்,3 வது மாதத்தில் செய்வதுதான் மிக சிறப்பு..இப்போது 7 வது மாதத்தில்தான் செய்கிறார்கள்..அது தவறு இல்லை..வளர்பிறையில்,பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய்,சனி,ஞாயிறு தவிர்த்த கிழமைகளில்,செய்வத
உத்தமம்..அஷ்டமி,நவமி,அமாவாசை,பெளர்ணமி,மாத பிறப்பு நாள்,விலக்க வேண்டும்..

ரோகிணி,பூசம்,ஹஸ்தம்,புனர்பூசம்,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி,திருவோணம்,ரேவதி,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் வளைகாப்பு செய்ய உத்தமம்..

சஷ்டி,சதுர்த்தி,சதுர்தசி,திவாதசி,அஷ்டமி,நவமி,அமாவாசை திதிகள் ஆகாது...!! குழந்தையையும்,கர்ப்பிணியையும் பாதிக்கும்

No comments:

Post a Comment