jaga flash news

Wednesday, 19 December 2012

ராகு பரிகாரம்


 ராகு பரிகாரம்


ஆறாம் வீட்டு தசா நடைபெறும் நேரத்தில் ஒவ்வொரு கிரகத்திறக்கும் பரிகாரம் என்ன என்று பார்த்து வந்தோம். இப்பதிவில் ராகு தசாவினால் ஏற்படும் பிரச்சினைக்கு என்ன பரிகாரம் என்று பார்க்கலாம். ஆறாம் வீட்டுடன் ராகு சம்பந்தப்பட்டு தசா நடந்தால் நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம்.
காளி அம்மன் அல்லது துர்க்கை அம்மன் போன்ற உக்கிர அம்மன் சந்நதிக்கு போய் ராகு காலத்தில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் நீங்கள் போகும் இரண்டு எலுமிச்சை பழத்தை வாங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் அந்த பழத்தை அந்த அம்மன் காலில் வைத்து தரும்படி கேட்டுக்கொண்டு அவர் அந்த அம்மனின் காலில் வைக்கும் போது நீங்கள் அந்த அம்மனை நினைத்து எனக்கு வந்த பிரச்சினை இத்துடன் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதால் வேண்டிக்கொள்ளுங்கள். 
அர்ச்சகரிடம் இரண்டு பழத்தையும் வாங்கிக்கொண்டு நேராக உங்கள் வீட்டில் போய் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துவிடுங்கள். உங்களுக்கு ராகு தசாவினால் வரும் இன்னல்கள் தீரும்.
பொதுவாக ராகு தசா நடந்தால் உங்கள் வீட்டில் சந்தேகங்களால் பிரச்சினை உருவாகும் அல்லது பெண்களால் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும் அதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனை தரும்.
ராகு தசா நடைபெறும் காலத்தில் உங்களுக்கு திடிர் பணவரவு கிடைக்கும் வரும் பணம் செலவாகிக்கொண்டே இருக்கும் அந்த பணத்தை சேமிப்பாக மாற்றவும் இந்த பரிகாரம் உதவும்.
இந்த பரிகாரத்தை செய்யமுடியவில்லை என்றால் ஞாயிறு அன்று ராகுகாலத்தில் அம்மனை தரிசனம் செய்யலாம் ஆனால் இதனை தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்க வேண்டும். ராகு தசாவில் தொடர்ந்து வாரம் வாரம் செய்யவேண்டும். ராகு தசாவில் இதனை பலபேருக்கு இதனை செய்யமுடியாது. 
ஆறாம் வீட்டு ராகு தசா நடப்பவர்கள் மட்டும் செய்யவேண்டும் என்று இல்லை ராகு தசா எங்கு இருந்து நடைபெற்றாலும் இதனை செய்யலாம்.
நண்பர்களே நம் பதிவுக்கு வருபவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள் நீங்கள் இந்த பரிகாரத்தை அடுத்தவருக்கும் சொல்லலாம் அதனால் கூட உங்களின் பிரச்சினை தீருவதற்க்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

No comments:

Post a Comment