jaga flash news

Monday, 1 June 2015

கை ரேகை

திருமண ரேகையானது சுட்டு விரலுக்கு கிழே இருக்கும். (படத்தை பார்க்க) இந்த திருமண ரேகை ஒருவருக்கு திருமணம் எந்த வயதில் நடக்கும் என்று கண்டறிவதற்கு பயன்படும்.

அதாவது சீக்கிரம் திருமணம் நடைபெறுமா அல்லது காலதாமத திருமணமா என்பதை கணிக்க முடியும்.

ஒரு சிலருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட‌ ரேகைகள் இருக்கும் அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ரேகைகள் இருக்கும் போது எந்த ரேகை நீட்டாக இருக்கிறதோ அந்த வயதில் திருமணம் நடைபெறும்.

எனக்கு இரண்டும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது என்றால் அவர்களுக்கு அவர்களீன் திருமண காலம் வரும் போது இரண்டில் ஒரு ரேகை வளர ஆரம்பிக்கும்.

குறிப்பு: எக்காரணத்தை கொண்டும் ரேகை கீழே வளையக்கூடாது அதாவது வளரும் ரேகை இருதய ரேகை நோக்கி கீழாக வளரக்கூடாது. அப்படி கீழாக வளர்ந்தால் அந்த திருமணம் தோல்வியில் முடியும். ஆனால் திருமண ரேகை மேலே வளையலாம்.

எனக்கு 20 வயதில் திருமணம் காட்டுகிறது என்றால் அப்போது திருமண ரேகை காதல் ரேகையாக செயல்படும். எப்படி திருமண ரேகை கீழே வளையக்கூடாதோ அப்படியே இந்த 20 வயதில் இருக்கும் ரேகையும் கிழே வளையக்கூடாது. வளைந்தால் காதல் தோல்வியில் முடியும்.

இந்த ரேகையை பார்த்துவிட்டு அப்படியே நமது ஜாதகத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள். நாம் நமது தசா புத்தியையும் பார்த்துக்கொள்வது சாலச்சிறந்தது.

திருமண ரேகை எந்த அளவிற்கு இருதய ரேகைக்கு கிட்ட இருக்கிறதோ இருக்கிறதோ அந்த அளவிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். அதற்கான வாய்ப்புகளும் அமையும்.தசாபுத்திகள் சரியில்லை என்றால் அந்த திருமண ரேகை கீழாக வளைந்திருக்கும் அல்லது கீழாக வளைந்து வளரும்.
 
கைரேகை பிரசண்ணம் ஒரு எளிமையான பிரசண்ணம் தான் என்றாலும் அப்பலன் எப்போது மாறு மென்பது யாராலும் சொல்ல முடியாது. எனென்றால் கையில் உள்ள ரேகை தினம் தினம் மாறும் தன்மை உடையது.

நினைவில் வையுங்கள் தாங்கள் சொல்லும் பலன் ஒரு நாளில் கூட மாறிவிடும். அதனால் பலன் சொல்வதற்கு முன் நிதானமாக யோசித்துக்கொள்ளுங்கள். அதனால் கைரேகை பிரசண்ணம் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில விடயங்களையும் தசா புத்திகளையும் கோள்சாரங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பு: கைரேகை பலன் உடனே நடக்கும். ஆனால் பலன் சொல்லவதற்கு அனுபவம் கண்டிப்பாக வேண்டும்.

9TH ANNUAL EXAM- YEAR 2003:

9 வகுப்பு படிக்கும் போது 12 வகுப்பு படிக்கும கராத்தே சொல்லிகொடுக்கும் அண்ணனும் மற்றும் சதீஷ் அண்ணனும் வந்து நாங்கள் அடுத்த வருடம் கல்லூரி சேர்ந்துவிடுவோம் தங்கள் காதல் நீடிக்குமா என்றனர்.

