jaga flash news

Thursday, 13 June 2013

வீட்டில் பூஜை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை!

வீட்டில் பூஜை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை!
Temple images
பூஜை செய்வதற்கு முன் சில ஏற்பாடுகளைச் செய்வோம் இல்லையா! அதை இனியேனும் முறைப்படி செய்வோமே! சுவாமியின் இடதுபுறம் சாம்பிராணி காட்டும் தூபக்கரண்டியையும், வலதுபுறம் கற்பூரத்தட்டையும் வையுங்கள். இடதுபுறம் பழங்களையும், வலதுபுறம் பலகாரங்களையும் வையுங்கள். தீர்த்தம் பருகிய பிறகு, மீதமுள்ளதை மறுநாள் காலையில் செடிகள், மரங்களில் கொட்டுங்கள். பூந்தொட்டி இருந்தால் அதில் விடலாம். தரையில் ஊற்றக்கூடாது. படங்களையும், பூஜைக்குரிய மேஜையையும் வாரம் ஒருமுறை துடையுங்கள். விளக்கை தினமும் தேய்த்தால் நல்லது. பெரிய விளக்காக இருந்தால், வாரம் இருமுறையாவது சுத்தம் செய்யுங்கள். வெறுமனே தீபதூபம் காட்டுவதை விட, கடவுளைக் குறித்த நாமங்கள், பாடல்கள், ஸ்லோகங்களை உச்சரித்தபடி காட்டுவதே உயர்ந்தது. பூஜை நேரத்தில், குடும்பத்தினர் எல்லாரும் பத்துநிமிடமாவது செலவழிக்க வேண்டும். கூட்டாக பாடல்களைப் பாடுவது, ஸ்லோகங்களைச் சொல்வது அதிக பலனைத் தரும்.

No comments:

Post a Comment