jaga flash news

Tuesday, 30 June 2015

களத்திர தோச பரிகாரம்

த்திர தோச பரிகாரம்
-----------------------------------
மண் பானை ஒன்று வாங்கி வந்து , அதற்கு வண்ணமடித்து , அதில் நீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து , அதன் அருகே அமர்ந்து அதற்கு மாலை சூட்டி, மஞ்சள் துண்டினால் அதற்கு தாலி கட்டி ,பின் அதை காலால் தள்ளி உடைத்து விடவேண்டும். இது ஆதியில் நடைமுறையில் இருந்த பரிகாரம். விதவா தோசம் உள்ளவர்கள் திருமணத்திற்கு முன் இந்த பரிகாரத்தை செய்துகொள்ளலாம். ஆண்கள் இவ்வாறு செய்யலாம். பெண்களாக இருந்தால் பானைக்கு மாலை சூட்டி , தனக்கு தானே ஒரு மஞ்சள் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு. பானையை காலால் தள்ளி உடைத்துவிட்டு , கழுத்தில் கட்டிய மஞ்சள் துண்டையும் கழற்றி நீர் நிலைகளில் போட்டு விடவேண்டும்.

திருஷ்டி பொம்மை

திருஷ்டி பொம்மை
-----------------------------------
புதிதாக வீடு கட்டுபவர்கள் ,வீட்டின் முகப்பில் பூசணிக்காயில் திருஷ்டி பொம்மை படம் வரைந்து வைத்திருப்பார்கள். தெருவில் போவோர் வருவோர் எல்லாம் புது வீட்டை பார்த்துக்கொண்டு போவார்கள். பெரும்பாலானர்வர்கள் ஒரு ஏக்க பெருமுச்சு , பொறாமை உணர்ச்சியுடன் வீட்டை பார்ப்பார்கள், அந்த பார்வை வீட்டிற்கும், வீட்டு உரிமையாளருக்கும் பாதிப்பை தரும். ஒரு வினோதமான பொருளை வீட்டின் முகப்பில் வைத்தால் எல்லோருடைய பார்வையும் வீட்டின் மீது விழாமல் அந்த வினோத பொருளின் மீது விழும். இதன் மூலம் வீடும், வீட்டின் உரிமையாளரும் தீய பார்வையிலிருந்து தப்புவர். கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி. பூசணிக்காய்க்கு தீய பார்வையிலிருந்து வரும் கெட்ட அதிர்வுகளை கவர்ந்து தனக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு.

புத்திர பாக்கியம் தரும் அரச மரம்

புத்திர பாக்கியம் தரும் அரச மரம்

அரச மரத்தை வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே அரச மர வழிபாடு இருந்ததாக கருதப்படுகிறது. அரச மரத்தின் கீழ் அமர்ந்துதான் புத்தர் ஞானமடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அரச மரத்தை போதிமரம் எனவும் குறிப்பிடுவர். இந்துக்களும்,பௌத்த மதத்தினரும் அரச மரத்தை புனிதமாக கருதுகின்றனர்.
மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். அரசமரத்தடியில் விஷ்னு பகவான் பிறந்ததாகவும், அசுரர்களிடம் தேவர்கள் தோற்றுப்போன நேரத்தில் விஷ்னு பகவான் அரசமரத்திற்குள் ஒழிந்திருந்ததாகவும்,கிருஷ்ணர் அரச மரத்தடியில் இறந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மரத்தை வெட்டுவது பிரம்மஹத்தி தோசத்திற்கு சமமானது என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஹோமங்களில் அரசமர குச்சிகளை சமிதாக பயன்படுத்துவர். ஹோமாதி காரியங்களைத்தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அரசமரத்தை வெட்டக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தை குழந்தையாக பாவிக்க வேண்டும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
ஜோதிடத்தில் குரு கிரகத்தை புத்திர காரகன் என குறிப்பிடுவர். பூசம் நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குருவாகும். பூசம் நட்சத்திரத்திற்குரிய விருட்சம்(மரம்) அரசமரமாகும். அதாவது அரச மரத்தில் குரு கிரகத்தின் ஆற்றல் அதிகபட்சமாக உள்ளது. எனவே அரச மரத்தை பெண்கள் சுற்றிவந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல, அது உண்மையே. அரசமரத்தை சுற்றுவதால் பெண்களின் கருப்பை சம்பந்தமான கோளாருகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
நாம் சுவாசிக்கும் காற்றுக்கு பிராண வாயு என்று பெயர். பிராண வாயுவை அதிக பட்சமாக வெளியிடும் மரம் அரசமரமே. பிராண வாயு இல்லாமல் யாரும் உயிரோடு இருக்க முடியாது. நாடி ஜோதிடத்தில் குரு கிரகத்தை ஜீவக்காரகன் என குறிப்பிடுவர். ஜீவன் என்றால் உயிர் என்று பொருள். அரசமரத்தை சுற்றும்போது பிராண வாயு அதிக அளவில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆயுள் அதிகரிக்கும்.
ஜோதிடத்தில் குரு கிரகத்தை புண்ணியக்காரகன் என குறிப்பிடுவர். குரு கிரகம் உச்சமடையும் அரச மரத்தை நட்டு வளர்த்து வந்தால் பல தலைமுறைகளுக்குஅந்த புண்ணியம் போய்சேரும். அரசமரத்தை வெட்டுபவன் தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் இழப்பான், அவன் சந்ததிகள் அழிந்து போகும்.
சூரிய சக்தியை அதிக அளவில் சேமித்து வைக்கும் மரம் அரசமரமாகும். சூரியனின் ஆற்றலும், குரு கிரகத்தின் ஆற்றலும் ஒன்றிணைவதால் தான் உலகத்தில் உயினங்கள் தோன்றுவதாக அறிவியலார் குறிப்பிடுகின்றனர். குரு,சூரிய சேர்க்கையை சிரஞ்சீவி யோகமென நாடி ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. குரு ஆற்றலும்,சூரிய ஆற்றலும் ஒருங்கே நிரம்பி வழியும் மரம் அரசமரம்,எனவே அது ஒரு ஜீவ விருட்சமாகும். அந்த ஜீவ விருட்சத்தை சுற்றுவதால் உடலில் ஜீவ ஆற்றல் அதிகரிக்கும். உடலில் ஜீவ ஆற்றல் அதிகமாக இருந்தால் மனம் தெளிவடையும். எண்ணியவை எல்லாம் எளிதில் நிறைவேறும். அரச மரத்தடியில் அமர்ந்து அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும்.

செல்வ வளம் தரும் குறியீடு

செல்வ வளம் தரும் குறியீடு

ஜோதிடத்தில் தனஸ்தானம் எனக்குறிப்பிடப்படுவது இரண்டாம் பாவமாகும்.காலப்புருஷ லக்னமான மேசத்திற்கு இரண்டாம் பாவம் ரிசபமாகும்.ரிசப ராசியின் குறியீடு காளை மாடாகும். பொதுவாக பொன்,பொருள்,பணம் முதலியவை தனம் எனப்படும். தனம் என்றால் எருது,பசு எனவும் பொருள் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் ஒரு மனிதனுடைய தன நிலை,அவனிடம் இருந்த மாடுகளின் எண்ணிக்கையை வைத்துதான் நிர்ணயிக்கப்பட்டது.எனவே காளை மாட்டின் உருவம் ஒரு செல்வக்குறியீடாகும்.

பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நிகழும் பங்கு சந்தையில் பங்குகளின் ஏறுமுகப்போக்கை குறிப்பிட காளை மாட்டின் உருவம் பயன்படுத்தப்படுகிறது.
பணம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடும்போது காளை மாட்டையோ அல்லது பசு மாட்டையோ காண நேர்ந்தால் நிச்சயமாக அன்றைய தினம் பண வரவு உண்டு.காளை மாட்டின் உருவத்தை பொம்மையாகவோ அல்லது படமாகவோ வீட்டில் வைத்திருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.

செல்வத்தைக்குறிக்கும் கிரகமான சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைகிறார்.மீன ராசி நீர் நிலையைக்குறிக்கும் ராசியாகும்.அங்கே நீச்சமடையும் புதன் நீர்த்தாவரங்களை குறிக்கும்.அங்கே உச்சமடையும் சுக்கிரன் மலர்ந்த தாமரைப்பூவைக்குறிக்கும்.எனவே தண்ணீரில் பூத்துக்குலுங்கும் செந்தாமரை மலர் ஒரு செல்வக்குறியீடாகும்.லக்ஷ்மிக்கு செந்தாமரை செல்வி என்று பெயர்.எனவே செந்தாமரை மலர் அல்லது செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியின் படத்தை வீட்டில் வைத்து தினமும் பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

செல்வத்தைக்குறிக்கும் கிரகமான சுக்கிரன் உச்சமடையும் நட்சத்திரம் ரேவதியாகும்.ரேவதி நட்சத்திரத்தின் உருவம் மீனாகும். எனவே வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்களை பராமரித்து வந்தால்,அது செல்வத்தை வசீகரிக்கும். மீன் வளர்க்க முடியாதவர்கள் மீன் படங்களை வீட்டில் வைக்கலாம்.
நீருக்கு செல்வத்தை வசீகரிக்கும் சக்தி உண்டு.செல்வக்கடவுளான லக்ஷ்மியை அலை மகள் எனக்குறிப்பிடுவர்.பாற்கடலை தேவர்களும்,அசுரர்களும் இணைந்து கடைந்த போது அந்த பாற்கடலிலிருந்து தோன்றியவள் லக்ஷ்மியாகும். கிட்டத்தட்ட எல்லா நாகரீகங்களும் ஆற்றங்கரையிலும்,கடற்கரையிலும் தான் தோன்றியுள்ளது. எனவே வீட்டின் வடகிழக்கு பாகத்தில் நீரை சேமித்து வைத்தால் அந்த வீட்டில் செல்வம் பெருகும்.
நீர் நிலையில் நின்றுகொண்டு சிறு நீர்கழிப்பது,மலம் கழிப்பது,உடல் உறவு கொள்வது,நீரில் எச்சில் துப்புவது போன்ற செயல்கள் லக்ஷ்மியை அவமதிப்பதாகும். அவர்களிடம் லக்ஷ்மி இருக்க மாட்டாள்.

பாவங்கள் போக்கும் பாதுகை

பாவங்கள் போக்கும் பாதுகை

ஜோதிடத்தில் பன்னிரண்டாம் பாவத்திற்கு மோட்சஸ்தானம் என்று பெயர்.மோட்சம் என்றால் விடுதலை என்று பொருள்.அதாவது இங்கே மோட்சம் என்பது பிறவிக்கடனிலிருந்து விடுபடுவதைக்குறிக்கும்.பிறவிக்கடனைக்குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும்.அதிலிருந்து மனிதனை விடுவிப்பது பன்னிரண்டாம் பாவமாகும்.
பன்னிரண்டாம் பாவம் காலப்புருசனின் (ராசிப்புருசனின்) பாதங்களைக்குறிக்கும். ஜோதிடத்தில் விஷ்ணுவை ராசிப்புருசன் என்றும்,காலப்புருசன் என்றும் அழைப்பர். எனவே ராசிகட்டத்தில் உள்ள பன்னிரண்டாம் பாவம் விஷ்ணு பாதத்தைக்குறிக்கும்.
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தலை மீது சடாரி வைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இறைவனின் திருப்பாதங்களை கிரீடம் போன்று செய்திருப்பார்கள்.அதை நம் தலை மீது வைத்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.இறைவனின் திருப்பாதங்களை நம் தலை மீது வைத்தால் நம் பாவங்கள் தொலையும்.தினமும் பெருமாள் கோவில்களுக்கு சென்று சடாரி வைத்துக்கொண்டால் அன்றைய தினம் நாம் செய்த பாவங்கள் அன்றே நம்மைவிட்டு விலகும்.பெருமாள் கோவிலுக்கு சென்றவர்கள் சடாரி வைத்துக்கோள்ளாமல் திரும்பி வரக்கூடாது.விஷ்ணுவின் பாதங்களிலிருந்தே கங்கை தோன்றுவதாக கூறுவர்.விஷ்ணு பாதத்திலிருந்து தோன்றும் கங்கை நம் பாவத்தைப்போக்குவாள்.
எந்த கோயிலுக்கு சென்றாலும்,முதலில் இறைவனின் திருப்பாதங்களையே தரிசிக்கவேண்டும்.குருநாதர் மற்றும் பெரியோர் பாதங்களில் விழுந்து வணங்குவதாலும் நம் பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.எனவே குரு நாதர்களையோ,பெரியோர்களையோ சந்திக்கும்பொழுது அவர்கள் பாதங்களில் விழுந்து ஆசி பெற வேண்டும்.
பக்தர்கள் கோவில்களில் கொடி மரத்தருகே தரையில் வீழ்ந்து வணங்குவர்.அவ்வாறு வீழ்ந்து வணங்கும்போது இறைவனின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்குவதாக பாவித்துக்கொண்டு வணங்கினால் நம் பாவங்கள் தொலையும்.
திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து பாதுகா சஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தை ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியவர் இயற்றியிருக்கிறார். முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.ஒரே இரவுக்குள் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரத்தியெட்டு ஸ்லோகங்கள் முழுவதையும் அவர் எழுதி முடித்துள்ளார் என்பது தான் இதன் சிறப்பு.இந்த பாதுகா சஹஸ்ரத்தை நாளுக்குஒரு ஸ்லோகம் வீதம்,ஒவ்வொரு ஸ்லோகத்தையும் 108 முறை பாராயணம் செய்து வந்தால்முற்பிறவி பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.ஸ்லோகங்களை ஜபிக்கும்போது, இறைவனின் பாதுகைகள் மீதே நம் மனம் இருக்கவேண்டும்.

திருநீற்று மஹிமை

திருநீற்று மஹிமை

சிவ வழிபாட்டில் திருநீறு அணிவது முக்கிய கடமையாக கருதப்படுகிறது.“நீரில்லா நெற்றி பாழ்” என்பர் பெரியோர்.சிவ பெருமான் தன் நெற்றியில் திருநீறு அணிந்திருப்பதாக திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சிவ பெருமான் தன் நெற்றியில் திருநீறு தரித்துள்ளதாக கூறுகிறார்.எனவே திருநீறு சிவ சின்னங்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது.
திருநீறு அணியும் வழக்கம் சிவ பக்தர்களிடம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.ஆதியில் சுடுகாட்டு சாம்பலே திருநீறாக அணியப்பட்டதாக கூறப்படுகிறது.இன்றளவும் சில வட நாட்டு சிவாலயங்களில் சுடுகாட்டுச்சாம்பல் திருநீறாக பயன்படுத்தப்படுவதை அறியமுடிகிறது.
அவரைச்செடியில் பூச்சி வராமல் தடுக்க அடுப்புச்சாம்பலை தூவுவதை நாம் இன்றும் கண்கூடாகப்பார்க்கலாம்.சாம்பல் ஒரு கிருமி நாசினி என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. வாய் துற்நாற்றத்தைப்போக்குவதற்கும்,பற்களை பாதுகாப்பதற்கும் அடுப்பு சாம்பலையே பற்பொடியாக இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம்.சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு அடுப்பு சாம்பலையே பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். குறிப்பாக ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்களை சாம்பல் கொண்டு பூசினால் நச்சுத்தன்மை நீங்கும் என்ற காரணத்தினால் நம்முன்னோர்கள் அதை பயன்படுத்தினார்கள்.
எரிந்த கரித்துண்டு,பானை ஓடு இவைகளை கையில் வைத்திருப்பவர்களை, மந்திரவாதிகளால் எதுவும் செய்யமுடியாது. இதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நெருப்பில் பூத்த திருநீறை தினமும் தவறாது நெற்றியில் அணிந்து வந்தால் ஏவல்,பில்லி,சூன்யம் இவைகளால் யாரும் நம்மை துன்புறுத்த முடியாது.எனவே திருநீறு ஒரு நல்ல பாதுகாப்பு கவசமாகும்.
சாதாரண அடுப்பு சாம்பலுக்கே அளவிடமுடியாத ஆற்றல் இருக்கிறது என்றால், முறையாக தயாரிக்கப்பட்ட திருநீறு எவ்வளவு ஆற்றல் உடையதாக இருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
பசுஞ்சாணம் ஒரு கிருமி நாசினி என்பதை அறிந்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.இதனால் வீடு மெழுகுவதற்கும், வீட்டைச்சுற்றி தெளிப்பதற்கும் பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தினார்கள்.பசுஞ்சாணம் துற்நாற்றம் இல்லாதது.துற்நாற்றத்தைப் போக்குவது.எனவே திருநீறு தயாரிப்பதற்கு பசுஞ்சாணத்தைப் பயன்படுத்துகிறார்கள். பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் வாசம் செய்கிறார்கள் என்பது ஒரு வித நம்பிக்கை.ஆதியில் சுடுகாட்டு சாம்பலை திருநீறாக அணிந்தவர்கள் பிற்காலத்தில் பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட சாம்பலை திருநீறாக அணியத்தொடங்கியுள்ளனர்.
திருநீறணிந்த சிவ பெருமான் பூத கணங்களின் தலைவனாகக் கருதப்படுகிறார். எனவே பூதகணங்கள் எல்லாம் சிவனுக்கு கட்டுப்பட்டவை என்ற அடிப்படையில், பேய்,பிசாசுகளைக்கண்டு பயந்தவர்களுக்கு திருவைந்தெழுத்தால் மந்திரிக்கப்பட்ட திரு நீறை பூசும் வழக்கம் சிவ பக்தர்களிடையே காணப்படுகிறது.
“மந்திரமாவது நீறு” என்கிறார் சம்பந்தப்பெருமான்.எனவே திருநீறே மந்திரம்தான். திருநீறு அணியும்போது “ ஓம் சிவாய நம:” என்னும் பஞ்சாக்ஷரத்தை ஓதி அணிவது வழக்கம்.இதனால் திருநீற்றிற்கு “பஞ்சாக்ஷரம்” என்ற பெயர் உண்டு.
திருநீற்றிற்கு வேறு சில பெயர்களும் உண்டு.அவை
விபூதி-இதன் பொருள் நிறைந்த செல்வத்தை அளிப்பது
பஸ்மம்-இதன் பொருள் பாவங்களைப்போக்குவது
பஸிதம்-இதன் பொருள் ஒளி வீச செய்வது
க்ஷாரம்-இதன் பொருள் துக்கத்தைப் போக்குவது
ரக்ஷா-இதன் பொருள் பாதுகாப்பு அளிப்பது
சிவ பெருமான் முன் அமர்ந்துள்ள காளையை(நந்தியை) சார்ந்த பசுக்கள் ஐந்து எனக்கூறப்படுகிறது.அவை
கபில வண்ணமுடைய நந்தை
கருமை வண்ணமுடைய பத்திரை
செவ்வண்ணமுடைய சுரபி
வெண்ணிறமுடைய சுசீலை
விசித்திர வண்ணமுடைய சுமனை எனப்படும்.
இவ்வைந்து பசுக்களிலிருந்தே விபூதி,பஸ்மம்,பஸிதம்,க்ஷாரம்,ரக்ஷா என்னும் ஐந்து வகையான திருநீறு உண்டானது என பிருகஜ்ஜாபலம் என்னும் உபநிடதம் கூறுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறை
பசுஞ்சாணத்தை உருண்டைகளாக்கி வெயிலில் காயவைத்து அந்த உருண்டைகளை உமியினால் நன்கு மூடி நெருப்பூட்டவேண்டு.இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து உமியின் சாம்பலை நீக்கினால் பசுஞ்சாண உருண்டைகள் சாம்பல் உருண்டைகளாக இருக்கும்.அவற்றை எடுத்து ஒரு துணியில் சலித்து வைத்துக்கொண்டால் அதுவே சிறந்த திருநீறாகும்.இதுவே சுலபமாக திருநீறு தயாரிக்கும் முறையாகும்.
திருநீறு அணியும் முறை
1. உடலில் ஆடையில்லாமலோ,ஈர உடையுடனோ திருநீறு பூசக்கூடாது.
2. கண்ணாடியில் பார்த்துக்கொண்டு திருநீற்றை நெற்றியில் பூசக்கூடாது.
3. ஆள்காட்டி விரலால் திருநீறு பூசக்கூடாது.
4. பேசிக்கொண்டும்,சிரித்துக்கொண்டும்,வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் திருநீறு
பூசக்கூடாது.
5. திருநீறு கொடுப்பவர்களும் பேசிக்கொண்டு ஒருவருக்கு திருநீறு கொடுக்கக்கூடாது.திருநீற்றை தரையில் சிந்தக்கூடாது. திருநீற்றை காலால் மிதிக்கக்கூடாது.
6. கோவிலில் திருநீறு வாங்கும்போது ஒரு கையை மட்டும் நீட்டி வாங்கக்கூடாது. வலது கை மேலும்,இடது கை கீழுமாக வைத்து திருநீறு வாங்க வேண்டும்.
7. வாங்கிய திருநீறை இடது கையில் கொட்டி அதிலிருந்து மறுபடி எடுத்து தரிக்கக்கூடாது. வலது கையில் பற்றுக்கொண்ட திருநீறை அப்படியே நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும் அல்லது ஒரு சிறு காகிதத்தில் திருநீறை இட்டு அதிலிருந்து எடுத்து பூசிக்கொள்ள வேண்டும்.
8. நம்மைவிட வயதில் சிறியவர்களின் கைகளிலிருந்து திருநீறை எடுத்து பூசிக்கொள்ளக்கூடாது. திரு நீறை நம் கையில் வாங்கி, அதிலிருந்துதான் எடுத்து பூசிக்கொள்ள வேண்டும்.
9. திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் பூசிக்கொள்ளும்போதும், “ஓம் சிவாய நம:” என்ற மஹாமந்திரத்தை பக்தியுடன் சொல்லவேண்டும்.
10. சிவ தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருநீறை நீரில் குழைத்து பூசிக்கொள்ள வேண்டும். சிவ தீட்சைபெறாதவர்கள் நீரில் குழைக்காமல் அப்படியே உதிரியாக பூசிக்கொள்ள வேண்டும்.
11. திருநீறு பூசும்பொழுது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு பூசவேண்டும்.
12. நடந்து கொண்டும்,படுத்துக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
திருநீறு அணிய வேண்டிய காலங்கள்
1.சந்தியாக்காலங்களில்
2. சூரிய உதய,அஸ்தமன காலங்களில்
3. நீராடிய உடன்
4. பற்களை சுத்தம் செய்த உடம்
5. உண்பதற்கு முன்னும்,பின்னும்
6. பூஜை செய்வதற்கு முன்னும்,பின்னும்
7.உறங்குவதற்கு முன்னும்,பின்னும்
8. மல,ஜலம் கழித்த பின்பு
9. சிவ தீட்சை பெறாதவரை தீண்ட நேர்ந்தால் அச்சமயத்தில்
10. பூனை,கொக்கு,எலி போன்ற பிராணிகளை தீண்ட நேர்ந்தால் உடனே திருநீறு அணிய வேண்டும்.


திருநீற்றின் மஹிமை
1. திருநீற்றுப்பதிகம் பாடி திருநீறு பூசி மதுரை கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார் திருஞான சம்பந்தர்.
2. திலகவதியார் தன் தம்பி திருநாவுக்கரசருக்கு திருநீற்றை திருவைந்தெழுத்தால் ஓதிக்கொடுத்தார்.துடிதுடிக்க வைத்துக்கொண்டிருந்த வயிற்றுவலி நீங்கியது.
3. நெற்றி நிறைய திரு நீறு பூசி நித்தமும் நியமத்துடன் சிவ பூசை செய்து யமனை வென்றார் மார்க்கண்டேயர்.
திருநீறு அணிவதால் உண்டாகும் நன்மைகள்
1. உடல் நாற்றத்தைப்போக்கும்.
2. நோய்க்கிருமிகளைக்கொல்லும்.
3. உடலை சுத்தம் செய்யும்.
4. வியாதிகளைப்போக்கும்.
5. தீட்டைக்கழிக்கும்.
6. ஏவல்,பில்லி,சூனியம் இவைகளிலிருந்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
7. முகத்திற்கு அழகைத்தரும்.
8. ஞாபக சக்தியைப்பெருக்கும்.
9. ஞானத்தை உண்டாக்கும்.
10. புத்தி கூர்மையைத்தரும்.
11. பாவத்தைப்போக்கும்.
12. பரகதியைத்தரும்.

உருத்திராட்ச மஹிமை

உருத்திராட்ச மஹிமை

சிவ பெருமானுக்கு உருத்திரன் என்ற திருநாமம் உண்டு.அந்த உருத்திரனுடைய அக்ஷங்களிலிருந்து (அதாவது கண்களிலிருந்து) வழிந்த நீரில் தோன்றியது உருத்திராட்சம் எனப்படுகிறது.உருத்திராட்சம் தோன்றியது பற்றி ஒரு புராண கதை உண்டு.அதன்படி, தேவர்களுக்கு திரிபுரத்து அசுரர்கள் துன்பத்தை தந்து வந்தார்கள்.இது குறித்து தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.இதைக்கேட்டவுடன் இறைவனின் மூன்று கண்களிலிருந்தும் நீர் வழிந்தது.அப்படி பொழிந்த நீரில் உருவானதே உருத்திராட்சமாகும்.
சிவனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஒரு மரமாய் உருவெடுத்துக் கனியாகிக் காய்த்துக் குலுங்கியது.ஆனால் இக்கனிகள் ருசிப்பதற்காக ஏற்படவில்லை.உலர்ந்து உருத்திராட்சமாக மாறுவதற்காக ஏற்பட்டது.உருத்திராட்ச மரங்கள் நேபாளத்திலும்,ஜாவாத்தீவுகளிலும் அமோகமாக வளர்கின்றன.இமாலயத்திலும் உருத்திராட்ச கொட்டைகள் நிறைய விளைகின்றன.
உருத்திராட்சம் நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.கருப்பு மற்றும் சிவப்பு நிற உருத்திராட்சங்கள்தான் அதிக அளவில் கிடைக்கின்றன.வெள்ளை நிற உருத்திராட்சம் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் விளைவதால் எளிதில் கிடைப்பதில்லை.மஞ்சள் நிற உருத்திராட்சங்களும் உண்டு.இவை அதிக அளவில் கிடைப்பதில்லை.
உருத்திராட்சத்தில் பல முகங்கள் கொண்ட உருத்திராட்சங்கள் உண்டு.ஒரு முகம் முதல் பதினாறு முகம் கொண்ட உருத்திராட்சங்கள்வரை உண்டு. இவைகளில் ஒரு முகம்,ஐந்து முகம்,பதினோரு முகம் கொண்டவை பூஜைக்கு ஏற்றவையாகும். ஒரு முகம் கொண்டது கிடைப்பது மிகவும் கடினம்.பதினாறு வகையான முகங்கள் கொண்ட உருத்திராட்சங்களின் அதிதேவதைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1முகம்- சிவன்
2முகம்- அம்பிகை
3முகம்- அக்னி
4முகம்- பிரம்மா
5முகம்- காலாக்னி உருத்திரர்
6முகம்- சுப்பிரமணியர்
7முகம்- மன்மதன்,ஆதிசேஷன்
8முகம்- விநாயகர்
9முகம்- பைரவர்
10முகம்- விஷ்ணு
11முகம்- ஏகதச உருத்திரர்
12முகம்- துவாதச உருத்திரர்
13முகம்- ஆறுமுகர்
14முகம்- அர்த்த நாரீஸ்வரர்
15முகம்- சதாசிவர்
16முகம்-அனந்தேஸ்வரர்
உருத்திராட்சத்தின் அடிப்பாகம் விஷ்ணு என்றும்,துவாரம் உருத்திரன் என்றும்,மேற்புறம் பிரம்மா என்றும் கூறுவதுண்டு. உருத்திராட்சத்திற்கு கண்மணி,தெய்வமணி,புனித மணி,அக்க மணி,கடவுள் மணி, நாயகன் விழி மணி எனப்பல பெயர்கள் உண்டு.
நன்றாக விளைந்த உருத்திராட்சக்கொட்டைகளின் நடுவில் பழைய ஓட்டைக்காலனாவை வைத்தால் அது சுற்றும்.அதிலுள்ள மின் சக்திதான் இதற்குக்காரணம்.உருத்திராட்சம் இயற்கையிலேயே நடுவில் துளையைக்கொண்டது.எனவே இதை மாலையாகக் கோர்ப்பது மிகவும் எளிமையானது.
சிவனுடைய கண்களிலிருந்து தோன்றியதால் உருத்திராட்சம் சிவ சின்னங்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது.உருத்திராட்ச மாலையில் 108 அல்லது 54 அல்லது 27 உருத்திராட்சங்கள் இருக்கலாம். உருத்திராட்சத்தை தலை,காது,கை என உடலின் பல பாகங்களில் அணிந்துகொள்வதுண்டு. உருத்திராட்சத்தை அணிபவரின் பாவ வினைகளை ஈசன் போக்குவதாக பத்ம புராணம் கூறுகிறது.

உருத்திராட்சம் அணிவதால் உண்டாகும் பயன்கள்
1. இரத்த அழுத்தம் சீராகும்.
2. கணவன்-மனைவி உறவில் அன்யோன்யம் உண்டாகும்.
3. மனம் அமைதியடையும்.
4. தன்னம்பிக்கை வளரும்.
5. மன ஒருமைப்பாடு உண்டாகும்.
உருத்திராட்ச மணி தரிக்கும் இடங்கள்.
1. உச்சி (குடுமி)- 1 மணி
2. தலை(நெற்றிக்கு மேல்)- 22 அல்லது 36 மணிகள்
3. காது ஒவ்வொன்றிலும்- 1 அல்லது 3 அல்லது 6 மணிகள்
4. கழுத்து- 1 அல்லது 3 அல்லது 27அல்லது 32மணிகள்
5. மார்பு- 54 அல்லது 108 மணிகள்
6. கைகளில்- 12 அல்லது 16 மணிகள்
7. கை மணிக்கட்டு- 12 மணிகள்
மேற்கண்ட 7 உறுப்புகளைத்தவிர வேறு உறுப்புகளில் உருத்திராட்ச மணிகளைஅணிவது குற்றமாகும்.
உருத்திராட்ச மணிகளை அணியும்காலம்.
1. சந்தியாக்காலம்.
2. சிவ மந்திர ஜெபம் செய்யும் காலம்.
3. சிவனை தியானிக்கும் காலம்.
4. சிவாலய தரிசனம் செய்யும் காலம்.
5. சிவ புராணம் ஓதும் காலம்.
6. சிவ புராணத்தை பிறர் ஓத கேட்கும் காலம்.
7. திருமுறைகளை பாராயணம் செய்யும் காலம்.
8. சைவ சமய சொற்பொழிவுகளை கேட்கும் காலம்.
உருத்திராட்ச மணிகளை அணிய தகாத காலம்.
1. தூங்கும்போது.
2. மல ஜலம் கழிக்கும்போது.
3. உடம்பு தூய்மையாக இல்லாதபோது
4. நோயுற்று படுக்கையில் கிடக்கும்போது
5. வீட்டின் தூய்மை கெடும்போது.
6. பிறப்பு,இறப்பு நிகழும்போது.

ஜோதிடத்தில் பரிகார சூட்சுமம்

ஜோதிடத்தில் பரிகார சூட்சுமம்

முற்பிறப்பு, இப்பிறப்பு, அடுத்த பிறப்பு என மூன்று ஜென்மங்களைப் பற்றி தெரிவிப்பது ஜோதிட சாஸ்திரமாகும். ஜாதக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களில் முற்பிறப்பைக்குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும், இப்பிறப்பைக்குறிக்கும் பாவம் முதல் பாவமாகும், அடுத்த பிறப்பை பற்றி தெரிவிக்கும் பாவம் ஐந்தாம் பாவமாகும்.

ஜென்ம லக்கினத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் எனப்படும். அதாவது இந்த பிறவியில் அனுபவிக்கப்போகும் பிரார்ப்த கர்மங்களை குறிக்கும் இடமாகும். முற்பிறப்பில் செய்த கர்மங்களை குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும். அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்கப்போகும் கர்மங்கள குறிக்கும் பாவம் இரண்டாம் பாவமாகும்.

முற்பிறப்பைக்குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். ஒன்பதாமிடத்திற்கு பத்தாக வருவது லக்கினத்திற்கு ஆறாமிடமாகும். எனவே ஆறாமிடம் முன் ஜென்ம வினைகளைக்குறிக்கும். அடுத்த பிறப்பைக்குறிக்குமிடம் ஐந்தாமிடமாகும். ஐந்தாமிடத்திற்கு பத்தாக வருவது இரண்டாமிடமாகும். எனவே இரண்டாமிடம் அடுத்த பிறவியில் அனுபவிக்கவேண்டியதைக்குறிக்கும்.


லக்கினம் ஜாதகரை குறிக்குமிடமாகும். லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக்குறிக்குமிடமாகும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக்குறிக்குமிடமாகும்.
தெய்வ வழிபாட்டைக்குறிக்கும் இடம் ஒன்பதாமிடமாகும். அதாவது ஜாதகர் இப்பிறப்பில் தன்னிச்சையாக செய்யும் தெய்வ வழிபாட்டைக்குறிக்கும் இடம் ஒன்பதாம் இடமாகும். எனவே ஒன்பதாமிடம் ஜாதகரின் இஷ்ட தெய்வம் அல்லது உபாசனா தெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.

ஜாதகரின் தகப்பனைக்குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். எனவே தகப்பன் தெய்வத்திற்கு சமமானவனாவான். தகப்பன் வழிபட்ட தெய்வத்தைக்குறிக்குமிடம் ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குல தெய்வத்தைக் குறிக்குமிடமாகக்கருதப்படுகிறது. தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவராவார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக்குறிக்குமிடமாகவும் அமைகிறது.

கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராக செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும் என்பது ஜோதிட விதியாகும். இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க வேண்டுமானால் , அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடுகளை தவறாமல் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முன் ஜென்ம வினைகளால் நமக்கு வரும் பிரச்சினைகளிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் நாம் விடுபடலாம்.

இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக்குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வ வழிபாட்டைக்குறிக்குமிடமாகும். எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ செய்யும் தீவினைகளிலிருந்து விடுபட , முதலில் நம் தாய்,தகப்பனை நல்ல முறையில் பேணிக்காத்து வரவேண்டும். அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழும் நமக்கு கிடைக்குமாறு பர்த்துக்கொள்ளவெண்டும். மேலும் இஷ்ட தெய்வ வழிபாட்டை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்துவரவேண்டும். மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் குல தெய்வ வழிபாடு,பித்ரு வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு இவைகளை விட்டுவிடாமல் தொடர்ச்சியாக செய்து வந்தால் கர்ம வினைகளால் வரும் இடையூறுகள் நம்மைத்தீண்டாது என்பது புலனாகிறது.

அடுத்த பிறவியைக் குறிக்குமிடம் ஐந்தாமிடமாகும். அதற்கு பத்தாமிடமாக அமைவது,ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடமாகும். வாய், உண்ணும் உணவு இவைகளை குறிப்பது இரண்டாமிடமாகும். எனவே இந்த ஜென்மத்தில் நாம் பிறர் இட்ட அன்ன ஆகாரங்களை சாப்பிடுவதால், அடுத்த ஜென்மத்தில் நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். எனவே முடிந்தவரை அடுத்தவர் வீட்டில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் நம்முடைய கடன் சுமை குறையும். நாம் பிறருக்கு அன்னமிடுவதால் அவர்கள் நமக்கு கடன் பட்டவர்களாகிவிடுகிறார்கள். இந்த பிறவியில் நமக்கு சோறுபோட்டவர்கள் நம் பெற்றோராகும். எனவே நாம் அவர்களுக்கு கடன் பட்டவர்களாகும். இதன் அடிப்படையிலேயே பித்ரு வழிபாட்டில் சோற்றுப்பிண்டம் வைக்கப்படுகிறது.
அன்ன தானம் செய்வதால் நம்முடைய பூர்வஜென்ம பாவங்கள் தொலையும், பித்ரு கடன்கள் குறையும், ஆயுள் ஆரோக்கியம் விருத்தியடையும்.

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை

ஆலயங்களிலோ அல்லது வீடுகளிலோ பூஜை செய்யும் முறையை கவனித்துப்பாருங்கள் அதில் ஒரு ரகசியம் மறைந்திருப்பதை அறியலாம்.அது என்னவென்று பார்ப்போம்.
பஞ்ச பூத கூட்டு எங்கே நிகழ்கிறதோ அங்கே ஒரு உருவாக்கம் நிகழும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.அதன் அடிப்படையிலேயே வேண்டுதல் செய்யும் முறையாக, பூஜைகள் செய்யும் வழிமுறைகளை உருவாக்கினார்கள்.நோக்கம் எதுவும் இல்லாமல் எந்த ஒருபூஜையும் செய்யப்படுவதில்லை.இதன் அடிப்படையிலேயே சங்கல்பம் இல்லாத பூஜைக்கு பலன் இல்லை என கூறுவார்கள். பஞ்ச பூதங்களை ஓரிடத்தில் சேர்த்து வைத்து, அந்த இடத்தில் என்ன சங்கல்பம் செய்தாலும் அது நடை முறையில் நிறைவேறி வருவதை அனுபவபூர்வமாக உணரலாம். பஞ்ச பூதங்களை எப்படி சேர்ப்பது என பார்ப்போம்.
பூஜைகள் செய்யும்போது முதலில் மண்ணினாலோ அல்லது சாணத்தினாலோ அல்லது மஞ்சள் பொடியினாலோ ஒரு பிள்ளையார் பிடித்து வைப்பார்கள், இந்த பிடித்து வைத்த பிள்ளையார் மண் தத்துவத்தைக்குறிப்பார். அடுத்து அதன் அருகே ஒரு மண் கலசத்திலோ அல்லது பித்தளை சொம்பிலோ நீர் நிரப்பி வைப்பார்கள்.நீர் தத்துவத்தை சேர்ப்பதற்காக இப்படி செய்கிறார்கள்.அடுத்து அதன் அருகே தீபம் ஏற்றி வைப்பார்கள்.நெருப்பு தத்துவத்தை சேர்ப்பதற்காக தீபம் ஏற்றப்படுகிறது.அடுத்து சாம்பிராணி புகையை போடுவார்கள்.அகர்பத்தி ஏற்றி வைப்பார்கள்.இந்த புகை காற்றில் மனம் பரப்பும் தன்மையுடையது.காற்று தத்துவத்தை சேர்ப்பதற்காக சாம்பிராணி புகை போடப்படுகிறது,அகர்பத்தி ஏற்றி வைக்கப்படுகிறது. ஆகாய தத்துவம் எங்கும் நிறைந்திருக்கிறது.(மீன் எப்பொழுதும் நீருக்குள்ளேயே இருப்பதால் நீரை அது உணர்வதில்லை,அது போல் நாம் எப்பொழுதும் ஆகாயத்திற்குள்ளேயே இருப்பதால் நாம் ஆகாயத்தை உணர்வதில்லை.) இதையடுத்து கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. கற்பூர ஆரத்தி காட்டும்போது கூடவே மணியும் அடிக்கப்படுகிறது. கற்பூர தீபம் விந்து(ஒளி) தத்துவத்தையும்,மணி ஓசை நாத (ஒலி) தத்துவத்தையும் குறிப்பவையாகும்.பூஜை செய்யும்போது என்ன நிகழ்கிறது என்றால் ஸ்தூல தத்துவங்களான நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும்,சூட்சும தத்துவங்களான விந்துவும்,நாதமும் ஓரிடத்தில் இணைகின்றன. அந்த இடத்தில் நாம் என்ன சங்கல்பம் செய்கிறோமோ அந்த சங்கல்பம் எளிதில் நிறைவேறுகிறது.இறை வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை கடவுளின் உருவச்சிலைகளாகும். ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காக கடவுளின் உருவம் அதற்கு தகுந்த வடிவத்தில் அமைக்கப்படுகிறது. அந்த வடிவம் வேண்டியதை தரும் என்ற நம்பிக்கை மூளையில் பதிய வைக்கப்படுகிறது.கடவுள் சிலைகள் எல்லாமே ஒரு வகையான அடையாளக்குறியீடுகளே.
அளவற்ற ஆற்றல் உடையது மனித மூளை என்றாலும், அவரவர் தேவைக்கு தகுந்தார்போல்தான் நாம் அதை பயன்படுத்தி வருகிறோம்.மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டே உருவ வழிப்பாட்டு முறையில் பன்மை தன்மை கடைபிடிக்கப்படுகிறது.கடவுள் தன்மை ஒருமைதான் என்றாலும்,அவரவர் பார்க்கும் விதத்தில் அது பன்மையாக தோற்றமளிக்கிறது.
கடவுள் படங்களையோ அல்லது உருவங்களையோ பார்த்து மனதில் பிரார்த்தனை செய்யும்பொழுது,அந்த கடவுள் உருவத்திற்கு முன்னே மேற்கூறியவாறு பஞ்ச பூத சேர்க்கையை ஏற்படுத்திக்கொண்டு பிரார்த்தனை செய்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும்.

ஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள் தேவதைகளை சென்றடையுமா?

ஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள்
தேவதைகளை சென்றடையுமா?


தேவதைகளை மகிழ்விப்பதற்காகவும்,அவர்களின் அருளாசியை பெறுவதற்காகவும் செய்யப்படுவது ஹோமாதிக்காரியங்காளாகும். இதை யாகம் என்றும்,யக்ஞம் என்றும் கூறுவர்.
ஹோமம் செய்யும்போது நெருப்பு வளர்த்து அதில் நவதானியங்கள், அன்னம், பட்சணங்கள், நெற்பொரி முதலிய பொருட்களை ஆகுதியாக நெருப்பிலிடுவார்கள்.இவ்வாறு நெருப்பிலிட்ட பட்சணங்கள் குறிப்பிட்ட தேவதையை சென்றடையுமா? எனக்கேட்டால் சென்றடையும் என்பதற்கு தத்துவார்த்தமான விளக்கம் உண்டு.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மை என்னவென்றால் நெருப்பு எப்பொழுதும் ஆகாயத்தைப்பற்றி நிற்கும். அதாவது நெருப்பு எப்பொழுதும் ஆகாயத்தை நோக்கியே கொழுந்து விட்டு எரியும். எனவே பூமியில் நெருப்பு வளர்க்கும்போது, அந்த நெருப்பானது வானத்திற்கும்,பூமிக்கும் இடையே ஒரு இணைப்பை உண்டாக்குகிறது. அதாவது நெருப்பானது வானத்திற்கும்,பூமிக்கும் இடையே ஒரு ஊடகமாக செயல்படுகிறது. எனவே நெருப்பிலிட்ட பட்சணங்களின் சுவையை வானவர்கள் நெருப்பின் வழியாக பெற்றுக்கொள்கிறார்கள் என்பது நம்பிக்கை. மேலும் நெருப்பிலிட்ட பட்சணங்கள் யார் யாருக்குப்போய் சேரவேண்டும் என்பதை சங்கல்பம் மூலம்,பிரார்த்தனை மூலம் தெரிவித்தால் ,அந்தந்த தேவதைகள் மட்டும் வந்து பெற்றுச்செல்வார்கள்.
ஹோமாதி காரியங்கள் செய்யும்போது மந்திரங்கள் ஜெபிக்கப்படுகின்றன.இந்த மந்திரங்களை வானவர்களிடம் எடுத்து செல்வதும் நெருப்புதான். எனவே ஹோமாதி காரியங்கள் செய்வது வீண் விரையம் என யாரும் நினைக்கவேண்டாம்.
மந்திர ஜெபம் செய்யும்பொழுது பக்கத்தில் ஒரு தீபமாவது ஏற்றி வைக்க வேண்டும். அந்த தீபம் உங்கள் பிரார்த்தனையை குறிப்பிட்ட தேவதையிடம் எடுத்துசெல்லும்.
தீபம் ஏற்றாமல்,நெருப்பு வளர்க்காமல் இந்துக்கள் எந்த பிரார்த்தனயும் செய்வதில்லை

சுற்று சூழல் வாஸ்து

சுற்று சூழல் வாஸ்து

பூமியானது தன்னைத்தானேயும் சுற்றுகிறது,சூரியனையும் ஒரு வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. பூமியானது சூரியனைச்சுற்றிவருவதால் பூமியில் பருவகால மாற்றங்கள் ஏற்படுகிறது. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதால் பகல்,இரவு என கால மாற்றங்கள் ஏற்படுகிறது. பூமியின் வட துருவமும்,தென் துருவமும் பூமிக்கு அச்சாக அமைந்துள்ளன. பூமியின் அச்சானது செங்குத்தாக அமையாமல்,சில பாகைகள் சாய்வாக அமைந்துள்ளது.
பொதுவாக பார்க்கும்பொழுது,பூமியானது தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதுபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் சூரியன் (ஜோதிட கருத்துக்களின் படி) நம் கண்களுக்கு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது போல் காட்சியளிக்கிறது.பூமியானது தன் அச்சிலிருந்து சில பாகைகள் விலகி சாய்வாக இருப்பதால்,அது தன்னைத்தானே சுற்றும்போது தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி சுற்றுவது போல் காட்சி தருகிறது.
மண்ணாலும்,நீராலும் ஆனது பூமியாகும். பூமி,தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி சுற்றுவதால்,இயற்கையாக பூமியில் நீரோட்டம் தென்மேற்கிலிருந்து வடகிழக்காகச்செல்கிறது. பொதுவாக நீரோட்டம் உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிச்செல்லும். பூமியின் தற்சுழற்சிப்பாதை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக செல்வதால்,பூமியின் தென்மேற்குப்பகுதி உயர்வான பகுதியாகவும்,வடகிழக்குப்பகுதி தாழ்வானப்பகுதியாகவும் வாஸ்து சாஸ்திரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தெற்கும்,மேற்கும் உயர்ந்திருக்கவேண்டும் என்றும்,வடக்கும்,கிழக்கும் தாழ்ந்திருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பூமியில் வடகிழக்குப்பருவக்காற்று என்றும்,தென்மேற்குப்பருவக்காற்று என்றும் இரு வகையான பருவக்காற்றுகள் வீசுகின்றன. இதில் வடகிழக்குப்பருவக்காற்று உடலுக்கு ஆரோக்கியத்தைத்தருவதாக அமைந்துள்ளது,எனவே வடகிழக்கிலிருந்து வீசும் காற்று தாரளமாக வீட்டிற்க்குள் வரவேண்டுமென்பதற்காக வீட்டின் வடக்கிலும்,கிழக்கிலும் காலியிடம் அதிகமாக விட வேண்டும்,வீட்டிற்கு தலை வாசல் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஜன்னல்கள் வடக்கிலும், கிழக்கிலும் அமைக்கப்படவேண்டுமெனக்கூறப்படுகிறது. தென்மேற்குப்பருவக்காற்றை வாடைக்காற்று எனக்கூறுவர்.இந்தக்காற்று உடலில் பட்டால் ஆரோக்கியம் கெடும் எனக்கருதப்படுவதால் முடிந்தவரை வீட்டிற்கு தெற்கிலும்,மேற்கிலும் காலியிடம் விடக்கூடாது,தலை வாசலோ,ஜன்னலோ அமைக்கக்கூடாது எனக்கூறப்படுகிறது.
அதிகாலை வெயில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும்,மாலை வெயில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனவும் கருதப்படுவதால்,முடிந்தவரை கிழக்குப்பாகத்தில் தலைவாசல் அமைத்துக்கொள்ளவேண்டும் என்றும்,கிழக்கில் அதிக காலியிடம் விடவேண்டுமென்றும் கூறப்படுகிறது.மேலும் மேற்கில் தலைவாசல் வைக்கக்கூடாது,உயரமான மரங்கள்,கட்டிடங்கள்,மலைகள்,கற்குன்றுகள் அமைந்தால் நல்லது எனக்கூறப்படுகிறது.
பூமியின் தற்சுழற்சிப்பாதைக்கு ஒத்திசைவாக நாம் வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டால், பூமியில் இயற்கை சீற்றங்கள் நிகழும்போது பெரிய அளவில் வீட்டிற்கு சேதங்கள் ஏற்படாது எனக்கருதப்படுகிறது. போதிய அளவு வெளிச்சம்,நல்ல காற்றோட்டம்,இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு இவைகளை கருத்தில்கொண்டு வசிப்பிடத்தை அமைத்துக்கொள்ளவேண்டுமென்பதே சுற்று சூழல் வாஸ்துவின் நோக்கமாகும்.

நீருக்கிரைத்த எள்ளும் சோறும் பித்ருக்களுக்குப் போய் சேருமா?

நீருக்கிரைத்த எள்ளும் சோறும் பித்ருக்களுக்குப் போய் சேருமா?


ஒருவர் இறந்த திதியையொட்டி பித்ரு காரியங்கள் செய்யப்படுகின்றன. திதி என்பது பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் ஒன்றாகும்.
பஞ்சாங்கம் – பஞ்ச பூதம்
வாரம் - நெருப்பு
திதி – நீர்
நட்சத்திரம் – காற்று
யோகம் – ஆகாயம்
கரணம் – நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்றான திதியானது நீர் தத்துவத்தைக் குறிக்கிறது. பித்ரு பூஜைகளும் நீர் நீர்நிலைகளுக்கு அருகிலேயே செய்யப் படுகிறது. பித்ரு பூஜையின் முக்கிய அம்சம் என்னவென்றால் பூஜை செய்பவன் எள்ளையும்,சோற்றுப்பிண்டத்தையும் நீரில் வைத்து அதன் மீது நீரை தெளிப்பான்.இவ்வாறு நீருக்கிரைக்கப்படும் எள்ளும்,சோற்றுப்பிண்டமும் பித்ருக்களைப்போய் சேருமா? என்பதற்கு தத்துவார்த்தமான விடை உண்டு, அதை பார்ப்போம்.
பஞ்ச பூதம் – புலனுறுப்பு – புலனறிதல்
நிலம் – உடல் – உணர்தல்
நீர் – வாய் –சுவையறிதல்
நெருப்பு – கண்கள் – பார்த்தல்
காற்று – மூக்கு – நுகர்தல்
ஆகாயம் – காது – கேட்டல்
பஞ்ச பூதங்களில் நீரானது புலனுறுப்புகளில் வாயைக்குறிக்கிறது.எனவே நீரில் தெளித்த எள்ளும்,சோறும் பித்ருக்களின் வாய்க்குள் செல்வதாக கொள்ளலாம். மேலும் இறந்தவர்களை வைகுண்ட பதவி அடைந்ததாக கருதுவது வழக்கம். வைகுண்ட நாதனான விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான். எனவே வைகுண்டம் என்பது சமுத்திரத்தைக்குறிக்கிறது. சமுத்திரத்தில் மீன் வடிவத்தில் முன்னோர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை.
பித்ரு பூஜையை சரிவர செய்ய முடியாதவர்கள் அமாவாசை நாட்களில் புனித நதிகளில் நீராடி மீன்களுக்கு சாதம்,பொரி போன்ற உணவுப்பொருட்களை அளித்தால் பித்ருக்கள் சந்தோசமடைவார்கள். இதன் மூலம் பித்ரு தோசத்திலிருந்து நிவாரணமடையலாம்

வாஸ்து

வாஸ்து

வீட்டின் மேற்கு தெற்கு பாகங்களில் மலை,குன்று,உயரமான பாறை,உயரமான கட்டிடங்கள் இருந்தால் நன்மை பயக்கும்.வீட்டின் கிழக்கு,வடக்கு பாகங்களில் ஏரி,குளம், நதி,வாய்க்கால்,சமுத்திரம் போன்றவை இருந்தால் நன்மை பயக்கும்

கிரகங்களின் பெயர்கள்:-

கிரகங்களின் பெயர்கள்:-

இந்திய முறை ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் கூறப்பட்டுள்ளன. “கிரகம்” என்றால் “பற்றுவது” அல்லது “பிடிப்பது” எனப்பொருள்படும். “கிரகம்” என்றால் “நகர்வது” எனவும் பொருள்படும். அதாவது பூமியிலிருந்து வானத்தைப்பார்க்கும்போது எவையெல்லாம் கண்களுக்கு நகர்வது போல் காட்சியளிக்கின்றனவோ அவை கிரகம் என அழைக்கப்படுகின்றன. எவையெல்லாம் தன்னுடைய ஆகர்ஷண சக்தியால் பூமியை பற்றியிழுக்கின்றனவோ அவை கிரகம் என அழைக்கப்படுகின்றன. வானத்தில் நகர்ந்துகொண்டே பூமியை பற்றியிழுப்பவையாக கருதப்படுபவை ஒன்பது கிரகங்களாகும். அவைகளின் பெயர்கள் கீழேதரப்பட்டுள்ளன.

1.சூரியன் 4.புதன் 7.சனி
2.சந்திரன் 5.குரு 8.ராகு
3.செவ்வாய் 6.சுக்கிரன் 9.கேது
சூரியன் ஒரு கிரகமில்லை,அது பூமிக்கு வெகு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும்.பூமியானது சூரியனை சுற்றிவருகிறது. பூமியானது எந்த திசையை நோக்கி சுற்றுகிறதோ, அந்த திசைக்கு நேர் எதிர் திசையை நோக்கி சூரியன் சுற்றுவது போல் பார்ப்பவர் கண்களுக்கு தென்படுகிறது. அது எப்படியென்றால் குடை ராட்டிணத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சுற்றிவரும்போது ,ராட்டிணத்தின் அச்சானது ,ராட்டிணம் எந்த திசையை நோக்கி சுற்றுகிறதோ,அந்த திசைக்கு எதிர் திசையை நோக்கி நகர்வதுபோல் காட்சியளிக்கும். இது ஒருவகையான ஒப்புமை இயக்கமாகும். இதுபோல் நிஜத்தில் சூரியன் சுற்றுவதில்லை ஆனால் சுற்றுவது போல் காட்சியளிக்கிறது. இதன் காரணத்தினால் சூரியனை ஒரு கிரமாக பாவிக்கிறார்கள்.

சந்திரன் பூமியின் துணைக்கோள்தான்,ஆனால் அது பூமியை பற்றியிழுப்பதாலும்,வானத்தில் சுற்றிவருவதாலும் ஒரு கிரகமென எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வானத்தில் சூரியப்பாதையும்,சந்திரப்பாதையும் இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. அவ்விரண்டு வெட்டுப்புள்ளிகளே ராகு,கேது என அழைக்கப்படுகின்றன. இப்புள்ளிகள் சந்திரனின் சஞ்சாரத்தால் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்துகொண்டேயிருப்பதால் அவை கிரகங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

SKELETON OF THE HAND

 SKELETON OF THE HAND

The eight small bones at the base form the wrist and their anatomical name is the carpal bones or corpus.
From that base emerge five long and strait bones scientifically called metacarpal bones or metacarpus.
Above the metacarpus rise the fourteen phalanges: two for the thumb, three for each of the four fingers.
Carpal bones -8
Meta carpal bones -5
Bones of phalanges -14
___
Total bones in the hand(Palm) is -27 No’s

Total No. of Constellations (Nakshatras) in the zodiac is also 27 No’s. This is the co-relation between the hand and zodiac.

தியானத்தின் நோக்கம்

தியானத்தின் நோக்கம்

மனிதனை புற உலகோடு இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை ஐம்புலன்களாகும்.மெய்,வாய்,கண்,மூக்கு,காது ஆகியவை ஐம்புலன்களாகும்.மெய்யானது தொடுதலை அறிகிறது,வாய் சுவையை அறிகிறது,கண் காட்சிகளை காண்கிறது,மூக்கு காற்றில் மிதந்து வரும் வாசனையை அறிகிறது, காது ஒலியைக்கேட்கிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனிதனைக்கவனித்துப்பாருங்கள் இந்த ஐம்புலன்களும் அவனில் அடங்கியிருக்கும்.அதாவது உறக்கத்தில் அவன் தொடுதலை அறியமாட்டன்,சுவையை அறியமாட்டன்,காட்சிகளை காணமாட்டான்,வாசனையை அறியமாட்டான்.ஒலிகளை கேட்கமாட்டான்.இந்த நிலையில் மனமும் அடங்கிவிடுகிறது.உறக்கத்திலிருந்து விழித்தெழும்போது ஐம்புலன்களும் விழித்துக்கொள்கிறது,அவைகளோடு சேர்ந்து மனமும் விழித்துக்கொள்கிறது. விழித்துக்கொள்ளும் மனம் ஓயாமல் இயங்கிக்கொண்டேயிருக்கிறது.

மனிதனைப்பொறுத்தவரை உறக்கம் என்பது இயற்கை வழங்கும் சிகிச்சையாகும்.அதாவது களைப்போடு இருக்கும் உடலுக்கும்,மனதிற்கும் இயற்கை வழங்கும் சிகிச்சையே உறக்கமாகும்.இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால்,ஐம்புலன்களின் இயக்கத்தினாலேயே மனம் சஞ்சலமடைகிறது.ஐம்புலன்களும் அடங்கும்போது மனமும் அடங்குகிறது.எனவே மனக்கட்டுப்பாட்டிற்கு புலனடக்கம் இன்றியமையாததாகும்.இதன் காரணத்தினாலேயே தியானம் பயில்பவர்களுக்கு உணவு,உடை,உடல் உறவு,கேட்பது, பார்ப்பது போன்ற விசயங்களில் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தியானம் பழகுபவர்கள் தனிமையை தேடிச்செல்வதன் நோக்கமும் இதுதான்.

தியானத்தின் ஓர் முதிர்ந்த நிலையை துரியம் என்று கூறுவார்கள்.துரியம் என்றால் ஆழ்ந்த தூக்கம் என்று பொருள்படுகிறது.இதன் மூலம் தியானத்தின் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். உணவு,உடை,உடல் உறவு இவைகளில் காட்டுப்பாடோடு இருந்தால் மெய்,வாய்,மூக்கு இவை கட்டுப்படும்.தனிமையை ஏற்படுத்திக்கொண்டால் கண்ணும், காதும் கட்டுப்படும்.எனவே தியானம் என்பது உடலுக்கும்,மனதுக்கும் நாம் அளிக்கும் சிகிச்சையாகும்.மனோவிகாரங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மார்கமே தியானமாகும்.உறக்கத்தில் மனிதனுக்கு எந்தவித செயல்பாடும் இருப்பதில்லை.அதாவது வினை செயல்படுவதில்லை.மனம் இயங்குவதில்லை.மனம் அடங்கினால் வினை செயல்படாது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.வினை அறுக்கும் நோக்கத்தில்தான் முனிவர்கள் எப்போதும் தியானத்தில் இருக்க முயற்சிக்கி றார்கள். முற்றிலுமாக வினை அறுப்பது இப்பிறப்பில் இயலாவிடினும்,தொடர்ந்து தியானம் பழகிவந்தால்,இனி வரும் பிறப்பிலாவது வினை அறுக்கும் பேற்றை அடையலாம் என்ற நம்பிக்கையில் பலர் தியானித்து வருகிறார்கள்.

எவனொருவன் இயற்கையாக ஆழ்ந்து உறங்குகிறானோ,அவன் நல்ல உடல் நலத்தோடும்,மன நலத்தோடும் இருப்பான்.உறக்கமில்லாதவனுக்கு உடல் நலமும்,மன நலமும் கெடும்.தியானத்தின் மூலம் ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்து தூங்கினாலே உடலும், மனமும் புத்துணர்ச்சியடையும்.தியானம் செய்பவர்களை சோம்பேறிகளாகக் கருத முடியாது.ஏனென்றால் சோம்பேறிகளிடம்தான் மனோவிகாரங்கள் அதிகமாக காணமுடிகிறது. தான் சும்மா இருந்துகொண்டே பொருள் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தன்னையும் குழப்பி, பிறரையும் குழப்பிக்கொண்டிறுப்பவர்கள் சோம்பேறிகள். இந்த சோம்பேறிகள் யாரும் தியானத்தில் ஈடுபட்டதாகத்தெரியவில்லை.

தனக்கென்று எந்த தேவைகளும் இல்லாமல்,விருப்புடன் எந்த செயலிலும் ஈடுபடாமல்,தன்னைச்சுற்றி நடக்கும் செயல்பாடுகளுக்கு சாட்சியாக மட்டும் இருந்துகொண்டு,மனதை கட்டுப்படுத்தி சும்மா இருப்பதே தியானமாகும்.

கைரேகை கலைக்கும் ஜோதிட கலைக்கும் உள்ள தொடர்பு

கைரேகை கலைக்கும் ஜோதிட கலைக்கும் உள்ள தொடர்பு

கையிலுள்ள கிரஹ மேடுகளுக்கும் ராசி கட்டத்திலுள்ள கிரஹ ஆட்சி வீடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அது எப்படி என்பதைப்பார்ப்போம்.

ராசிகட்டத்தில் சூரியனுக்கும் புதனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான சிம்மமும், கன்னியும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதனாலேயே கையில் சூரிய மேடும் புதமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் சனிக்கும் ,குருவுக்கும் உரிய ஆட்சி வீடுகளான தனுசும், மகரமும் அடுத்தடுத்த ராசிகளாகும். இதுபோல் கும்பமும்.மீனமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் சனி மேடும் ,குருமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் செவ்வாய்க்கும் ,சுக்கிரனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான மேசமும், ரிசபமும் அடுத்தடுத்த ராசிகளாகும். இதுபோல் துலாமும்,விருச்சிகமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் செவ்வாய் மேடும், சுக்கிரமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.

ராசிகட்டத்தில் குருவுக்கும் ,செவ்வாய்க்கும் உரிய ஆட்சி வீடுகளான விருச்சிகமும் , தனுசும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதுபோல் மீனமும் .மேசமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் குருமேடும் ,செவ்வாய் மேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் புதனுக்கும்,சந்திரனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான மிதுனமும், கடகமும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதனாலேயே கையில் புதமேடும்,சந்திர மேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் ராஹு,கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது என்பர்.இதனால்தான் கையில் ராஹு,கேதுக்களுக்கு மேடுகள் எதுவும் இல்லை.இதுவே கிரஹ ஆட்சி வீடுகளுக்கும், கிரஹ மேடுகளுக்கும் உள்ள தொடர்பாகும்.

CORRELATION BETWEEN PALMISTRY & ASTROLOGY

CORRELATION BETWEEN PALMISTRY & ASTROLOGY

Lordship/Ownership/Rulership of signs is allotted to seven planets only in Hindu Astrology. In a similar manner lordship/ownership/ Rulership of mounts are allotted to seven planets only in Hindu Palmistry also.

In the zodiac the ruling signs of Mars & Venus are adjacent to each other. Mesha & Vrishaba are mutually adjacent signs. Thula & vrichika are mutually adjacent signs. In a similar manner, the mounts of Mars & Venus are adjacent to each other in the palm also.

In the zodiac the ruling signs of Jupiter & Mars are adjacent to each other. Meena & Mesha are mutually adjacent signs. Dhanush & vrichika are mutually adjacent signs. In a similar manner, the mounts of Jupiter & Mars are adjacent to each other in the palm also.

In the zodiac the ruling signs of Jupiter & Saturn are adjacent to each other. Kumba & Meena are mutually adjacent signs. Dhanush & Makara are mutually adjacent signs. In a similar manner, the mounts of Jupiter & Saturn are adjacent to each other in the palm also.

In the zodiac the ruling signs of Mercury & Moon are adjacent to each other. Mithuna & Karkataka are mutually adjacent signs. In a similar manner, the mounts of Mercury & Moon are adjacent to each other in the palm also.

In the zodiac the ruling signs of Sun & Mercury are adjacent to each other. Simha & Kanya are mutually adjacent signs. In a similar manner, the mounts of Sun & Mercury are adjacent to each other in the palm also.

சித்தர் என்பவர், ரிஷி என்பவர் யார்?

சித்தர் என்பவர், ரிஷி என்பவர் யார்?

சித்தர் என்னும் சொல் தற்காலத்தில் பலரை மதிமயங்கச்செய்யும் சொல்லாக அமைந்துள்ளது. சித்தர் என்ற சொல்லின் பொருள் விளங்காததால் பலர் ஏமாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் இந்த வார்த்தையே வெறுக்கத்தக்க வார்த்தையாக அமைந்துவிடவும் வாய்ப்புள்ளதால் அது பற்றி எனக்கு தெரிந்தவரையில், நான் புரிந்துகொண்ட அளவில் “சித்தர் என்பவர் யார்?” என்பதை கொஞ்சம் அலசிப்பார்க்கலாம் என தோன்றுகிறது.
சித்தி என்றால் வெற்றி என்று பொருள். சித்தர் என்றால் வெற்றியாளர் அல்லது சாதனையாளர் அல்லது வல்லுனர் என்று பொருள் அவ்வளவுதான். ஒரு மனிதர் ஏதாவது ஓரிரு துறைகளில் சாதனை படைப்பதை இன்றளவும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒரே மனிதர் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்ததாக சரித்திரத்தில் எங்கும் இல்லை. உதாரணமாக புரட்சிக்கவிஞன் பாரதி ஒரு கவிதை சித்தன், கவியரசு கண்ணதாசன் ஒரு பாட்டு சித்தன்,இசை ஞானி இளைய ராஜா ஒரு இசை சித்தன். வலம்புரி ஜான் ஒரு வார்த்தை சித்தன். கணிதமேதை ராமானுஜன் ஒரு கணக்கு சித்தன். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் சாதனை நிகழ்த்தினால் அவர்களை சமூகம் ஒரு சித்தனாக பாவிக்கிறது. ஆனால் இவர்களில் யாரும் உலக விசயங்கள் அனைத்தையும் தெரிந்தவர்கள் இல்லை.
சித்தர் என்ற வார்த்தைக்கு பெரும்பாலானவர்கள் “அனைத்தும் அறிந்தவர்” என பொருள் காண முற்படுகிறார்கள். இது அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததையே காட்டுகிறது. பொறியாளர் என்பது ஒரு பொது வார்த்தை. பொறியியல் துறையில் பல பிரிவுகள் உள்ளதை நாம் அறிவோம். கட்டிடப்பொறியாளரும்,கணணிப்பொறியாளரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளமுடியாது.
நான் மின்னியல் துறை பொறியாளன்,என் கிராமத்தில் சிலர் என்னிடம் கட்டிட வரைவு படம் போட்டுத்தருமாறு கேட்டதுண்டு. என் தாய் படிப்பறிவு இல்லாதவர்.அவர் நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்த சமயம் மருத்துவர் வழங்கிய மாத்திரைகளை பார்த்து எந்த மாத்திரையை எந்த நோய்க்கு சாப்பிடவேண்டும் என்று பார்த்து சொல் என்றார். எனக்கு தெரியவில்லை என்று சொன்னேன். இதைப்பார்த்து சொல்லத்தெரியாதவன் பள்ளிகூடத்திற்கு போய் என்னத்தை படிக்கிறாய் என கேட்டார். மருந்தாளுநர் படிப்பு படித்திருந்தால் மட்டுமே மருந்துகளை பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்பது அவருக்குத் தெரியாது. அவருடைய பார்வையில் நான் எழுத படிக்கத்தெரிந்தவன். மாத்திரை மீது ஏதோ எழுதியிருக்கிறது. அதை பார்த்து படித்தால் விசயம் தெரிந்துவிடும் என நினைக்கிறார். இது போன்றுதான் சித்தர் என்பது ஒரு பொது வார்த்தை என்பதை அறியாமல், யாராவது தன்னை சித்தர் என்று கூறிக்கொண்டால் அவரிடம் சென்றால் நமக்கு வேண்டியது எதுவாக இருந்தாலும் கிடைத்துவிடும் என்ற தவறான நம்பிக்கையில் பலர் அனுகுகிறார்கள்.
இந்த உலகத்தில் அனைத்தும் அறிந்தவன் என கூறிக்கொள்ள ஒரு மனிதன் கூட இருக்கமுடியாது. தற்காலத்தில் சிலர் தன்னை திரிகால ஞானி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன். எனக்குத்தெரியாமல் ஒரு ஈ,எறும்பு கூட அசையாது எனக்கூறிக்கொள்பவர்கள் உள்ளனர். ஆயக்கலைகள் அறுபத்து நான்கு எனக்கூறுவர். “அந்த அறுபத்து நான்கு கலைகளிலும் எனக்கு ஞானம் உண்டு, அவை பற்றி என்ன கேட்டாலும் என்னால் விளக்கமுடியும்” என எந்த சித்தராவது கூறியிருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஒருவர் தன்னை “அனைத்தும் அறிந்தவர்” என கூறிக்கொள்வாரானால், அவருக்கு உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து விலங்குகளின் மொழி தெரிந்திருக்கவேண்டும், அனைத்து பறவைகளின் மொழி தெரிந்திருக்கவெண்டும். ஆகாயத்தைப்பற்றி அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். பூமியைப்பற்றி அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். அவருக்கு தெரியாதது என்று உலகத்தில் எதுவுமே இருக்கக்கூடாது. அப்படி ஒருத்தர் எங்காவது இருக்கிறார? நிச்சயமாக அப்படி ஒருவர் இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
ரிஷி என்றால் கண்டுபிடிப்பாளர் என்று பொருள். இவர்கள் எதை கண்டுபிடித்தார்கள்? இவர்கள் ஆகாயத்தில் ஒளிவடிவமாகவும்,ஒலி வடிவமாகவும் உள்ள மந்திரங்களை கண்ணால் கண்டு,காதால் கேட்டு உலகத்திற்கு தெரிவித்தார்கள். அதனால் இவர்களை ரிஷி என அழைக்கிறார்கள். மந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு மந்திரத்தையும் கண்டுபிடித்த ரிஷி உண்டு. ஆனால் அனைத்து மந்திரங்களையும் ஒரே ஒரு ரிஷி மட்டும் கண்டுபிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு சில மந்திரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இவர்களில் யாரும் “ அனைத்தும் அறிந்தவர்” கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே படைக்கபட்டிருக்கிறான். அதை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இயற்கை அவனை தயார் படுத்துகிறது. அனைத்தையும் இயக்குவது
ஒரே பரம்பொருள்தான். ஆனால் மனிதர்கள் இயங்கும் விதம் அவர்களின் படைப்புத்தன்மையைப்பொருத்தது. மின்விளக்கையும்,மின் விசிறியையும் ஒரே மின்சாரம்தான் இயக்குகிறது. ஆனால் அவைகள் இயங்கும் விதம் வேறு. இதை புரிந்துகொண்டால் அறியாமை நம்மை விட்டு விலகிவிடும். ஒரு சித்தர் அல்லது ஒரு ரிஷி அனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார் என எதிர்பார்ப்பது, எதிபார்ப்பவரின் பாமரத்தனமே தவிர வேறொன்றுமில்லை.
“கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்னும் தமிழறிஞர்களின் கூற்று சத்தியமானது.

கடவுள் ஒருவரா? அல்லது பலரா?

கடவுள் ஒருவரா? அல்லது பலரா?

இந்து மதத்தில் மட்டும் ஏன் பல்வேறு வடிவங்களில் தெய்வம் இருப்பதாக கூறப்படுகிறது? பல்வேறு வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளன. கடவுள் ஒருவரா? அல்லது பலரா? இது போன்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்து மதத்தை அனைத்து மதங்களின் தாய் மதம் என குறிப்பிடுவர். ஏனென்றால் அனைத்து மதக்கொள்கைகளும் இந்து மதத்தில் உண்டு. இந்து மதத்தில் இல்லாத ஒரு கருத்து வேறு எந்த மதத்திலும் இருக்காது. இந்து மதம் எந்த ஒரு கருத்தையும் வலுகட்டாயமாக யார் மீதும் தினிப்பதில்லை. இந்து மதத்தில் கடுமையான சட்ட திட்டங்கள் எதுவுமில்லை. இந்து மதம் அனைவரையும் சுதந்திர ஜீவிகளாக பாவிக்கிறது. அவரவரவர் கடைபிடிப்பதற்கு ஏதுவாக மதக்கொள்கைகளில் பல விருப்பத்தேர்வுகளை கொண்டுள்ளது.
ஆதி சங்கரர் இந்து மதத்தை ஷண்மதமாக (ஆறு மதம்) குறிப்பிடுகிறார். சைவம், சாக்தம், வைஷ்ணவம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பவை அந்த ஆறு மதங்களாகும். அவரவர் விரும்பும் மதத்தை கடைபிடிக்க அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. அத்வைத கொள்களை உலகில் பரப்பிய ஆதிசங்கரர் ஆறு மதங்களை அங்கீகரித்ததற்கு ஒரு காரணம் இல்லாமல் இருக்காது.
பசிக்காகத்தான் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். பசியை போக்குவதுதான் சாப்பிடுவதின் நோக்கம் என்றாலும். எல்லோரும் ஒரே வகையான உணவை உண்பதில்லை. மேற்கத்தியவரின் உணவு பழக்கம் வேறு,கிழக்கத்தியவரின் உணவு பழக்கவழக்கம் வேறு. வட இந்தியரின் உணவு பழக்கம் வேறு,தென் இந்தியரின் உணவு பழக்கம் வேறு. இந்த சூழ்நிலையில் அரசாங்கம் நம் நாட்டில் உள்ள அனைவரும் சப்பாத்தியை தவிர வேறு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என ஒரு சட்டம் இயற்றினால் தென்னிந்தியர்களின் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். குடும்பத்தோடு உணவு விடுதிகளுக்கு செல்லும்போது,அங்கே ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த உணவு வகையை மட்டும் சாப்பிடுவதைக்காண்கிறோம். நாம் ஆடை அணியும் விசயத்தில் கூட நாம் விரும்பிய வண்ணத்திலேயே ஆடை அணிகிறோம்.
ஒரு சுற்றுலா செல்வது என்றால் கூட நாம் விரும்பிய இடத்திற்கு சென்று வருகிறோம். சிலரை நமக்கு பிடிக்கிறது,சிலரை பிடிக்கவில்லை . இதற்கு காரண காரியமெல்லம் நமக்கு தெரியாது. படுக்கும் விதத்தில் கூட ஒருவர் வலமாக படுக்க விரும்புகிறார். இன்னொருவர் இடமாக படுக்க விரும்புகிறார். ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே ஒரு தனிப்பட்ட விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. எனவே எந்த ஒரு விசயத்தையும் மனிதன் இயல்பாக உணர்ந்தால் மட்டுமே அந்த விசயத்தை அவன் மனம் சுலபமாக ஏற்றுக்கொள்ளும்.
சோறு, பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பணியாரம், கொழுக்கட்டை , முறுக்கு என இவ்வணைத்து பதார்த்தங்களும் அரிசி என்னும் ஒரே மூலப்பொருளிலிருந்துதான் சமைக்கப்படுகிறது. இவ்வணைத்து பதார்த்தங்களும் பசியை போக்கவல்லவைதான். ஆனால் ஒருவருக்கு இட்லி பிடிக்கிறது,தோசை பிடிப்பதில்லை. இன்னொருவருக்கு தோசை பிடிக்கிறது,இட்லி பிடிப்பதில்லை. இதற்கு என்ன காரண காரியம் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. இதுபோன்றுதான் ஒரே கடவுள் வெவ்வேறு வடிவங்களில் இந்து மதத்தில் வணங்கப்படுகிறான். எனக்கு சிவனை பிடித்திருக்கிறது. இன்னொருவருக்கு விஷ்ணுவை பிடித்திருக்கிறது. இதில் என்ன பிரச்சினை?.

நலிந்தோற்கில்லை நாளும் கோளும்

நலிந்தோற்கில்லை நாளும் கோளும்

அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்படும் ஏழை எளிய மக்களுக்கு எதிர்காலத்தைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரம் இருப்பதில்லை.நடந்து முடிந்தவைகளைப்பற்றியும் இவர்கள் வருத்தப்படுவதில்லை.பொதுவாக இவர்கள் சோம்பேறிகளாக சும்மா உட்காருவதில்லை.சும்மா உட்கார்ந்திருந்தால் இவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது.ஆகவே இவர்கள் தினமும் உழைத்தே ஆகவேண்டும்.உடம்பில் தெம்பு இருக்கும்வரை ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.சாகும்வரை தன்னால் இயன்ற வேலைகளை செய்வார்கள்.வாழ்க்கை சிரமங்களைப்பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை.சிரமங்களைக்கண்டு அஞ்சுவதுமில்லை.முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்கவே முயற்சிப்பார்கள்.பெரிய ஆசைகள் எதுவும் இவர்களுக்கு இருக்காது.பெரிய அளவில் இலக்குகள் எதுவும் கிடையாது.இதனால் இவர்களுக்கு மனதில் பெரிய சஞ்சலங்களும் ஏற்படுவதில்லை, நாள் நட்சத்திரம் பார்க்கவேண்டிய தேவையும் ஏற்படுவதில்லை.இவர்களிடம் காணப்படும் மகிழ்ச்சியும்,மன அமைதியும்,தன்னைப்பெரிய மகான் எனக்கூறிக்கொள்பவர்களிடம் கூட காணமுடியாது.உண்மையில் பிறப்பறுக்கப்பிறந்தவர்கள் இவர்கள்தான்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

“கும்பம்” என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு “குடம்” என்றும், “அபிஷேகம்” என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு “நீராட்டு” அல்லது “முழுக்கு”என்றும் பொருளாகும். “கும்பாபிஷேகம்” என்றால் “குடநீராட்டு” அல்லது “குடமுழுக்கு” என்று பொருளாகும். பொதுவாக கும்பாபிஷேகம் கீழ்கண்ட நான்கு சூழ்நிலைகளில் செய்யப்படுகிறது.
1. புதிதாக கட்டிய கோவில்களுக்கு செய்யப்படும் கும்பாபிஷேகம்- இது ஆவர்த்தம் எனப்படும்.
2. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோவில் சிலைகளை மறுபடியும் நிறுவும்போது செய்யப்படும் கும்பாபிஷேகம் – இது அனுவர்த்தம் எனப்படும்.
3. பழுதடைந்த கோவில்களை புதுப்பித்து ,தெய்வச்சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி செய்யப்படும் கும்பாபிஷேகம் – இது புனஸ்வர்த்தம் எனப்படும்.
4. திருட்டுப்போன சிலைகளை மீண்டும் நிறுவும்போது செய்யப்படும் கும்பாபிஷேகம் – இது அந்தரிதம் எனப்படும்.
இறைவனை ஜோதிமயமானவன் எனக்குறிப்பிடுவர். ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உரசும்போது அதில் நெருப்பு தோன்றுவதைக்காணலாம். இறைவன் ஜோதிமயமானவன் என்பதை குறிப்பிடும் விதமாக தெய்வ உருவங்கள் கருங்கற்களில் வடிக்கப்படுகின்றன.
கல்லில் வடிக்கப்பட்ட சிலையானது, கும்பாபிஷேகத்திற்கு முன் வெறும் கல்லாகவே கருதப்படுகிறது. கும்பாபிஷேக நிகழ்வின்போதுதான் தெய்வ சிலைகளுக்கு ஜலாதிவாசம் (தண்ணீருக்குள் போட்டு வைப்பது),தான்யாதிவாசம்(தான்யத்திற்குள் புதைத்துவைப்பது) செய்யப்பட்டு,கோவிலில் அமைக்கப்பட்ட பீடத்தில்,மந்திர சக்தியூட்டப்பட்ட யந்திர தகட்டின் மேல் நிறுவப்படுகிறது. இவ்வாறு நிறுவப்பட்ட தெய்வ சிலைகளை நீராட்டுவதற்கு 1 குண்டம்,5 குண்டம்,9 குண்டம்,17 குண்டம்,25 குண்டம்,33 குண்டம் என அமைத்து யாகங்கள் செய்து ஜோதி வளர்த்து அந்த ஜோதியை கும்பத்திற்கு கொண்டு போய் பின்னர் கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு(சிலைக்கு) கொண்டு போகும் கும்பாபிஷேக விழாவிற்கு பின் தெய்வ சிலைகள் இறைவன் வாழுமிடமாக கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தின்போது தெய்வ சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்படும். இவ்வாறு சாத்தப்படும் அஷ்டபந்தன மருந்து 12 வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இதனால் 12 வருடங்களுக்கு ஒரு முறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
கும்பாபிஷேகத்தின்போது கும்ப தீர்த்தத்தில் இறைவனை ஆவாஹனம் செய்து,யாகத்தின் மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி அந்த கும்ப தீர்த்தத்தை தெய்வ சிலை மீதும்,கோபுர கலசத்தின் மீதும் அபிஷேகம் செய்வர்.

சந்திர பலம் என்றால் என்ன?

சந்திர பலம் என்றால் என்ன?

சுப காரியங்களுக்கு முகூர்த்த நிர்ணயம் செய்யும்போது சந்திர பலம் பார்த்து நாள் நிச்சயம் செய்வது வழக்கம். அந்த சந்திர பலம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை பார்ப்போம். ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் மிகவும் எளிமையானது அஷ்டகவர்க முறையாகும். அந்த முறையில் ராகு,கேதுக்களைத்தவிர மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் அவை:

1) தான் நின்ற ஸ்தானம் (1)
2) ( தான் நின்ற ஸ்தானம் மற்றும் ராகு,கேதுக்கள் நின்ற ஸ்தானங்களைத் தவிர) பிற கோள்கள் நின்ற ஸ்தானம் (6)
3) லக்கின ஸ்தானம் (1)

ஆகிய எட்டு ஸ்தானங்களிலிருந்து கணக்கிட எந்தெந்த வீடுகளுக்கு தங்களுடைய பரல்களைத் தருவார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் அட்டவணையாக தரப்பட்டுள்ளது.அதில் கோச்சார சந்திரன்,ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 1,3,6,7,10,11ஆகிய ஆறு இடங்களுக்கு தன்னுடைய பரல்களைத் தருவார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு கிரகம் எந்தெந்த வீடுகளுக்கு தன்னுடைய பரல்களை தருகிறதோ அந்த வீடு அந்த கிரகத்திற்கு பலம் வாய்ந்த இடமாகும். இதன் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதன்படி கோச்சார சந்திரன்,ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 1,3,6,7,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது கோச்சார சந்திரன் பலம் வாய்ந்தவராக இருப்பார். இதையே சந்திர பலம் என குறிப்பிடுகிறார்கள்.

குரு பலம் என்றால் என்ன?

குரு பலம் என்றால் என்ன?

சுப காரியங்களுக்கு முகூர்த்த நிர்ணயம் செய்யும்போது குரு பலம் பார்த்து நாள் நிச்சயம் செய்வது வழக்கம். அந்த குரு பலம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை பார்ப்போம். ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் மிகவும் எளிமையானது அஷ்டகவர்க முறையாகும். அந்த முறையில் ராகு,கேதுக்களைத்தவிர மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் அவை:

1) தான் நின்ற ஸ்தானம் (1)
2) ( தான் நின்ற ஸ்தானம் மற்றும் ராகு,கேதுக்கள் நின்ற ஸ்தானங்களைத் தவிர) பிற கோள்கள் நின்ற ஸ்தானம் (6)
3) லக்கின ஸ்தானம் (1)

ஆகிய எட்டு ஸ்தானங்களிலிருந்து கணக்கிட எந்தெந்த வீடுகளுக்கு தங்களுடைய பரல்களைத் தருவார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் அட்டவணையாக தரப்பட்டுள்ளது.அதில் கோச்சார குரு,ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2,5,7,9,11 ஆகிய ஐந்து இடங்களுக்கு தன்னுடைய பரல்களைத் தருவார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு கிரகம் எந்தெந்த வீடுகளுக்கு தன்னுடைய பரல்களை தருகிறதோ அந்த வீடு அந்த கிரகத்திற்கு பலம் வாய்ந்த இடமாகும். இதன் அடிப்படையிலேயே கோச்சார பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதன்படி கோச்சார குரு, ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது கோச்சார குரு பலம் வாய்ந்தவராக இருப்பார். இதையே குரு பலம் என குறிப்பிடுகிறார்கள்

விற்காத வீட்டு மனைகளை விற்பனை செய்ய எளிய பரிகாரம்.

விற்காத வீட்டு மனைகளை விற்பனை செய்ய எளிய பரிகாரம்.

சிலர் தங்கள் வீட்டையோ,வீட்டு மனையையோ அல்லது விவ்சாய நிலத்தையோ விற்பதற்கு முயற்சி செய்தும் விற்க முடியாமல் சிரமபட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டு முற்றம்,காலி மனை அல்லது விவசாய நிலத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்துக்கொண்டு வராக பெருமாள் கோவிலுக்கு சென்று திங்கள் கிழமை புதன் ஹோரையில் அல்லது வெள்ளிக்கிழமை புதன் ஹோரையில் அந்த மண்ணை பெருமாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் மண்,மனைகள் விற்பனையாகும்.

Sunday, 28 June 2015

சயன சுகம் என்றால் என்ன?


சயன சுகம் என்றால் என்ன?
மனம் ஒன்றுபட்ட தம்பதிகள் நல்ல யோனிப்பொருத்தம் உள்ள தம்பதிகள், நல்ல வசியம் உள்ள தம்பதிகள் கணவன் மனைவி இருவருடைய லக்கின வீர்ய சுக களத்திர சயன சம்போக ஸ்தானங்களின் நிலை (1,3,4,7 12,) அந்த ஸ்தானதிபதிகளுக்கும் லக்கினத்தோனுக்கும் ஆன நல்லுறவு, கணவன் ,மனைவி இருவருடைய ஜாதகத்தில் தனிதனியாக லக்கினத்தின் இயல்பு, லக்கினாதிபதியின் குணாதிசயம், இருவருடைய லக்கினத்தோனுக்கும் உடைய கிரக வசியம் , மேற்க்கூறிய அனைத்து ஸ்தானங்களையும் பார்க்ககூடிய கிரகங்களின் பார்வை இவையனைத்தையும் நீக்கமர ஆராய்ந்தால்தான் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.....
ஒரு பெண்னுக்கு மேஷ லக்கினம் என்றால் ஆனுக்கு சிம்மமாக இருக்க வேண்டும்.. அதாவது இருவருடைய உடல் தத்துவங்களும் நெருப்புத்தத்துவங்கள். அடுத்து வீர்ய ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் அதன் இயல்புகள் ஒத்துபோக வேண்டும். இதில் பென்னை விட ஆனின் மூன்றாமிடமும் மூன்றாமிடத்து அதிபதியும் சற்று பலமாக அமைய வேண்டும். அடுத்து சுகஸ்தானம் மற்றும் அதன் ஸ்தானாதிபதிகளின் உறவு நல்லுறவாக இருக்க வேண்டும். அடுத்து களஸ்திர ஸ்தானங்கள் அதன் ஸ்தானாதிபதிகளின் நிலை வசியமுடையதாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்....
இந்த வசியம் குறைந்தாலோ இருவருடைய களஸ்திர ஸ்தானாதிபதிகளின் உறவு பகை நீச்சம் பெற்றாலோ சதிபதிகளின் மனக்கற்பு பாதிக்கப்படும்... மற்ற மூன்று ஸ்தானங்களின் நிலை நன்றாக இருந்து களஸ்திர ஸ்தானாதிபதிகளின் நல்லுறவு கெட்டிருந்தால் தம்பதிகள் உடலுறவின் போது கணவன் தனக்கு பிடித்த வேறு ஒரு பென்னையோ, மனைவி தனக்கு பிடித்த வேறு ஒரு ஆனையோ மனதில் நினைத்துக்கொண்டு சுகம் அனுபவிக்கும் நிலை வரலாம். ஒரு ஆனின் ஜாதகத்தில் களஸ்திர பாவாதிபதி தன் மனைவியின் களஸ்திர பாவாதிபதியோடு பகைபெற்று தன் மனைவியின் இளைய அல்லது மூத்த சகோதரிகளின் ஏழாம் பாவாதிபதிகளோடும் லக்னாதிபதிகளோடும் அன்யோன்ய வசியம் பெற்றால் மனைவிக்கு தெரியாமல் மச்சினியோடு ஊ...லல்லல்லாதான்..... இது மச்சினிக்கு மட்டுமல்ல.....மாமியாருக்கும் பொருந்தும் என வருத்தத்தோடு சொல்லிக்கொள்கிறேன்....
அதேபோல ஒரு பெண் தன் கனவனின் சகோதரர்களோடு தொடர்பு கொள்வதும் தன் மாமனாருடன் தொடர்பு வைத்துக்கொள்வதும் இதே கிரக ஜாலங்கலே!!! ஆனால் இதில் எல்லாவற்றிலும் தப்பித்துதான் ஒரு ஆனோ ஒரு பெண்னோ படிதாண்ட முடியும்...! இதர்க்கு கிரக வசியத்தோடு யோனிபொருத்தமும் மிக மிக மிக முக்கியம்......எந்த ஒரு ஆனோ பெண்னோ தன் துனையை பிரிந்து வேறு ஒருவரின் மீது நாட்டம் வருவதர்க்கு பொருந்தா யோனியே முதல் காரணம் என்பதே உண்மை! இதில் இன்னொரு விடயத்தை முக்கியமாக சொல்லியே ஆக வேண்டும்....யோனிபொருத்தம் இல்லை , வசிய பொருத்தம் இல்லை, லக்கினப்பொருத்தம் இல்லை ,ஆனாலும் ஒரு தம்பதிகள் எந்ததவறுக்கும் இடமளிக்காமல் வாழ முடியும் என்றால் அதர்க்கு கனவன் மனைவி இருவருடைய நாலாமிடத்து பொருத்தமும் நாலாமதிபதிகளின் நிலையும் நன்றாக இருந்தாலே சயன சுகத்தை பெரிதாக நினைக்காமல் இருவரும் ஆயுள் முழுவதும் நல்லொழுக்கமுடைய சதிபதியாக வாழ்ந்து விடுவார்கள்....இதில் யாரோ ஒருவருடைய ஜாதகத்தில் நாலாமதிபதி கெட்டிருந்தால் அந்த ஒருவர் மட்டும் மற்றொருவருக்கு துரோகம் செய்து விடுவார்....... இருவரின் நாலாமிடமும் கெட்டு இருவருக்கும் யோனி பொருத்தமும் இல்லையென்றால் இருவருக்குமே காலம் முழுவதும் கடைச்சாப்பாடுதான்!!! ””
மேலும் மற்ற எல்லா பொருத்தமும் இருந்தும் இருவருக்குமோ அல்லது இருவரில் ஒருவருக்கோ பன்னிரெண்டாமிடம் மட்டும் கெட்டிருந்தால் அவர்களின் போக இன்பத்திர்க்கு இடையூருகள் ஏற்ப்படும்...அதாவது ஏகாந்தமான சூழல் அமையாதது...அல்லது கூட்டுகுடும்பமாக எல்லோரும் ஒரே அறையில் தூங்கும் நிலைமை....குழந்தைகளை தனியறையில் தூங்கவைக்க வசதியில்லாமல் போவது....ஒரு வகையான பதற்றமான சூழ்னிலை போன்றவை பன்னிரெண்டாம் ஸ்தானமோ ஸ்தானாதிபதியோ கெடுவதால் ஏற்படும்...! அப்படிப்பட்ட தம்பதிகள், அதாவது லக்கின வீர்ய சுக களத்திர பொருத்தங்கள் நன்ராக இருந்து பன்னிரெண்டாம் இடமோ அதன் அதிபதியோ மட்டும் கெட்டிருந்தால் கிடைத்த இடத்தில் கிடைத்த நேரத்தில் இருவரும் வெற்றிக்கொடி நாட்டிவிடுவார்கள். சமயலறை ,குளியலறை ,எல்லாமே இவர்களுக்கு சமயம் கிடத்தால் சயன அறையே.......
முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால் செப்போது இளமுளையாருடன் சேரவும் சீவன் விடும் அப்போது கண்கலக்கப்படவும் வைத்தாய் அய்யனே எப்போதுனைகானவல்லேன் திருக்காளத்தி ஈஸ்வரனே “” என்று ஒரு கட்டத்தில் சயன சுகத்தை வெறுத்து ஆன்மீக நாட்டம் கொள்ளுவதர்க்கும் கிரகங்களே காரணம்....சில சமயம் மனைவியும் காரணமாவதும் உண்டு..... கைப்பிடி நாயகன் தூங்கயிலேயவன் கையெடுத்துப்புரம் தன்னில் அசயாமல் முன்வைத்த அயல்வளவில் ஒப்புடன் சென்று துயில்னீத்து பின் வந்துறங்குவாளை எப்படி நான் நம்புவேன் இறைவா “” என்று புலம்ம்புவதர்க்கு காரணமும் கிரக லீலைகளே!.... ””செப்பளவு கொங்கை சேயிலையாரை திரட்டிவந்தவள் முப்பொழுதென்னும் முகத்தோடு முகம் சேர்த்து முத்தமிட்டு அந்த கொப்புழம் தொட்டுக்காம குளத்தினில் மூழ்கி குளிப்பதைவிட அந்த அப்பனை பாடி துதிப்பதில் ஆனந்தமில்லையடாவென்று “” சிருங்காரச்சதகம் பாடி திரிவதர்க்கு காரணமும் கிரகங்களே....
ஆகவே திருமனப்பொருத்தம் பார்க்கும் அன்பர்கள் 1,3,4,7,12, ஆகிய ஐந்து ஸ்தான ஸ்தானாதிபதிகலின் பொருத்தத்தையும் கணித்து ஒரு நல்ல மகிழ்ச்சியான குடும்பம் அமைய வழிகோலுங்கள்.....தினம் கணம் யோனி ராசி ரஜ்ஜீ போன்ற முக்கிய பொருத்தங்களோடு ஆன் பெண் மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் போடும் லக்கின வீர்ய சுக களத்திர சயன கிரக நிலைகளையும் சோதித்து பொறுத்துபவனே நல்ல ஜோதிடன். திருமனத்திர்க்கு பின் ஒரு ஆனோ ஒரு பெண்னோ கலவியிண்பம் பெறமுடியாமல் துன்புற்றால் அதில் ஒரு பங்கு பாவம் ஜோதிடனையும் சேரும்

Saturday, 20 June 2015

ஒரு பல்லியால் முடியும்போது ஏன் நாம் செய்ய கூடாது ?

ஒரு பல்லியால் முடியும்போது ஏன் நாம் செய்ய கூடாது ?
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துட்டு இருந்தார். ஜப்பான் நாட்ல பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் ரெண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில்
ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார்.
அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப்
பல்லியை சுற்றி பார்த்தார். அவர்
அப்போதுதான் கவனிச்சாறு. வெளிப்
பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த
ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறதுன்னு.
அவருக்கு ஆச்சரியமா இருந்தது. ''அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது.
இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும்'னு மேற்கொண்டு வேலை செய்யாம அந்தப் பல்லியவே கண்காணிச்சுட்டு உட்கார்ந்து இருந்தாரு.
கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில்
வருவதைக் கண்டாரு. அந்தப் பல்லி தன் வாயில்
இருந்து உணவை எடுத்து சுவற்றில்
சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.
அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அதாவது 3 ஆண்டுகளா இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கு.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாம 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.
ஒரு பல்லியால் முடியும்போது உங்களால்
முடியாதா ???

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்

கிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்

கிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்
ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிஷத்தில் கிரஹங்களின் வயதினை பற்றி கூறியதெல்லாம் தொகுத்து ஒரு பதிவினை வெளியிட விரும்பி இதனை தர விரும்புகிறேன். கிரஹங்களுக்கும் மனிதனுடைய வயதிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என ஆராய்வது ஜோதிஷத்திற்கு மிகவும் தேவையாய் இருக்கிறது
கிரஹன்களுக்குண்டான வயதினை பற்றி ஒரு நூலில்
பாலோ தராஜ குமாரகஸ்த்ரிம் ஸத்குரு: ஷோடஸவத்ஸர: ஸித:
பங்சாஸதர்கோ விதுரப்தஸப்ததி: ஸதாப்தஸங்க்யா ஸனிராஹூகேதவ:
பொருள்: செவ்வாய் குழந்தையாகவும், புதன் சிறுவனாகவும், குரு 30 வயதானவராகவும், சுக்கிரன் 16 வயதுள்ளவளாகவும், சூரியன் 50 வயதுள்ளவராகவும், சந்திரன் 70 வயது உடையவராகவும், சனி, ராஹூ, கேது 100 வயது உடையவராகவும் இருக்கிறார்கள்.
இங்கே குறிப்பிடப்பட்ட வயதுகள் கிரஹங்களின் ஆதிக்கத்தினை பற்றி குறிப்பிடாமல் கிரஹங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று கூறியுள்ளனர் என கருதுகிறேன்.
அதாவது கிரஹங்களை ஒரு நபர் என வைத்துக்கொண்டால் அதனின் செயலானது எத்தனை வயது கொண்டவராக இருக்கும் என்பதனையே இவ்வாறு கூறியுள்ளனர்
செவ்வாய் (2) குழந்தையாக செயல்படும் என்றால் விளைவினை பற்றி சிந்திக்காமல் அது செயல்படும் என எடுத்துக்கொள்ள வேண்டும். புதன் (10) சிறுவனாக செயல்படும் என்றால் எந்த பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல் யாரையேனும் சார்ந்தே இருக்கும் என்றும், குரு (30) துடிப்போடு குறிக்கோளை நோக்கி செல்லக்கூடியதாகவும், சுக்கிரன் (16) புலனால் உணரக்கூடியதற்கு எல்லாம் ஆசைபடக்கூடியதாகவும், சூரியன் (50) பொறுப்புள்ள மரியாதை எதிர்பார்க்கிற நபராகவும், சந்திரன் (70) எல்லோரையும் அரவணைக்கிற 
அனுபவசாலியாகவும், சனி ராகு கேது (100) பொறுமை, அனுபவம், இயலாமை போன்றவற்றினை உள்ளடக்கியதாகவும் இருக்கும் என எடுத்துக்கொள்ளலாம்.
வேறு சில நூல்களில் 
சூரியன் - 23 வயதிலிருந்து 41 வயதுவரை
சந்திரன் - 0 வயதிலிருந்து 4 வயதுவரை
செவ்வாய் - 42 வயதிலிருந்து 56 வயதுவரை
புதன் - 5 வயதிலிருந்து 14 வயதுவரை
குரு - 57 வயதிலிருந்து 68 வயதுவரை
சுக்கிரன் - 15 வயதிலிருந்து 22 வயதுவரை
சனி - 69 வயதிலிருந்து 108 வயதுவரை
என குறிபிடப்பட்டிருக்கிறது.
இதனை கொண்டு ஜாதகருடைய இத்தனையாவது வயதில் இந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அறிந்துகொள்ளலாம். கிரஹங்களை ஹோரா வரிசைக்கு எதிர் சுற்றில் எழுதினால் ஒரு ஒழுங்கு முறையில் கீழ்கண்டவாறு கிடைக்கும்
சந்திரன் - 0 வயதிலிருந்து 4 வயதுவரை
புதன் - 5 வயதிலிருந்து 14 வயதுவரை
சுக்கிரன் - 15 வயதிலிருந்து 22 வயதுவரை
சூரியன் - 23 வயதிலிருந்து 41 வயதுவரை
செவ்வாய் - 42 வயதிலிருந்து 56 வயதுவரை
குரு - 57 வயதிலிருந்து 68 வயதுவரை
சனி - 69 வயதிலிருந்து 108 வயதுவரை இவ்வாறு கிடைக்கும்
இதன் கருத்திற்கு எதிர் கருத்தாக வராஹமிஹிரர் தன்னுடய பிருஹத் ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரஹகத்தின் ஆதிக்கம் குறிப்பிட்ட வயதில் இருக்குமென கூறுகிறார்.
அதன்படி
சந்திரன் - 0 வயதிலிருந்து 1 வயதுவரை
செவ்வாய் - 1 வயதிலிருந்து 3 வயதுவரை
புதன் - 3 வயதிலிருந்து 12 வயதுவரை
சுக்கிரன் - 12 வயதிலிருந்து 32 வயதுவரை
குரு - 32 வயதிலிருந்து 50 வயதுவரை
சூரியன் - 50 வயதிலிருந்து 70 வயதுவரை
சனி - 70 வயதிலிருந்து 120 வயதுவரை ஆதிக்கம் செலுத்துகிறது
இருவேறு கருத்துக்கள் இருப்பதினால் ஜோதிஷிகர்களாகிய நாம் ஆய்விற்கு உட்படுத்தி இதனில் தெளிவுறவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
வேறு சில நூல்களில் கிரஹங்கள் ஜாதகரின் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகே நன்மையோ/தீமையோ அதிகம் தருகின்றன என கூறப்பட்டுள்ளது. அதன்படி
சூரியன - 22
சந்திரன் 24
செவ்வாய் 28
புதன் 32
குரு 16
சுக்கிரன் 25
சனி 36
ராகு 48
கேது 48 இதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்
இதிலிருந்து கிரஹங்கள் நம்மீது செலுத்தும் ஆதிக்க 
வயதினை புரிந்துகொள்ளமுடிகிறது. இதனை ராசிகளுக்கு கூறப்பட்ட பாகைககான நபரை தொடர்புபடுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. இதன் படி பராசரா ஹோராவில்

க்ரமாத் பால குமாரோऽத யுவா வ்ருத்தஸ்ததா ம்ருத 
ஷட்ஶைரஸமே கேட: ஸமே ஜ்ஞேயோ விபர்யயாத்
(பராசர ஹோரா- கிரஹாவஸ்தாத்யாய)
ஆண் ராசிகளை ஐந்து சம பாகையாக அதாவது 6 பாகை கொண்ட அளவாக பிரித்தால் அதன் பாகமானது பால , குமார, யுவ, விருத்த, மிருத என இருக்கிறது. 
பெண் ராசிகளை ஐந்து சம பாகையாக அதாவது 6 பாகை கொண்ட அளவாக பிரித்தால் அதன் பாகமானது மிருத, விருத்த, யுவ, குமார, பால என இருக்கிறது.
பால- பாலகன்/ குழந்தை
குமார- குமாரன்/ சிறார்
யுவ- வாலிபன்/ இளைஞன்
விருத்த- வயோதிகர்/ மூப்புடையோர்
மிருத- இறக்கும் தருவாயில் உள்ளவர்
பலம் பாதமிதம் பாலே பலார்தம் ச குமாரகே
யூநி பூர்ணம் பலம் ஜ்ஞேயம் வ்ருத்தே கிஞ்சித் ம்ருதே ச கம்
பாலனாக இருக்கும்போது கால்பங்கு பலமும், குமாரத்தில் அரை பங்கு பலமும், யுவத்தில் முழுபலமும், விருத்தத்தில் எட்டில் ஒரு பங்கு பலமும், மிருதத்தில் பலம் இல்லாமையும் கிரஹங்கள் அடைகின்றன, கிரஹங்களுக்கான வயதினையும் அது ராசியில் இருக்கக்கூடிய நிலையையும் கருத்தில் கொண்டு பலன் கூறினால் பலன் சரியாக வரும் என்பது என் கருத்து. ராசி சந்தியில் இருக்கக்கூடிய கிரஹங்கள் எந்த பலத்தில் இருக்கிறது என்பதையும் கவணத்தில் கொள்ளவேண்டும்.
ராசியைப்போலவே பாவத்திற்கும் இதனை பொறுத்தி பார்க்கவேண்டும். பராசர தன்னுடைய ஹோராவில்
உக்தா லக்னாதி பாவாநாம் தீப்தாம்ஸாஸ்திதிஸம்மிதா
தஸ்மாத் பாவாத்புர: ப்ருஷ்டே தித்யம்ஸைஸ்தத்பலம் ஸ்ப்ருதம்
லக்னாந்தித்யம்சத: பூர்வ பாவாராம்ப: ப்ராஜயதே
தித்யம்ஸை: பரதஸ்தஸ்ய பூர்தி: சந்தி ச தெள ஸ்ம்ருதெள
பாவாரம்போ பலாரம்போ பூர்ன பாவஸமே க்ரஹே
பலம் சூந்யம் ச ஜ்ஞேயம் மத்யே அநுபாதத:
இதன் பொருள் ஒரு பாவ முனையின் முன்னால் 15 பாகை பிருவிருத்தி எனப்படும். பாவ முனைக்கு முன்னால் 15 பாகையில்தான் ஒருபாவம் ஆரம்பிக்கின்றது பாவ முனையின் பின் 15 பாகை பூர்த்தி எனப்படும். இங்கு பாவமானது முடிவடைகிறது. பாவ முனைக்கு கிரஹங்கள் எவ்வாறு நெருங்கி இருகிறதோ அதற்கேற்றவாறே கிரஹங்கள் நன்மையோ, தீமையோ தருகின்றன. அதாவது பாவ ஆரம்பத்தில் இருக்கும் கிரஹங்களும், பாவ முடிவில் இருக்கும் கிரஹங்களும் பலமாக இருந்தாலும் கூட நன்மையை முழுமையாக தருவதில்லை என கூறுகிறார். மேலும் கிரஹங்கள் பாவத்திற்கு நெருங்கிய மதிப்பின் அளவீட்டை ராஷ்மி பலம் கொண்டு குறிக்கும் முறையும் இருந்திருக்கிறது. 10 நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் குழந்தைக்கு பாவமத்திமம் மாறும் என்பதால் அதனை பொறுத்து கிரஹங்கள் கொடுக்கும் நன்மை/தீமையின்அளவில் வித்தியாசம் வரலாம்.
ஒரு பாவமத்திமத்திற்கு முன், பின் 3 பாகைகளுக்குள் இருக்கக்கூடிய கிரஹங்களே முழுமையான வேலை செய்கின்றன. அடுத்ததாக முன் பின் 3 பாகை தாண்டி 9 (3+6) பாகைக்குள் இருக்ககூடிய கிரஹங்கள் வேலைசெய்கின்றன பாவத்தின் மத்திமம் எந்த ராசியில் இருக்கிறதோ அதனின் ஆன்/ பெண் தன்மையை பொறுத்து பாவத்திற்கும் பால, குமார, யுவ, விருத்த, மிருத்யு தன்மை ஏற்படும்

கிரக அஸ்தங்க தோஷம்

சந்திரனுக்கு கிரக அஸ்தங்க தோஷம் உண்டா?
புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.
கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது 
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.
கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்
கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)
சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது, 
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)
சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும். 
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது
கிரக கடவு (Transit)அஸ்தங்கமா? 
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்
அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும். 
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும். 
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.
வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்
பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன். 
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)

லால் கிதாப் பரிகாரங்கள் !!!

லால் கிதாப் பரிகாரங்கள் !!!
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றிற்கு தீக்ஷை எதுவும் தேவை இல்லை .இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.
மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-
1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.
ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.
மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள்சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டியில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்.
சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்.
கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.
துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்.
விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்
தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் செண்டு கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்.
மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது.
கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்.
மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்!!!
1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று