jaga flash news

Thursday, 20 September 2012

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?


தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?
< ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும். 2. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 3. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. 4. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. 5. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. 6. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது. 7. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது. 8. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது 9. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. 10. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது. 1 1

No comments:

Post a Comment