jaga flash news

Wednesday, 19 December 2012

திருமணம் தடைபடுவதற்க்கு காரணம் என்ன ?


 திருமணம் தடைபடுவதற்க்கு காரணம் என்ன ?



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் திருமணம் நடைபெறாமல் போவதற்க்கு காரணம் என்ன என்று பார்க்கலாம். இந்த காரணங்களால் திருமணம் தள்ளியும் போகும்.
சனி 5 இல் இருந்து 2, 7, 11 ஆம் வீட்டைப்பார்ப்பதால் திருமணம் தாமதப்படும்.சனி 2,7,11 ஆம் வீட்டில் இருந்தாலும் 1,7,11 ஆம் ஆதிபத்யம் பெற்றாலும்  1, 7, 11 ஆம் வீட்டில் இருக்கும் கிரகங்கள் சனி சாரம் பெற்றாலும் திருமணம் தாமதப்படும்.
சனிக்கு 2, 7, 11 ஆம் வீட்டிற்க்கு சம்பந்தம் ஏற்படாமல் பார்வை மட்டும் 2, 7, 11 ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் திருமணம் நடைபெறாத நிலை அல்லது தோல்விகூட ஏற்படலாம்.
சனி சந்திரன் இணைந்து 2,7,11 ல் இருந்தாலும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டாலும் தாமதப்படும்.
பொதுவாக திருமணத்திற்க்கு தான் நம்ம ஆட்கள் ஜாதகத்தை பார்ப்பார்கள் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது அனைத்து விசயத்திற்க்கும் ஜாதகத்தை பார்க்கிறார்கள். 

குரு கிரகம் தான் திருமணத்திற்க்கு முக்கிய காரணமான கிரகம். குரு கிரகம் ஒரு ஜாதகத்தில் கெட்டால் திருமணம் தாமதப்படும்.
சுக்கிரனும் ஜாதகத்தில் திருமணத்திற்க்கு முக்கிய பங்கு வகிக்கிறது சுக்கிரன் கிரகமும் கெடுதல் அடையகூடாது.
ஒவ்வொரு ஜாதகத்திலும் களத்திராதிபதி கெட்டால் திருமணம் தாமத்தப்படும்.
மேலே உள்ளது அனைத்தும் பொதுபலன்கள் தான் நீங்கள் இதை படித்து விட்டு கவலைபட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். கடவுளிடம் அதிக பக்தி இருந்தால் எந்த பிரச்சினையும் தீர்க்க முடியும்.

No comments:

Post a Comment