jaga flash news

Thursday, 6 December 2012

களத்திர பாவகம்

பெண்களின் ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் எனும் 7 ம் பாவகம் பாதிக்க படுமாயின் , ஜாதகிக்கு திருமண வாழ்க்கை தாமதமாக நடைபெறும், குறிப்பாக 28 வருடங்களுக்கு பிறகே நடக்கும் , மேலும் ஜாதகிக்கு நல்ல கணவன் கிடைப்பது அரிது சிலருக்கு மறுமணம் செய்யவேண்ட
ிய நிர்ப்பந்தம் ஏற்ப்படும் , அதாவது பெண்ணின் ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் 6 , 8 , 12 ம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் மேற்கண்ட நிலை ஏற்ப்படும் , ஒரு வேலை களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் , அந்த பெண்ணின் நிலை பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு வந்துவிடும் , வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும் .

சர இலக்கின பெண்களின் களத்திர ஸ்தானம் 11 ம்வீட்டுடன் தொடர்பு பெறுவதும் , ஸ்திர இலக்கின பெண்களின் களத்திர ஸ்தானம் 9 ம்வீட்டுடன் தொடர்பு பெறுவதும், உபய இலக்கின பெண்களின் களத்திர ஸ்தானம் 7 ம்வீட்டுடன் தொடர்பு பெறுவதும் பெண்களின் ஜாதக அமைப்பில் 200 சதவிகிதம் தீமையான பலனையே தரும் என்பதில் சந்தேகமே இல்லை , இந்த அமைப்பை பெற்ற ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2 ம் வீடும் கெட்டு விட்டால் அந்த பெண்ணுக்கு திருமண வாழ்க்கை என்பதே நிச்சயம் இல்லை குடும்பமும் அமையாது . இந்த அமைப்பை பெற்ற பெண்கள் ஜோதிட ரீதியாக பாதிக்கப்பட்ட களத்திரம் , மற்றும் குடும்ப ஸ்தானங்களுக்கு கிரகங்களுக்கு உரிய பிரிதி பரிகாரங்களை செய்து நன்மை பெறலாம் , குறிப்பாக களத்திர ஸ்தான அதிபதி களத்திர பாவகம் பாதிக்க காரணமான கிரகங்களுக்கு பிரிதி பரிகாரங்கள் செய்வது சிறப்பான மன வாழ்க்கையை அமைத்து தரும் .

குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்க பட்ட பெண்ணின் ஜாதகத்திற்கு , குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருக்கும் ஆணின் ஜாதகத்துடன் சேர்த்து திருமணம் செய்து வைத்தால், நிச்சயம் திருமண வாழ்க்கையில் எவ்வித சிக்கல்களும் வராது , ஆணின் ஜாதகத்திலும் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்க படும் பொழுதுதான் திருமண வாழ்க்கை தம்பதியர்க்கு அதிக இன்னல்களை தந்து விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது .

பெண்களின் ஜாதகத்தில் குடும்பம் , களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும் , பொதுவாக ஆண் பெண் இவருடைய ஜாதக அமைப்பிலும் குடும்பம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்க படும் பொழுது, ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்க படுகின்றனர் , ஜாதகியின் மனதை புரிந்துகொள்ளாத கணவன் , ஆறுதல் சொல்லாத உறவுகள் , சரியான வாழ்க்கை வழிகாட்டாத பெற்றோர்கள் , சரியான நேரத்தில் உதவி செய்யாத சகோதர அமைப்புகள் என ஜாதகிக்கு சாதகமாக யாரும் இருக்க மாட்டார்கள் , தம்பதியற்குள் இருக்கும் பிரச்சனையை ஊதி பெரிதாக்குவார்களோ தவிர ஒற்றுமையாக வாழ வழிகாட்ட மாட்டார்கள் , மேலும் கணவனுடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தவோ , உதவி செய்யவோ யாரும் இருக்க மாட்டார்கள் , உறவுகளும் நண்பர்களும் ஜாதகியின் விஷயத்தை வைத்து எள்ளி நகையாடுவார்களோ தவிர , நன்மை செய்ய யாரும் நிச்சயம் வர மாட்டார்கள் .

பெண்கள் தனது ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்க பட்டு இருப்பின் எக்காரணத்தை கொண்டும் , ஜாதகி தனது குடும்ப விஷயங்களை வேறு யாரிடமும் சொல்லாமல் தானே சுயமாக நல்ல தீர்வை எடுப்பது நலம், அல்லது தனது வாழ்க்கை துணையிடம் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவருவது நலம் , ஏனெனில் வாழ்க்கை துணை என்பவர் உங்களது கணவர், மேலும் அவரிடம் முழு உரிமை தங்களுக்கு 100 சதவிகிதம் உண்டு என்ற விஷயத்தை, மனதில் நிறுத்தினால் நிச்சயம் தங்களுக்கு நன்மையே நடக்கும் , மேலும் தங்களது தனிப்பட்ட விஷயங்களில் வேற்று நபர் யாரும் தலையிடுவது நிச்சயம் தங்களுக்கு நன்மை தர வாய்ப்பே இல்லை, அது பெற்றோர் என்றாலும் சரி , சகோதர அமைப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி தங்களுக்கு அதிக துன்பத்தையே தரும் .

தங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தாங்களே தீர்வு தேடிக்கொல்வதுதான் சரியானது , அதுவே நன்மை தரும் , தம்பதியர் பிரச்சனைகளுக்கு அரசியல் சட்டம் கூட எவ்வித நன்மையையும் செய்ய முடியாது, என்பதே இதுவரை நாம் கண்ட உண்மை என்பதை எவராலும் மறுக்க இயலாது, மேலும் சட்ட திட்டம் போட்டு குடும்ப உறவுகளை நலம் பெற செய்ய இயலாது , சட்டத்தால் பிரித்து வைக்க முடியுமோ தவிர தம்பதியரை சேர்த்துவைக்க நிச்சயம் முடியாது , தம்பதியரின் மனதில் நம் குடும்பம் , நாம் குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இயற்கையாக வரவேண்டும் .

ஒருவருக்கு வாழ்க்கை துணை சிறப்பாக அமையததிர்க்கு முக்கிய காரணம் அவரவர் ஜாதக நிலையே என்பதை மனதில் கொள்வது அவசியம் , சுய ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதிக்கப்படும் பொழுதே சரியான மன வாழ்க்கை அமைவதில்லை , சரியான வாழ்க்கை துணையும் கிடைப்பதில்லை , மன வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது , எனவே திருமணத்திற்கு முன்பே வரன் வதுவை தேர்ந்தெடுக்கும் பொழுது , ஜாதக நிலையை நன்றாக ஆராய்ந்து களத்திரம் , குடும்ப ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகத்தை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது நலம் , ஒருவேளை திருமணம் நடந்துவிட்டால் , திருமணத்திற்கு பிறகு ஜாதக அமைப்பை தெளிவாக ஆராய்ந்து அதற்க்கு உண்டான சரியான தீர்வை பெறுவதே நலம் தரும் .

மேலும் பல ஜோதிடர்கள் சொல்வைதை கேட்டுக்கொண்டும் சில குடும்பங்கள் பிரிவை நோக்கி செல்வதும் உண்டு , திருமணம் ஆனா பிறகு தங்களது ஜாதகதிர்க்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திற்கு பொருத்தமே இல்லை எப்படி திருமணம் செய்திர்கள் என்று கேட்டால், வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் தம்பதியரின் மனதில் நிச்சயம் மிகப்பெரிய குழப்பமும் , சந்தேகமுமே ஏற்ப்படும் , இப்படி பல தம்பதியரின் திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு தூபம் போட்ட ஜோதிடர்களும் நிறைய பேர் உண்டு , ஒருவருக்கு வாழ்க்கை துணை அமைவதே அவரவரின் விதி பயன், இதில் ஜோதிடர் தம்பதியரின் வாழ்க்கை சிறப்பாக இருக்க நல்ல ஆலோசனை வழங்குவதை விட்டுவிட்டு , அவர்களின் வயிற்றில் புளியை கரைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் , தாம்பத்திய வாழ்க்கையின் அருமையை , அன்பாக ஒற்றுமையாக குடும்பம் நடத்துவது எப்படி என்று அவர்களுக்கு புரிய வைப்பதே சிறந்த ஜோதிடன் கடமையாக இருக்க முடியும், தங்களுக்கு விதித்ததை தாங்களே அனுபவிக்க வேண்டும் என்பதே உண்மை . எனவே திருமணத்திற்கு பிறகு பொருத்தம் பார்ப்பதை விட்டு விட்டு குடும்பம் நல்ல முறையில் நடத்துவது எப்படி என்று பார்ப்பதே புத்திசாலித்தனம் .

இறுதியாக திருமண வாழ்க்கையில் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியவர்கள் ஆண்களே , காரணம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைக்கு தலை முறை தலை முறையாக பாதிக்கிறது என்பதே உண்மை , முன்னேற்றம் பெறாத ஜாதக அமைப்பில் எல்லாம் பெண்ணுக்கு செய்த கொடுமையின் காரணமாக , சுய ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்கள் கூட யோகபங்க நிலைக்கு ஆளாகி , விருத்தியை தாராமல் இருப்பதை அனுபவத்தில் காண்கிறோம் , மேலும் ஒரு ஜாதகனுக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை துணை அமைந்தாலும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவர்களால் வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு , வாழ்க்கை துணைக்கு கண்ணை மூடிக்கொண்டு நன்மையே செய்யுங்கள் , சிறிது காலம் வரை சிரமத்தை தரும், ஆனால் சில கலாங்களுக்கு பிறகு இனிமையான இல்லற வாழ்க்கையாக மாறிவிடும் , இது அனுபவத்தில் பலருக்கு அறிவுறுத்தி நன்மை பெறுவதை கண்ணால் கண்டவன் என்ற முறையில் சொல்கிறோம் , வாழ்க்கை துணையின் இன்னல்களை ஒரு ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது ஜாதகன் செய்த முன்ஜென்ம கர்ம வினை பதிவு கழிந்து , மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது என்பது முற்றிலும் உண்மை .

No comments:

Post a Comment