jaga flash news

Thursday 13 June 2013

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..!

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..!

பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது.. பெருமையாகவும் இருக்கிறது.
இப்போதைய தமிழர்களை நினைத்தால்…. சரி விடுங்க..!
ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/57511466188800000 0 – வெள்ளம்
1/57511466188800000 000 – நுண்மணல்
1/23238245302272000 00000 – தேர்த் துகள்.

@ நீட்டலளவு..
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்.
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்

@ முகத்தல் அளவு.
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி

@ பெய்தல் அளவு..
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி
____________ ______
கால அளவு.
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
____________ ______
எண்ணல் அளவை.
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே….கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி – 1அற்புதம்
10அற்புதம் – 1நிகற்புதம்
10நிகற்புதம் – 1கும்பம்
10கும்பம் – 1கணம்
10கணம் – 1கற்பம்
10கற்பம் – 1நிகற்பம்
10நிகற்பம் – 1பதுமம்
10பதுமம் – 1சங்கம்
10சங்கம் – 1சமுத்திரம்
10சமுத்திரம் – 1ஆம்பல்
10ஆம்பல் – 1மத்தியம்
10மத்தியம் – 1பரார்த்தம்
10பரார்த்தம் – 1பூரியம்

2 comments:

  1. அய்யா ... வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா எனக்குத் தெரிந்த அளவுகள் வைத்திய முறைப்படி அளிக்கிறேன். Wed. 7, Aug. 2022 at 1.41 pm.

    *அளவுகள் :*

    3 3/4 குன்றி = 1 பணவெடை
    1 வராகனெடை = 9 பணவெடை
    32 குன்றி = 1 வராகனெடை
    8 குன்றி = 1 மாஷா
    3 குன்றி = 1 பண வெடை
    4 நெல் எடை = 1 குன்றி மணி
    40 குன்றி = 1 கழஞ்சி
    1 1/4 வராகனெடை = 1 கழஞ்சி.
    1 தோலா = 1 ரூபாய்
    3 1/4 வராகனெடை = 1 தோலா
    3 தோலா = 1 பலம்
    10 வராகனெடை = 1 பலம்

    24 தோலா = 1 கச்சா சேர்
    8 பலம் = 1 கச்சா சேர்
    72 தோலா = 1 படி (பக்கா சேர்)
    40 தோலா = 1 ராத்தல்
    40 பலம் = 1 வீசை
    5 சேர் = 1 வீசை
    16 பலம் = 1 நாழி


    *அளவுகள் : அளத்தல் :*

    60 துளி = 1 தேக்கரண்டி
    8 தேக்கரண்டி = 1 அவுன்ஸ்
    6 அவுன்ஸ் = 1 ஆழாக்கு
    4 ஆழாக்கு = 1 புட்டி (குப்பி)
    8 ஆழாக்கு = 1 படி
    சங்கு (பாலடை) = 3/4 −1 அவுன்ஸ்



    <->-¢->-©©->-¢-<->


    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  2. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா எனது இந்த email-ஐடியையே பயன்படுத்துங்கள். Sivajansikannan & sivajansikannan இந்த இரண்டுமே வேண்டாம் அய்யா. அடுத்து எனது முகநூலுக்குள் நுழைய முடியவில்லை. மாறாக வேறு எதெல்லாமோ ஓப்பன் ஆகிறது. அடுத்து, way 2. வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete