jaga flash news

Wednesday, 12 June 2013

சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?

சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?


ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார். உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார். உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.

அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு சந்திரன் சிரித்தான். இதனால் விநாயகருக்கு மேலும் கோபம் வந்து விட்டது. ``பெரியோர் முன்னிலையில் என்னைச் சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கடவது'' என சபித்தார். பிறகு அவர் அதற்கொரு பரிகாரமும் சொன்னார்.

ஆவணி சதுர்த்தியன்று சந்திரனைப் பாராமல் தன்னைச் சிறப்பாக பூஜிக்கின்றவர்கள் தம் அருளைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனகூறி அருளினார். அது முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது

No comments:

Post a Comment