jaga flash news

Tuesday, 30 June 2015

பாவங்கள் போக்கும் பாதுகை

பாவங்கள் போக்கும் பாதுகை

ஜோதிடத்தில் பன்னிரண்டாம் பாவத்திற்கு மோட்சஸ்தானம் என்று பெயர்.மோட்சம் என்றால் விடுதலை என்று பொருள்.அதாவது இங்கே மோட்சம் என்பது பிறவிக்கடனிலிருந்து விடுபடுவதைக்குறிக்கும்.பிறவிக்கடனைக்குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும்.அதிலிருந்து மனிதனை விடுவிப்பது பன்னிரண்டாம் பாவமாகும்.
பன்னிரண்டாம் பாவம் காலப்புருசனின் (ராசிப்புருசனின்) பாதங்களைக்குறிக்கும். ஜோதிடத்தில் விஷ்ணுவை ராசிப்புருசன் என்றும்,காலப்புருசன் என்றும் அழைப்பர். எனவே ராசிகட்டத்தில் உள்ள பன்னிரண்டாம் பாவம் விஷ்ணு பாதத்தைக்குறிக்கும்.
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தலை மீது சடாரி வைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இறைவனின் திருப்பாதங்களை கிரீடம் போன்று செய்திருப்பார்கள்.அதை நம் தலை மீது வைத்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.இறைவனின் திருப்பாதங்களை நம் தலை மீது வைத்தால் நம் பாவங்கள் தொலையும்.தினமும் பெருமாள் கோவில்களுக்கு சென்று சடாரி வைத்துக்கொண்டால் அன்றைய தினம் நாம் செய்த பாவங்கள் அன்றே நம்மைவிட்டு விலகும்.பெருமாள் கோவிலுக்கு சென்றவர்கள் சடாரி வைத்துக்கோள்ளாமல் திரும்பி வரக்கூடாது.விஷ்ணுவின் பாதங்களிலிருந்தே கங்கை தோன்றுவதாக கூறுவர்.விஷ்ணு பாதத்திலிருந்து தோன்றும் கங்கை நம் பாவத்தைப்போக்குவாள்.
எந்த கோயிலுக்கு சென்றாலும்,முதலில் இறைவனின் திருப்பாதங்களையே தரிசிக்கவேண்டும்.குருநாதர் மற்றும் பெரியோர் பாதங்களில் விழுந்து வணங்குவதாலும் நம் பாவங்கள் நம்மை விட்டு நீங்கும்.எனவே குரு நாதர்களையோ,பெரியோர்களையோ சந்திக்கும்பொழுது அவர்கள் பாதங்களில் விழுந்து ஆசி பெற வேண்டும்.
பக்தர்கள் கோவில்களில் கொடி மரத்தருகே தரையில் வீழ்ந்து வணங்குவர்.அவ்வாறு வீழ்ந்து வணங்கும்போது இறைவனின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்குவதாக பாவித்துக்கொண்டு வணங்கினால் நம் பாவங்கள் தொலையும்.
திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து பாதுகா சஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தை ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியவர் இயற்றியிருக்கிறார். முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.ஒரே இரவுக்குள் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரத்தியெட்டு ஸ்லோகங்கள் முழுவதையும் அவர் எழுதி முடித்துள்ளார் என்பது தான் இதன் சிறப்பு.இந்த பாதுகா சஹஸ்ரத்தை நாளுக்குஒரு ஸ்லோகம் வீதம்,ஒவ்வொரு ஸ்லோகத்தையும் 108 முறை பாராயணம் செய்து வந்தால்முற்பிறவி பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.ஸ்லோகங்களை ஜபிக்கும்போது, இறைவனின் பாதுகைகள் மீதே நம் மனம் இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment