jaga flash news

Thursday, 6 December 2012

மூல நடசத்திரம்

லக்கினம் முதல் மற்ற வீடுகள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் அமைப்பை பெற்ற ஜாதகி மிகவும் நல்ல குணங்களும் , யோக அமைப்பை பெற்றவராகவும் இருப்பார், மூல நடசத்திரம் என்ற ஒரே காரணத்திற்க்காக , ஜாதகியை தவிர்ப்பது முற்றிலும் தவறான அணுகு மு
றை .

ஒரு ஜாதகத்தில் நன்மையான, தீமையான பலன்களை தருவது பாவகம் எனும் பனிரெண்டு வீடுகளே , நட்சத்திரமல்ல என்பதை உணருங்கள் , நட்சத்திர பொருத்தம் 10 க்கு 10 அமைந்தாலும் , பாவகங்கள் நல்ல நிலையில் இல்லை எனில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்பதே உண்மை , நட்சத்திரத்தை வைத்து ஒரு ஜாதகத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை , இதனால் தம்பதியரின் வாழ்க்கை பாதிக்க படுமே அன்றி எவ்வித நன்மையையும் இல்லை.

உண்மையில் மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நபரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பதெல்லாம், முற்றிலும் பிற்போக்கு தனமான வாதம், பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள் காரணம் கேதுவின் நட்சத்திரம் அல்லவா இயற்கையாக இவர்களுக்கு புத்திகூர்மையும் அறிவில் சிறந்து விளங்கும் தன்மையும் அமைந்து விடும் , பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு சொல்வதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதே உண்மை காரணம், இந்த மூல நட்சத்திரம் உபய ராசி தனுசுவில் அமர்ந்து நெருப்பு தத்துவத்தை பெறுவதே இதற்க்கு காரணம்.

உபய ராசி : மற்றவர்களுக்கு பிரதி பலன் பாராமல் உதவி செய்யும் குணம் ,சுய கட்டுப்பாடு கொண்டவர்கள் பரந்த மனப்பான்மை கொண்ட உள்ளம் பெற்றவர்கள்.
உபய நெருப்பு தத்துவம் : இருளில் வெளிச்சம் தரும் மெழுகு வர்த்திக்கு இணையாக ஒப்பிடலாம் இவர்களை. இவர்களின் வேகமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றவர்களின் இருளடைந்த வாழ்க்கையில் வெளிச்சத்தை காட்டும் , ஆனால் மெழுகு வர்த்திக்கு எவ்வித பயனும் இல்லை.



இந்த மூல நட்சத்திர பெண்ணை மணந்து வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு தனது புத்தி சாலி தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவர் , நிர்வாக திறமையும் அதிகம் உண்டு, எனவே இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்லும் பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுகொள்ள மறுப்பார் காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்ற பிற்போக்கு எண்ணமே.

இந்த இடத்தில் தான் மாமனாருக்கும் , மருமகளுக்கும் ஆகாமல் போய் விடுகிறது , இதை ஜோதிடர்கள் மிகை படுத்தி மூல நட்சத்திரம் என்றாலே மாமனாருக்கு ஆகாது என்ற வதந்தியை பரப்பி விட்டு விட்டனர் என்பதே உண்மை மக்களும் ஜோதிடர்கள் சொல்வதே வேதவாக்காக எடுத்து கொண்டு மூல மற்றும் இது போன்ற ஆகாத நட்சத்திர பெண்களை ஒதுக்கி தள்ளி விடுகின்றனர் இதனால் இந்த நட்சத்திர அமைப்ப கொண்ட பெண்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்கு உரியது என்பதே உண்மை மக்கள் இனியாவது வழிப்புணர்வு கொள்வார்களா ?


ஆக இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்வது ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நட்சத்திரம் அல்ல சுய ஜாதாகமே என்பதே முற்றிலும் உண்மை .

No comments:

Post a Comment