ஸ்ரீ மகாவீரர் அருள் மொழிகள்
|
- அதிகாலையில் எழுந்திரு.
- படுக்கையிலிருந்து வலது பக்கமாக எழுந்திரு.
- கிழக்கு முகமாக உட்கார்ந்து கொள்.
- கடவுளை வணங்கு.
- மந்திரத்தை நினை -ஜபம் செய்.
- காலைக்கடன்களை முடித்துக்கொள். கை, கால், முகம், சுத்தம் செய்து கொள்.
- உடனே குளித்து விடு.
- ஆலயத்திற்கு செல்.
- தெய்வ வழிபாடு செய்.
- பின்னர் உன் தொழிலைக் கவனி.
- தொழிலைச் செய்வதில் ஊக்கம் கொள்.
- நியாய முறையில் பொருளைத்தேடு.
- அநியாயத்தை மனத்திலும் கருதாதே.
- உலகத்தோடு ஒத்து வாழ்.
- உன்னைப் போல் மற்றவரையும் நினை.
- எவ்வுயிர் கட்கும் தீங்கு செய்யாதே.
- மற்றவரைக் கண்டு பொறாமைப்படாதே.
- புகழொடு வாழ்.
- பகைவா¢டத்திலும் இனிமையாகப் பேசு.
- எல்லோ¡¢டத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
- எவா¢டத்திலும் அருவருப்பாகப் பேசாதே.
- அனைவா¢டத்தும் முக மலர்ச்சியுடன் பேசு.
- நல்லவரைப் பின்பற்றுக.
- நல்லவர் சொற் கேள்.
- நல்லவர் போன வழி நீயும் போகுக.
- நல்லோரைக் காண்பதுவும் நன்றே.
- நெடுந்தூரம் சென்றாயினும் நல்லவரைக் காண்க.
- பொ¢யோ¡¢டத்தில் வணக்கமாய் இரு.
- பொ¢யோர் எதிர் நின்று மாறுதல் பேசாதே.
- பொ¢யோர் பேச்சைக் கேள்.
- பொ¢யோரைக் கண்டால் தாழ்மையுடன் நட
- பொ¢யோர் வார்த்தையை மீறாதே
- பொ¢யோர் சொற்படி நட.
- தீயோருடன் சேராதே.
- தீயோர் சொற்களைக் கேட்காதே.
- தீயோருடன் பழகாதே.
- தீயோரைக் கண்டால் தூர நட
- தீயோரைக் காண்பதும் தீதே.
- தீது செய்தல் இம்மைக்கும் மறுமைக்கும் தீதே.
- தர்மம் செய்க.
- தர்மத்தைப் பேணிக் காக்க.
- புண்ணியம் செய்க.
- பாபத்தைச் செய்யாதொழிக.
- இறைவனை (ஸ்வாமியை) வழிபடுக.
- குருக்களை வணங்குக.
- அற நூல்களை ஓதுக.
- கொலை செய்யாதே.
- பொய் பேசாதே.
- கொல்லானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்.
- திருடாதே (களவு செய்யாதே).
- ஐம்புலனை அடக்குக.
- பிரம்மசர்ய விரதம் காக்க.
- பொருள்மீது பேராசைப் படாதே.
- பொருட்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியாய் இரு.
- நீ மனிதனாக இரு.
- நீ மனிதனாக வாழ்க.
- விலங்கு இனத்தைச் சேர்ந்தவனாக வாழாதே.
- பகுத்தறிவுள்ளவனாக வாழ்க.
- பொறாமைப்படாதே.
- கோபத்தை அடக்குக.
- கர்வங் கொள்ளாதே.
- வஞ்சனை செய்யாதே.
- கபடம் செய்யாதே.
- பிறருக்குக் கொடுத்து வாழ்தலைக் கற்க.
- லோபத்தை விடுக.
- அன்னமிட்டுண் (அன்னதானம் செய்)
- அபய தானம் செய்.
- கல்விக்கு உதவி செய்.
- பிறர் பிணி நீக்குக.
- பிறர் நலம் கருதுக.
- தன்னலம் கருதாதே.
- பிறரை இகழாதே.
- தற்புகழ்ச்சி செய்யாதே.
- எல்லோ¡¢டத்திலும் நேசமாயிரு.
- எவ்வுயிரையும் துன்புறுத்தாதே.
- யாருக்கும் கெடுதி செய்யாதே.
- பிற உயிருக்கு இன்னலை நினைக்காதே.
- பிறருக்குக் கெடுதி யுண்டாவதைப் பற்றிப் பேசாதே.
- ஊன் உண்ணாதே.
- ஊன் உண்பது மனித இயல்பல்ல.
- ஊன் உண்பது கொடிய விலங்கின் செயல்.
- கள் குடிக்காதே.
- கள் மயக்கத்தைத் தரும்.
- கள் அறிவைக் கெடுக்கும்.
- கள் மனித இயல்பைக் கெடுக்கும்.
- கள்ளைக் கனவிலும் கருதாதே.
- களவையும் கனவில் நினைக்காதே.
- பிறர் பொருளை விரும்பாதே.
- பிறர் மனை நயவாதே.
- சூதாடாதே.
- வேசியை நேசிக்காதே.
- விபசா¡¢யை விரும்பாதே.
- குருபத்தினியைக் கருதாதே.
- கன்னியைக் கெடுக்காதே. குலமாதரைக் கெடுக்காதே.
- மாதாவைத் தெய்வமாக நினை
- செய்ந்நன்றி மறவாதே.
- பித்ரு துரோகம் நினைக்காதே.
- தாயாதி துரோகம் நினைக்காதே.
- அண்டினவரைக் காப்பாற்றுக.
- பிராணிகளை வதைக்காதே.
- பிராணிகளின் காது முதலானவற்றை அறுத்துத் துன்புறுத்தாதே.
- பிராணிகளை அடிக்காதே.
- பிராணிகளுக்குச் சா¢யான வேளையில் தீனி வைக்காமல் கட்டிப் போடாதே.
- காலந் தவறி தீனி வைக்காதே.
- காலந்தவறி தண்ணீர் காட்டாதே.
- வண்டிகளில் (பொதிமாடுகளின் மீது) அதிகக் சுமை ஏற்றாதே.
- மாடுகள் வண்டியிழுக்க சக்தியற்றவையாயிருப்பின் வண்டியைத் தள்ளி உதவி செய்.
- உதவி செய்யாமல் அடிக்காதே.
- பசுங்கன்றுக்குப் பால் விடு.
- பாலை அடியோடு கறக்காதே.
- கன்றுகளைக் காப்பாற்று; உழவுக்கு உதவும்.
- வயதான மாட்டை ஊன் உணவுக்கு விற்காதே.
- உழைத்த உயிர் நீங்கிய மாட்டை ஓ¡¢டத்தில்; புதைத்து
விடு.
- பொய்ப் பிரசாரம் செய்யாதே.
- பிறருக்கு துன்பம் ஏற்படும் சொல்லைச் சொல்லாதே.
- உண்மையற்றதை உலகில் பரப்பாதே.
- ஆண் பெண் சம்பந்தமான ரகசியத்தை வெளியிடாதே.
- ரகசியத்தை அறிந்தாலும் அறியாமலிருந்து விடு. வெளியிடாமல் இருந்துவிடு.
- பிறர் பொருளை அபகா¢க்காதே.
- உன்னிடம் பிறர் இருப்பு வைத்த பொருளை அவர் மறந்து விடினும் அதனைக் திருப்பிக் கொடுத்து விடு.
- பிறர் பொருளை அபகா¢க்கக் கனவிலும் கருதாதே.
- தன்னுடையதல்லாதவற்றை யாருடையதென்று விசா¡¢த்து அவருக்குக் கொடுத்து விடு.
- அரசு ஆணையை மீறாதே.
- அரசு சட்டப்படி நட
- அரசுக்கு அடங்கி நட.
- அரசை அவமதிக்காதே.
- அரசு அன்று கொல்லும்.
- தெய்வம் நின்று கொல்லும்.
- ராஜா பிரத்யக்ஷ தேவதா.
- பாலில் நீரைக் கலந்து விற்காதே.
- தான்யத்தில் மண்ணையும் கல்லையும் கலந்து விற்காதே.
- அதிக விலையுள்ள பொருளில் குறைவான விலையுள்ள பொருளைக் கலந்து விற்காதே.
- அழுகிய பொருளை அகற்றி விடு. அதனைக் கலந்து விற்காதே.
- வாங்கும்போது அதிக நிறுத்தலில் வாங்காதே.
- விற்கும் போது குறைவான நிறுத்தலில் விற்காதே.
- விலையைக் குறைத்தாலும் குறை அளவைக் குறைக்காதே.
- அளவை மத்யஸ்தமாக அளத்தல் வேண்டும்.
- வாங்கும்போது அதிக அளவில் வாங்காதே.
- விற்கும்போது குறைந்த அளவில் விற்காதே.
- திருட்டுப் பொருளை வாங்காதே.
- சட்டத்திற்கு மீறி நடக்காதே.
- பொருள்களை மிதமாக வைத்துக் கொண்டு வாழ்க.
- அதிகமான பொருள்களைச் சேர்த்து வைக்காதே.
- உன் தேவைக்கு அளவான பொருள்களைச் சம்பாதித்துக் கொள்.
- அதிகமான பொருள்களை நீயே பொருளற்றவர் கட்குப் பங்கிட்டுக் கொடு.
- எதிலும் அதிக ஆசைப் படாதே.
- ஜாதி குல முறைப்படி மணம் செய்து கொள்.
- மணம் செய்து கொண்ட மனைவியுடன் ஒத்து வாழ்.
- மனைவி மனம் நோக எதையும் செய்யாதே.
- தன் மனைவியிருக்க பிறர் மனைவியைச் சேராதே.
- வேசியின் உறவு கொள்ளாதே.
- புணர்ச்சி செய்வதில் அதிக ஆவல் கொள்ளாதே.
- புணர்ச்சி செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளாதே.
- மக்களைப் பெறுதற்கு மிதமாகப் புணர்தல் வேண்டும்.
- புணர்ச்சி செய்வதற்கு¡¢ய அங்கத்தில் புணர்தல் வேண்டும்.
- புணர்ச்சிக்கு¡¢ய காலத்தில் (இரவில்) புணர்தல் வேண்டும்.
- பகலில் புணர்ச்சி செய்யாதே.
- உறவினரை உள்ளன்போடு நேசி.
- உறவினருக்கு உன்னால் இயன்ற உதவி செய்.
- உறவினருக்கு விருந்தளி.
- விருந்தினா¢டம் முகமலர்ந்து பேசு.
- உபசா¢த்து உள்ளங்களித்து உப்பிலாக் கூழிட்டாலும் உண்பது அமிர்தமாகும்.
- முகங்கடிந்து முப்பழமொடு பால் கொடுப்பினும் கடும்பசி யாகும்.
- வீட்டிற்கு வந்தவரை வாவென்று அழைக்காமல் இராதே.
- பிறருக்குக் கொடுப்பதில் உன்னிடம் உள்ளதை நல்ல எண்ணத்துடன் மறைக்காதே
- பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படாதே.
- உலகில் நல்லவனாக வாழ்க.
- கெட்டவனென்று பேரெடுக்காதே.
- உலகுக்கு உதவியாளனாக வாழ்.
- உலகத்தார் விரும்பாத செயலைச் செய்யாதே.
- உன்னுடைய வாழ் நாட்களை நல்லபடியே கழி.
- வாலிபத்தில் எவ்விதமாயினும் வாழ்ந்து விடலாம். முதுமையில் வாழ இயலாது.
- முதுமையில் உறவினருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்.
- பெண்கள் தனித்து வாழ்தல் கூடாது.
- பெண்கள் இளமையில் தந்தை தாயின் அடக்கத்தில் இருத்தல் வேண்டும்.
- பெண்கள் வாலிபத்தில் கணவனுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
- பெண்கள் முதுமையில் மக்களுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
- மக்கள் இளமையில் நன் முறையில் இருக்க வேண்டும்.
- மக்கள் மறுமையில் சுகத்துடன் வாழ முயலல் வேண்டும்.
- ஸ்ரீ லக்ஷ்மீஸேன ஸ்வாமிஜீ
No comments:
Post a Comment