jaga flash news

Tuesday, 30 June 2015

நீருக்கிரைத்த எள்ளும் சோறும் பித்ருக்களுக்குப் போய் சேருமா?

நீருக்கிரைத்த எள்ளும் சோறும் பித்ருக்களுக்குப் போய் சேருமா?


ஒருவர் இறந்த திதியையொட்டி பித்ரு காரியங்கள் செய்யப்படுகின்றன. திதி என்பது பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் ஒன்றாகும்.
பஞ்சாங்கம் – பஞ்ச பூதம்
வாரம் - நெருப்பு
திதி – நீர்
நட்சத்திரம் – காற்று
யோகம் – ஆகாயம்
கரணம் – நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்றான திதியானது நீர் தத்துவத்தைக் குறிக்கிறது. பித்ரு பூஜைகளும் நீர் நீர்நிலைகளுக்கு அருகிலேயே செய்யப் படுகிறது. பித்ரு பூஜையின் முக்கிய அம்சம் என்னவென்றால் பூஜை செய்பவன் எள்ளையும்,சோற்றுப்பிண்டத்தையும் நீரில் வைத்து அதன் மீது நீரை தெளிப்பான்.இவ்வாறு நீருக்கிரைக்கப்படும் எள்ளும்,சோற்றுப்பிண்டமும் பித்ருக்களைப்போய் சேருமா? என்பதற்கு தத்துவார்த்தமான விடை உண்டு, அதை பார்ப்போம்.
பஞ்ச பூதம் – புலனுறுப்பு – புலனறிதல்
நிலம் – உடல் – உணர்தல்
நீர் – வாய் –சுவையறிதல்
நெருப்பு – கண்கள் – பார்த்தல்
காற்று – மூக்கு – நுகர்தல்
ஆகாயம் – காது – கேட்டல்
பஞ்ச பூதங்களில் நீரானது புலனுறுப்புகளில் வாயைக்குறிக்கிறது.எனவே நீரில் தெளித்த எள்ளும்,சோறும் பித்ருக்களின் வாய்க்குள் செல்வதாக கொள்ளலாம். மேலும் இறந்தவர்களை வைகுண்ட பதவி அடைந்ததாக கருதுவது வழக்கம். வைகுண்ட நாதனான விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான். எனவே வைகுண்டம் என்பது சமுத்திரத்தைக்குறிக்கிறது. சமுத்திரத்தில் மீன் வடிவத்தில் முன்னோர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை.
பித்ரு பூஜையை சரிவர செய்ய முடியாதவர்கள் அமாவாசை நாட்களில் புனித நதிகளில் நீராடி மீன்களுக்கு சாதம்,பொரி போன்ற உணவுப்பொருட்களை அளித்தால் பித்ருக்கள் சந்தோசமடைவார்கள். இதன் மூலம் பித்ரு தோசத்திலிருந்து நிவாரணமடையலாம்

No comments:

Post a Comment