jaga flash news

Saturday, 15 June 2013

மறுமணம் புரிய திருமண பொருத்தம் அவசியமா?

மறுமணம் புரிய திருமண பொருத்தம் அவசியமா?



மறுமணம் புரிய திருமண பொருத்தம் அவசியமா?

இந்த கேள்வி ஜோதிட நம்பிக்கை உள்ள அத்தனை பேர் மனதிலும் நீங்காமல் நிழலாடுகிறது. கேள்விக்கு பதில் தரவேண்டிய ஜோதிடர்கள் காந்தபுலம் மாதிரி எதிர் எதிர் அணியில் நின்றுகொண்டு ஆளுக்கொரு கருத்தை சொல்கிறார்கள்.

எப்படி?

முதல் மணமோ, மறுமணமோ பொருத்தம் பார்த்துதான் ஆகணும் - இது ஒரு சாரார்.

நியாயம்தான்.

தாரதோஷ அமைப்பு இருக்கிறதுனால தான் முதல் கல்யாணத்திற்கு முற்றுப் புள்ளி விழுந்துச்சு. அம்மி மிதிச்சதும், அருந்ததி பார்த்ததும் அர்த்தமில்லாம போச்சில்ல. அப்பறம் என்ன? தார தோஷம் கழிஞ்சு போச்சு. இனி பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.  இது மறுசாரார்.

அட... இதுவும் நியாமாத்தான் படுது.

அது சரி.

இருதரப்பு வாதங்களையும் கேட்கும் ஜோதிட ஆர்வலர்கள் கடைசியில் ஆவது கன்பியூஸ். மறுமணம் என்றில்லை. திருமண பொறுத்த கணிதத்தில் ஒருமித்த கருத்து எப்போதும் எட்டுவதில்லை.

அஷ்டதிக் பாலகர்கள் மாதிரி ஆளுக்கொரு கருத்து, ஆளுக்கொரு வாதம்.  நான்கு ஜோதிடர்களிடம் போனால் நான்கு விதமான கருத்து.

இதில் இன்னும் சிலர். பொருத்தம் இருக்கிறது. எதற்கும் குலதெய்வ கோவிலில் பூ கட்டி வச்சு பார்த்துடுங்களேன் என்று கூடுதல் தகவலை சொல்லி குழப்பி அனுப்புகிறார்கள்.

இப்போ நான்கையும் நான்கையும் கூட்டினால் எட்டு.  இதை யாரு கூட்டினாலும் வர வேண்டிய விடை எட்டுத்தானே. ஜோதிடர்களை பொருத்தவரை ஒருவர் கூட்டினால் எட்டும், அடுத்தவர் கூட்டினால் ஆறும் வருகிறதே ஏன்?

காரணம் விஷய ஞானத்தில் இருக்கும் விரிசல்.  சிலர் பத்து பொறுத்த கணிதத்தை வைத்துக் கொண்டே மொத்த விஷயத்தையும் முடிவு செய்கிறார்கள்.

அதுக்கு இது பொருத்தம், இதுக்கு அது பொருத்தம் என்று பட்டியல் போட்டு ஒப்புவித்தால் மட்டும் போதுமா? ஜாதக ஆய்வே சிறந்தது.

என்னை பொருத்தவரை பத்து பொறுத்த கணிதத்தையே ஒதுக்கி விடலாமா என்று யோசிக்கிறேன். காரணம் அதில் ஒன்றும் சரக்கு இருப்பதற்கான  சங்கதி தெரியவில்லை.

அதை நம்பி திருமணம் செய்வதும், சீட்டு குலுக்கி போட்டு ஒத்தையா ரெட்டையா பார்ப்பதும் ஒன்றுதான்.  பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி கண்ட தொகையால் கண்ட பலன் என்ன?


உதாரணமாக தேவகனத்தில் பிறந்த பெண்ணிற்கு சாஸ்திர சான்று என்ன?

அடடா.. குழந்தாய்... பெண்ணானவள் தேவகனத்தில் பிறந்திருக்கிறாள். அதனால் தான் என்ற அகந்தை அற்றவளும், பெரியோரிடம் பணிவு காட்டுகிறவளும்,பதிக்கு அடங்கியவளும், உயர்ந்த சிந்தனை கொண்டவளுமாய் இருப்பாள் என்கிறது.

ஆனால் ரெண்டிலே பாவ கிரகம் இருந்தால் இந்த கருத்து அடிபட்டு போகிறது. தேளுக்கு கூட பிறந்த தங்கச்சி மாதிரி இருக்கும்.

தேளுக்கு கூட வாளுலதான் விஷம். அம்மணிக்கு வாயிலேயே இருக்கும். எங்கே போச்சு பணிவு,என்னானது அடக்கம். ஒடுக்கம். ஆக கணபொருத்தம் பொருத்தம் என்பது தேவையிலாத ஒன்றாக தெரியுதா?



அடுத்து பாருங்க வசிய பொருத்தம். மேஷத்திற்கு சிம்மம் வசியம்.  வசியம்னா என்ன?

அடேய் அம்பி... ரெண்டு ராசி புள்ளைகளையும் ஒண்ணா சேர்த்து வச்சா, வம்பு தும்பு எதுவும் வராது. பாலும் தண்ணியும் பாகுபாடு இல்லாம சேர்ந்த மாதிரி ஒன்னுக்குலே ஒண்ணா இருக்கும்.

சொன்னாங்க இல்லை. சொன்ன மாதிரி நடக்கணுமா இல்லையா? களத்திர பாவ கிரகம் சரி இல்லைன்னா போட்டியை தூக்கிகிட்டு அப்பா வீட்டுக்கு போறதிலேய இருக்கும்.

என்ன காரணம்?

ஆராய்வோம்.

ஜாதகம் என்பது என்ன? ஒரு ஜாதகனை பற்றி இன்னது...இன்னது...இன்னது..,,,இன்னது...இன்னது...இன்னது.., என்று விளக்கி சொல்லும் ரிபோர்ட்.  அந்த ஜாதகனுக்கு அமையும் வாழ்க்கை, தரத்தில் இருந்து, வாழ்க்கை துணைவரை விலாவாரியாக எடுத்து சொல்லும்.

ஆக ஜாதகம் என்பது நிலையானது. அங்கே அமர்ந்த கிரகங்கள் நம் இஷ்டத்திற்கு எல்லாம் இடம் மாற்ற முடியாது.

மறுமணம் தருகிற கிரக நிலைகள் இருந்து விட்டால், முழுமையான ஜாதக ஆய்வால் குறைந்த பட்ச சேதாரங்களை குறைக்க முடியுமே தவிர, மாற்றிவிட முடியாது.


புரியலையே?

தார தோஷ ஜாதகம் என்றால் மறுமணத்தை தரும் என்பது விதி. ஆனால் கொஞ்சம் கவனமாக பொருத்தம் செய்தால் மணமேடை இரண்டு என்பதை தவிர்க்க   பார்க்கலாம்.

கவனிக்கவும்.. தவிர்க்க பார்க்கலாம்.




சரி..!

நமக்கு தேவை களத்திர பாவம். அங்கே உபத்திரவம் தருகிற கிரக நிலைகள் உட்கார்ந்திருந்தால் வாழ்க்கையில் வருத்தம் என்பது தொடரவே செய்யும்.

அது தாமத திருமணமா? தாரதோஷ விவகாரமா? தலிஎழுத்துடா சண்டாளா, போட்ட எழுத்துடா பொண்டாட்டி என்று அலுத்துக்க வைக்கிற சமாச்சாரமா என்பது ஆய்வுக்கு உரிய விஷயம்.


எப்படி விளக்குக?

இப்போ ஓன்று எழில் ராகு கேது இருந்து கூடவே வாழ் பிடிச்ச மாதிரி, ஏழாம் அதிபதியோ, சுக்கிரனோ இருந்தாலும் சரி,  அல்லது ஓன்று ஏழில் செவ்வாயும், சனியும் இருந்து இருவரில் ஒருவர் நீச்சம் பெற்றிருந்தாலும் சரி, தாலி கட்டி குடும்பம் நடத்த முடியாம வேலி போடுறது இந்த கூட்டணிதான். . ஆணோ பெண்ணோ முப்பதுக்கு முன்னால திருமணம் என்பது சொப்பனம்தான்.


சரி!!

அதுவே சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனையாகி இருவரில் ஒருவர் லக்னத்தில் இருந்தால் கீப்பு வைக்கிறதுலே, மாப்பிளை சூப்பர்.  ஆள் டிப் டாப்பா ஆபிசர் மாதிரி இருந்தாலும் உள்ளே தோண்டி பார்த்தால் உண்மை இப்படி இருக்கும்.

எப்படி?

பூனை கவிச்சியை வேருத்துட்டு கடற்கரை ஓரமா போச்சாம்.


ஏன்?

அட கருவாடு கிடைக்குமான்னுதான்.

அடடா.. அப்பறம்.

அப்பா சூரியனும், பிள்ளை சனியும் பரிவர்த்தனை ஆனாலும் தப்புதான். ஒன்னு ஏழில் வீடு மாறி உட்கார்ந்துட்டா ஜாதகர் பாடு திண்டாட்டம்தான்.

கல்யாணத்திற்கு பிறகு மாதம் முப்பது நாளும் கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, ஏழரை சனி, இப்படி எல்லா சனியும் பிடிச்ச மாதிரி சொல்ல முடியாத வேதனை. எப்படியும் ஆலமரத்தடியோ, கோர்ட்படியோ வந்துரும், வந்துரும்.


சரி

ஒரு ஜாதகத்தில் 6,7 தொடர்பு ஏற்பட்டால் ஆபத்து வேறுவிதம்.

எப்படி?

பொங்கி போட வந்த பொண்ணு வங்கி சேமிப்பு மாதிரி வச்சிருக்கும் வார்த்தையை. வாயை திறந்தால் வறுவல்தான். அனலுக்கு பயந்து அடுப்புக்குள்ளே குதிக்க முடியுமா, விதியேன்னு வாழ  வேண்டியதுதான்.


சரி.. இதற்கு தீர்வுதான் என்ன?

அப்படி கேளு ராசா.... ராசி பொருத்தம்ன்னு நான் பூசி மொழுக தயாரா இல்லை. லக்னத்தில் சுபர் இருந்தால் பக்குன்னு பிடிச்சுக்கலாம். கேந்திர கோணங்களில் சுபர்கள் இருந்தால் ஆளு பதவுசு தங்கம்.  ஒன்னு ஏழாம் அதிபதியை குரு பார்க்கிற அமைப்பு இருந்தால் நல்லது.

ஏன்?

அம்மணி ஆட்டம் போட்டாலும் காதுக்கு பலமா கதவு போட்டிருப்பார். கிடக்குது கழுதை. இது குணமே இதுதான் என்று அமைதியாகி விடுவார். பிரச்சனை பெரிய அளவில் போய் விடாது.


அடுத்து ஒன்னு ரெண்டுக்கு சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டால் நல்லது.

என்ன காரணம்?

சுக்கிரன் லக்னதிலோ, இரண்டிலோ இருந்தால் சக்கரை ஆலை முதலாளி மாதிரி சொக்கிற வார்த்தைக்கு சொந்தக்கார்கள். பொறி வச்சு பிடிக்கிறதுலே  நரி தந்திரம்தான்.

அதோட மேற்படி மேட்டருல ஆள் மாஸ்டர் டிகிரிக்கு சமம்.  அதனால் உதயத்தில் ஆரம்பிக்கும் பிரச்சனை அஸ்தமனத்தில் அடங்கி போய்டும்.


அது சரி...அடுத்து.

இரண்டில் பாவ கிரக தொடர்பு இருந்தால் மற்றவர் ஜாதகத்தில் சுப கிரகம் இருக்கிற மாதிரி அமைக்க வேண்டும்.

என்ன காரணம்.?

இரண்டில் பாவி இருந்தால் கேட்டான்  பாருங்க ஒரு கேள்வி, ஈரலே தெரிச்சு போற மாதிரின்னு  கேள்வி பட்டதுண்டா... அதுதான் இது.

வார்த்தைகளில் வக்கிரம் மற்றும் வன்முறை. கூடவே அலச்சிய அகம்பாவ, திமிரான, தான்தோன்றித்தனமான இப்படி கோடிட்ட இடங்களை பல்வேறு வார்த்தைகளை போட்டு பாராவாக நிரப்பி கொள்ளலாம்.


இதுவே ஆணிற்கு இருந்தால் அனுசரித்து போகும் சமூகத்திற்கு பெண்ணிற்கு இருந்தால் பெரிய பிரளயமே வந்து விடும் அல்லவா?

அட போங்க ....அதனால தானே ரோஷக்காரனுக்கு பொண்ணை கொடு, ரோஷம் கெட்டவனுக்கு கடனை கொடுன்னு சொல்லி வச்சாங்க.


இருக்கட்டும்.

எந்த வகை திருமணமாக இருந்தாலும் சரி, பொருத்தம் பார்க்கும் போது எந்த சமாதானமும்   அடையாமல் முழுமையாக கிரக நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இணைப்பதே சிறப்பு.

1 comment: