jaga flash news

Wednesday, 19 December 2012

கேது பரிகாரம்


 கேது பரிகாரம்


 இப்பதிவில் நாம் ஆறாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்த தசா நடந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.
கேது பகவான் ஞானகாரகன் என அழைக்கப்படுகிறார். இவருக்கு பரிகாரம் சாமியார்களுக்கு சேவை செய்தால் போதும். ஞானத்தை தேடுபவன் இடத்தில் கேது பகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். நீங்கள் கேது தசா நடக்கும் போது  சாமியார்களின் ஜீவ சமாதி சென்று தரிசித்து வரலாம். 
உயிரோடு இருக்கும் சாமியார்களிடம் செல்ல வேண்டாம் எவர் எந்த நேரத்தில் எப்படி நடப்பார் என்று உங்களுக்கு தெரியாது. பெண்கள் செல்ல வேண்டாம். ஆண்கள் செல்லலாம்.
உங்களுக்கு ஒரு சின்ன பரிகாரம் தருகிறேன் அதனை செய்யுங்கள் நீங்கள் தெருவில் பார்த்தால் பைத்தியம் பிடித்த நிலையில் பல பேர் செல்வார்கள் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள் அது ஒரு நல்ல பரிகாரமாக இருக்கும். பல பேர் பார்த்தால் ஜடா முடியுடன் செல்வார்கள் அவர்களுக்கு நீங்கள் சாப்பாடு வாங்கி கொடுங்கள்.
ஜடா முடியுடன் செல்பவர்கள் சிலர் சிவ அம்சத்துடன் இருக்கிறார்கள். சிவனின் அம்சம் அப்படி தான் இருக்கும். அவர்களிடம் பணத்தை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். நீங்கள் சாப்பாடு மட்டும் வாங்கி கொடுங்கள். கேது பகவான் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பித்துவிடுவார்.இதனை அனைவரும் செய்யலாம். 
நீங்கள் சாமியாரை தரிசனம் செய்ய வேண்டும் விருப்பம் இருந்தால் நீங்கள் தேட வேண்டியது கார்ப்பரேட் சாமியாரை அல்ல. எளிமையாக இருப்பவர்களை தேடி பிடியுங்கள் அவர்களிடம் ஏகாபட்ட பொக்கிஷங்கள் கொட்டி கிடக்கும் உங்களுக்கு அதனை வைத்து உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் உங்களையும் ஆன்மிக பாதையில் உயர்த்த முடியும். 
நான் தேடும் போது எளிமையாக இருப்பவர்களை தான் தேடினேன் ஆனால் அவர்களிடம் எளிதில் விஷயத்தை வாங்கமுடியாது. கொஞ்சம் பொறுமையாக தான் வாங்கமுடியும். அவர்கள் செய்யும் சேட்டைகளை பொறுத்துக்கொண்டு தான் வாங்க வேண்டும்.
நான் ஒரு சாமியாரிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன் அவர் போதை வஸ்துக்களை அதிகம் உபயோகிப்பார். பல சாமியார்கள் போதை வஸ்துக்கு அடிமையாக தான் இருக்கிறார்கள். நான் போதை வஸ்துக்களை உபயோகிக்க மாட்டேன். அந்த சாமியாரிடம் பல விஷயங்கள் இருப்பது எனக்கு தெரிந்துவிட்டது அதனால் அவரின் போதை வாடையை தாங்கிக்கொண்டு அவரிடம் பல காலங்கள் இருந்து பல நல்ல வி்ஷயங்களை கற்றுக்கொண்டேன். 
வடமாநிலத்து சாமியார்கள் போதை வஸ்துகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பல ஆன்மிக விஷயங்கள் அவர்கள் அத்துபடியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு சாமியார்கள் பல பேர் பார்ப்பதற்க்கு நன்றாக இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் வித்தைகள் இல்லை.
என்னுடைய சாமியார்கள் தொடர்பை எழுத வேண்டும் என்றால் அது ஒரு தொடராகவே போய்கொண்டு இருக்கும். உங்களின் பொறுமையை கருத்தில் கொண்டு எழுதவில்லை. 
இதுவரை ஆறாம் வீட்டின் தசாவை பற்றி பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் சோதிட தாகத்திற்க்கு நல்ல கருத்துக்களை தந்தேன் என்ற மனமகிழ்ச்சியுடன் இத்தொடரை முடிக்கிறேன். நேரம் வரும் போது ஆறாம் வீட்டு தசாவை பற்றி நிறைய கருத்துக்கள் தருகிறேன். 

No comments:

Post a Comment