jaga flash news

Friday, 14 June 2013

வாடகை வீட்டிற்கு வாஸ்து அவசியமா?

வாடகை வீட்டிற்கு வாஸ்து அவசியமா?

வாடகை  வீட்டிற்கு வாஸ்து அவசியமா?


எலி வலையானாலும் தனி வலை வேண்டும்.

ஏன்?

உண்பதற்கும். உறங்குவதர்க்கும் ஒரு இடம் வேண்டும். 

அதனால்தான். 

ஓய்வெடுக்க பறவைகளுக்கு ஒரு கூடு.

மனிதனுக்கு வீடு.  

அந்த வீடு வாஸ்து குறையின்றி இருந்தால், வாழ்க்கை வளம் பெரும்.  இதுதான் அடிப்படை தத்துவம். 

சரி...... வாஸ்துன்னா என்னங்க? 

நல்ல கேள்வி.  என் பதில் இதுதான். 

ஒரு மனிதனின் உடல் அமைப்பு எப்படி இருக்கும்?  

தலை ஒரு பாகம். உடல் இரண்டு பாகம், கால் நான்கு பாகம். இதுதாங்க அடிப்படை. இந்த அளவு மாறினா எப்படி இருக்கும்?  நாலடி நீளத்திற்கு தலை உள்ள மனிதனை கற்பனை செய்து பாருங்க. 

பார்க்கவே சகிக்காது. 

இந்த அளவுகள் எது மாறினாலும் பார்வைக்கு விகாரமாகவும், உடல் ரீதியாக பல அசௌகரியங்களை சந்திக்க நேரிடும்.  இதுதாங்க வீட்டுக்கும்.  அதுதான் வாஸ்து. 

சரி... வேகமாக தண்ணீர் ஓடும் ஆற்றில் இறங்குகிறோம்,  தண்ணீர் செல்லும் திசைக்கு ஏற்ப,  நாமும் சென்று விட்டால், வேகம் குறைந்த இடத்தில் நாமும் கரை ஏறி விடலாம். 
ஆனால் எதிர் நீச்சல் போட்டால் என்னாகும்?

நம் சத்தி இழந்து ஒரு கட்டத்தில் தண்ணிரில் முழ்க வேண்டியதுதான்.  இதுதாங்க வாஸ்து.  

இந்த பூமி பஞ்ச பூதங்களின் கட்டுபாட்டில் இருக்கிறது.  இந்த பூமியில் வாழும் நாம் பஞ்சபூதங்களுக்கு கட்டுப்பட்டு இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. 

மாறாக எதிர் நீச்சல் போட்டால் தண்ணிரில் முழ்க வேண்டியதுதான்.

சார் ஒரு  சந்தேகம்.... வாஸ்து என்பது வீட்டு உரிமையாளருக்கா?

அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. வீட்டு உரிமையாளருக்குத்தான்.
அப்படியானால் வாடகை வீட்டில் இருப்பவருக்கு வாஸ்து அவசியமா?

அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.  அவசியம்தான். 

அட போங்க சார்.  குழப்புறிங்க.  வாடகை வீடு என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமானது.  ஆனால் அதில் வசிப்பவர் ஒப்பந்த அடிப்படையில் வசிக்கிறார். 

அவருக்கு ராசியான மனை, ராசியான திசை என்கிற கட்டுபாடுகள் எதுவும் இல்லை. நிலைமை இப்படி இருக்க,  அந்த வீட்டில் வசிப்பவருக்கு வாஸ்து பாதிப்பு எப்படி வரும்.

ராசா.... நியாயமான கேள்விதான்.  வீடு நாகபட்டினத்தில் இருக்கு.  ஆனால் வீட்டு உரிமையாளர் நன்னிலத்தில் இருக்கார்ன்னு வச்சுக்குவோம்.  வீட்டு உரிமையாளருக்கு எந்த பாதிப்பும் வராது.

காரணம் என்ன?

அந்த வீட்டின் தாக்கம் அவரை பாதிக்காது.  ஆனால் நாகபட்டினத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் கோவிந்தசாமி, அவ்வீட்டால் வரும் பாதிப்புகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.

புரியலையே?

மனை பட்டா யார் பெயரில் இருக்கிறது என்பதல்ல வாஸ்து.  அந்த வீட்டில் யார் குடி இருக்கிறாரோ அவருக்கு உரியதுதான் வாஸ்து.

உண்மையில் வசிப்பது வாடகை வீடானாலும் வாஸ்து அவசியம். இந்த விசயத்தில் எந்த சமாதானமும் எடுபடாது.  உதாரணமாக அலுவலகத்திற்கு அருகில் வீடிருக்கிறது என்பதற்காக வாஸ்து குறைபாடுள்ள வீட்டில் குடி இருக்க  தயாராவார்கள்.   இது நமக்கு நாமே பள்ளம் வெட்டி கொள்வதற்கு சமம்.

இன்னும் சிலர் கடை வீதி பக்கம், ஸ்கூல் கூட பக்கத்தில் இருக்கு என்றெல்லாம்  மற்ற விஷயங்களை சீர் தூக்கி பார்பார்களே தவிர, வசிக்கும் வீடு வாஸ்து குறை இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்பதே இல்லை.

விளைவு?

வாழ்க்கை மிக சாதாரணமாக இருக்குமே தவிர, வளர்ச்சியை எட்டாது.  குறிப்பாக ஈசாண்யம் குறைந்த வீட்டை அந்த ஈசனாலும் காப்பாற்ற முடியாது.

ஓடி ஓடி உழைத்தாலும் மிஞ்சுவது உழைப்பாக இருக்குமே தவிர, செல்வமாக பொருளாக இருக்காது.

காலையில் வெளியேறிய குருவி மாலையில் கூடு வந்து சேர்வது போல், ஒரு அர்த்தமற்ற வாழ்க்கைதான் அரங்கேறும்.  அதனால் குடி இருப்பது சொந்த வீடா, வாடகை வீடா என்பது முக்கியமல்ல.  வாஸ்து அவசியம்.

No comments:

Post a Comment