jaga flash news

Thursday, 6 December 2012

சுய தொழில்... ஒருவர் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

சுய தொழில் துவங்குமுன் ஒருவர் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் ! 

பொதுவாக சிலர் புதியாதாக தொழில் துவங்கும் பொழுது கோட்சார கிரகங்களின் பலனை அடிப்படையாக கொண்டும் , நடப்பு திசை புத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் தொழில் துவங்கி விடுகி
ன்றனர் , இது புதிதாக அல்லது சுயமாக தொழில் துவங்க ஏற்றதல்ல , காரணம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் சில பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது தொழில் சிறப்பாக நடைபெற உதவி புரியும் , குறிப்பாக தொழில் துவங்கிய சில நாட்களிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்து மூடுவிழ காணும் சூழ்நிலை வருவதற்கு பொதுவான ஜாதக பலனையும் ,கோட்சார பலனையும் அடிப்படையாக வைத்து செய்வதாலேயே இந்த நிலை , சரி ஒருவர் சுய தொழில் ,அல்லது கூட்டு தொழில் புதிதாக துவங்கினால் சிறப்பான முன்னேற்றமும் , தொழில் வளர்சியும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .

ஒருவர் சுய தொழில் செய்யவோ அல்லது கூட்டு தொழில் செய்யவோ, அவரது ஜாதகத்தில் லக்கினம் , நான்காம் பாவகம் , ஐந்தாம் பாவகம் , ஏழாம் பாவகம் , ஜீவன ஸ்தானம் எனும் பாவகங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , ஏனெனில் ஜீவனம் எனும் தொழில் ஸ்தானம் நல்ல நிலையில் செயல் பட மேற்கண்ட பாவகங்கள் உதவி செய்தால் மட்டுமே தொழில் விருத்தி பெரும் , மேலும் ஒவ்வொரு பாவகமும் ஜீவன ஸ்தானத்துடன் எவ்வாறு சம்பந்தம் பெறுகிறது என்பதை பற்றி இனி பார்ப்போம் .

லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகரின் நிலையான தன்மையை குறிக்கும் , நிலையான புத்தி தெளிவான சிந்தனை , புத்திசாலித்தனமாக சரியாக முடிவு எடுக்கும் தன்மை , தொழில் முன்னேற்றத்திற்க்காக அயராது பாடுபடும் குணம் , எவரின் உதவியும் பெறாமல் சுயமாக முன்னேற்றம் பெரும் தன்மை , சுய தொழில் செய்யும் பொழுது தனக்கு என தனித்தன்மையுடன் ஒரு இடத்தை தக்க வைத்துகொள்ளும் திறன் , எப்பொழுதும் தொழில் முன்னேறத்தை பற்றிய சிந்தனையுடன் சுறு சுறுப்பாக இயங்கும் தன்மை , தொழில் புதுமையான முறைகளை அறிமுகம் செய்யம் தனி திறமை , ஜாதகருக்கு அமையும் தொழில் சிறப்பான முன்னேற்றம் பெரும் யோகம் , அரசு வழியில் இருந்து வரும் ஆதாயம் , என ஜாதகருக்கு சிறப்பான முன்னேற்றத்தை தர இந்த லக்கினம், ஜீவன ஸ்தானத்திற்கு நல்ல நிலையில் இருப்பது அவசியம் , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி தொழில் செய்வதை குறிக்கும்.

நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகரின் தொழில் முறை சொத்து , வண்டி வாகனம் , அசையும் சொத்து அசையா சொத்து , போக்குவரத்து சரக்கு வாகனங்கள் , மக்களை ஏற்றி செல்லும் இலகுரக கனரக வாகனங்கள் , உற்பத்தி செய்த பொருட்களை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்லும் அமைப்பு , பொருட்களை எவ்வித பாதிப்பும் இல்லாமல் கொண்டுசெல்லும் தன்மை , மேலும் தனித்தனியாக பகிர்ந்து விற்பனை செய்யும் முறைகள் , என ஜாதகர் செய்த உற்பத்தி பொருட்களை சரியான நேரத்தில் சரியான இடங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்கும் பணிகளில் நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக அமையும் , மேலும் நமது நாட்டில் சரியான போக்குவரத்து வசதி இல்லை என்றால் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் , எனவே மேற்கண்ட பாவகம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் செய்த முதலீடுகளால் கிடைக்கும் பொருட்கள் இயந்தர தளவாடங்கள் , சொத்துகள் , நிலம் இடம் ஆகியவற்றை குறிப்பிடும் பாவகமாக நான்காம் பாவகம் செயல் ஆற்றுகிறது , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை சரியான இடத்திற்கு எடுத்து செல்வதை குறிக்கும் .

பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகர் பூர்வீகத்தில் தொழில் செய்வதால் வரும் முன்னேற்றத்தை பற்றி குறிப்பிடும் பாவகம் , இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் பூர்விகத்தில் இருப்பதாலும் , தொழில் செய்வதாலும் வெற்றி மேல் வெற்றி கிடக்கும் ,எடுத்துகாட்டாக பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் சிறப்பாக தொழில் செய்துகொண்டு இருப்பவர்கள் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் நல்ல நிலையில் அமைந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும் , ஒருவேளை இந்த பாவகம் பாதிக்க பட்டால் பூர்வீகத்தில் இருந்து அதிக தொலைவில் சென்று தொழில் செய்வதால் வெற்றி கிட்டும் .

ஏழாம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

நேரடியாக மக்களிடம் தொடர்புகொள்ளும் தொழில்களில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் , தனது உற்பத்தி பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்து எவ்வித விளம்பரமும் இல்லாமல் பொதுமக்கள் மூலம் தனது உற்பத்தி பொருட்களுக்கு வாய் வழி விளம்பரம் மூலம் மிகப்பெரிய வெற்றியை தரும் , மேலும் ஜாதகர் தனியாக தொழில் செய்வதா ? அல்லது கூட்டு தொழிலா ? என்பதை சரியாக நிர்ணயம் செய்ய இந்த பாவகம் , சரியான பதிலை தரும் . மேலும் பொதுமக்களிடம் தனது பொருட்களுக்கு சிறப்பான வரவேற்ப்பை தரும் , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை குறிக்கும் .

பத்தாம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகர் சுயமாக தொழில் செய்து பெறும் வெற்றிகளையும் , ஜீவன முன்னேற்றத்தையும் கீர்த்தியையும் நிர்ணயம் செய்யும் பாவகமாக பத்தாம் வீடு அமைகிறது , சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் அமைப்பை தெளிவாக காட்டும் , மேலும் தனது தகப்பனார் செய்து வந்த தொழிலை ஜாதகர் நிர்வாகிக்கும் அமைப்பை பற்றி தெளிவாக தெரிவிப்பது ஜீவன பாவகமே , மேலும் அந்த ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக நிலையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த பாவகம் சிறப்பாக உதவி செய்யும் , ஒருவர் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழிலே சிறப்பானதா ? என்பதை நிர்ணயம் செய்யும் இடம் இது , இந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகர் அனைவரும் சுய தொழில் செய்வதே மிகுந்த நன்மை தரும் . மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதால் பெரும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் , பொருளாதார முன்னேற்றத்தை பற்றி தெளிவாக குறிப்பிடும் இடம் இந்த ஜீவன பாவகமே .

தொழில் அமைப்புகள்

உலகத்திலேயே மூன்று விதமான தொழில் அமைப்புகள் மட்டுமே உள்ளன அவையாவன 1 ) உற்பத்தி தொழில்கள் 2 ) உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வது 3 ) விற்பனை செய்த பொருட்களை பராமாரிப்பது ( அதாவது உற்பத்தி , விற்பனை , பராமரிப்பு ) என்று அனைத்தும் இம்மூன்றில் அடங்கிவிடும் . இதில் ஜாதகர் எதை தொழிலாக செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதை சுய ஜாதகம் கொண்டு தொளிவாக தெரிந்து கொண்டு , அதை தொழிலாக செய்தால் நிச்சயம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

No comments:

Post a Comment