jaga flash news

Monday, 10 December 2012

உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!


உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!

உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்! 
உடலமைப்பு, முக அழகு அல்லது லட்சணம் இதற்கெல்லாம் கூட ஜோதிடத்தில் இடம் உண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி?
சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம். தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்கு சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், ஒருவிதமான காந்தமான கண்கள், கணிவான கண்கள். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பேச வைக்கக் கூடியவர்கள். அந்த மாதிரியான கண்களெல்லாம் சுக்ரன் நன்றாக இருந்தாரென்றால் அந்த ஒளி அவர்களிடம் இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இருக்காது. சும்மா அப்படி பார்த்து கண் சிமிட்டினாலே போதும் நாம் விழுந்துவிடுவோம். அந்த மாதிரியெல்லாம் இருப்பார்கள்.
சந்திரனும் அதேபோல வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்கு தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான். லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள். இதுபோல அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.
மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருப்பதையெல்லாம் பார்க்கிறோம். இதற்கடுத்து துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களைப் பார்த்தீர்களென்றால், மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு புட்டபருத்தி பாபாவிற்கு பதுங்கி, ஒரு மாதிரி மடிந்து, அதாவது ஊர் பக்கத்திலெல்லாம் பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.
மூக்கு பற்றி ஏன் அதிகமாகச் சொல்கிறேன் என்றால், நாசிதான் சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்து சில விஷயங்களைச் சொல்லலாம். ஏனென்றால் சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும். இதுபோன்ற சில விஷயங்கள் உண்டு. அடுத்து புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய விரல்கள் நீளமான விரல்கள் இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே சொல்லிவிடலாம், புதன் உச்சமாக இருக்கிறார் அவர் ஜாதகத்தில் என்று.

No comments:

Post a Comment