jaga flash news

Wednesday, 19 December 2012

நட்சத்திர அமுத காலம்


 நட்சத்திர அமுத காலம்


வணக்கம் நண்பர்களே!
                             இப்பதிவில் அமுத காலத்தின் சிறப்புகள் பல உண்டு அதில் திருமண வாழ்வில் இந்த அமுத காலத்தின் சிறப்பு என்ன என்று இப்பதிவில் பார்க்கலாம்.
நட்சத்திர அமுத நேரம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அமுத காலம் வரும் அதனை நீங்கள் பார்த்து செய்ய வேண்டும்.இதனை பஞ்சாங்கத்திலும் பார்த்துக்கொள்ளலாம்.
மாங்கல்யம் செய்தல்
திருமண நிகழ்ச்சியில் இந்து மத வழக்கப்படி திருமண மாங்கல்யம் செய்வது என்பது ஒரு நல்ல் நாளை பார்த்து செய்ய வேண்டும். பெண்ணுக்கு தாலி ஒரு அழகு தான் .எப்போதும் கணவன் தன்னுடன் இருக்கிறான் என்பதை ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பது போல இருக்கும்.
மாங்கல்யம் அந்த பெண்ணி்ற்க்கு கடைசி வரை நிலைக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல நாளை பார்த்து அந்த நாளில் அமுத நேரத்தில் தாலி செய்ய கொடுக்க வேண்டும்.
திருமணத்திற்க்கு மாங்கல்யம் செய்ய உகந்த காலம் அமுதகாலமாகும். இதனால் திருமண வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் தம்பதிகள் சந்தோஷமாக நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள்.
சாந்தி முகூர்த்தம்
திருமணம் நடத்தும் தேதியை விட சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்க்கு நாள் குறிப்பது திருமண நிகழ்ச்சியில் முக்கியமான ஒன்று இந்த நிகழ்வு மூலம் தான் இருவருக்கும் இடையில் உடல் ரீதியாக உறவு ஏற்படுகிறது அதனால் நமது முன்னோர்கள் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இதனை சொன்னார்கள். இதனை நீங்கள் கண்டறிவது இருவருடைய ஜாதகத்தையும் வைத்து கண்டறியலாம்.

உங்களுக்கு நல்ல குழந்தைகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அமுத காலத்தில் இணைந்தால் உடல் நலக் குறைகள் இல்லாமல் அறிவு உள்ள குழந்தைகள் பிறக்கும்

No comments:

Post a Comment