நான் இருவர் கையில் இருக்கும் காதல் ரேகையை பார்த்துவிட்டு, கரேத்தே அண்ணனுக்கு தங்கள் காதல் நீடிக்கும் என்றும், சதீஷ் அண்ணாவிற்கு தங்கள் காதல் நிறைவேறாது என்றும் என்று சொன்னேன்.

எப்படி சொல்லப்பட்டது?

ஆண்களூக்கு வலது கையில் கட்டை வரலுக்கு கீழே சின்னதாக செங்குத்தான கோடு போகும் அதுதான் காதல் ரேகை. (அனுபவம் தேவை).

கராத்தே அண்ணன் காதல் நீடித்தது எப்படி?

காதல் ரேகையின் மீது குறுக்கீட்டு ரேகை இல்லை. அதனால் தங்கள் காதல் நீடிக்கும் என்று சொன்னேன். படத்தை பார்க்க

சதீஷ் அண்ணன் காதல் நீடிக்காதது ஏன்?

காதல் ரேகையின் மீது குறுக்கீட்டு ரேகை இருக்கிறது. அதனால் தங்கள் காதல் நீடிக்காது என்று சொன்னேன். படத்தை பார்க்க.

நடந்தது என்ன?

கராத்தே காதல் ஒரு 3 வருடம் நீடித்தது பிறகு பிரிந்து விட்டார்கள் அது வேறு கதை.
சதீஷ் அண்ணன் காதல் முடிந்துவிட்டது., அவர்கள் காதலித்த பெண் ரஷ்யா சென்று விட்டாள். இவர் சென்னை சென்றதாக தகவல்.

உபரித்தகவல் கராத்தே அண்ணன் ஜாதகத்தில் சுக்கிரன் 11ல் இருந்தார்.
சதீஷ் அண்ணன் ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் இருந்தார். இரண்டு பேருமே சிம்ம லக்கினம். இது மட்டும் தான் நினைவிருக்கிறது.

நம் கையில் என்னற்ற ரேகையில் இருந்தாலும் மிக முக்கியமான ரேகைளை மட்டும் கொடுத்திருக்கின்றேன். படத்தை சேமித்து வைத்துக்கொள்ளூஙகள்.
விதி ரேகை நம் கையில் உள்ள செல்வத்தையும் , நாம் வாழ்க்கையில் பெறும் வெற்றியையும்.
இருதய ரேகை‍‍ = நமது மன நிம்மதியையும், மற்றும் ஞானத்தையும்.
புத்தி ரேகை = நம் வாழ்க்கையில் கிடைக்க இருக்கும் வெகுமதி, புத்தியால் கிடைக்கும் வெற்றியையும், அறிவாற்றலையும்.
ஆயுள் ரேகை = நம் ஆயுளையும், நம் உடல் ஆரோக்கியத்தையும்.
செவ்வாய் ரேகை = ஆயுள் ரேகைக்கு துனையாக செயல்படும்.மற்றும் தெய்வபக்தியும், வீடு நிலம், குறிக்கும்.
காதல் ரேகை = நம் காதல் வாழ்க்கையும். தோல்வி அடையபோகும் சமயம் சரியாக அதன் மீது குறுக்கீட்டு ரேகை வளரும்.
ஞான ரேகை அல்லது குரு ரேகை = ஒருவர் ஆன்மிக எண்ணத்தையும், எதையும் பகுத்து ஆராயதலையும், ஆபத்து வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உடையவராகவும் இருப்பார்.
படத்தில் காட்டப்பட்ட சூரிய ரேகை நம் கையில் இருப்பது= மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவதை குறிக்கும். மேலும் 35 வயதிற்கு மேல் ஒரு ஸ்திரமான வாழ்க்கை அமையும்.
படத்தில் உள்ள ரேகைகளில் ஏதேனும் குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால் அந்த ரேகை பாதிப்பு அடைந்துள்ளது என்று அர்த்தம்.
அதன் பாதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்றால் எந்த இடத்தில் பாதிப்பு தெரிகிறதோ அந்த ரேகையின் இடம் குறிக்கும் வயதில் அப் பாதிப்பானது தெரியும்.
வயதிற்கான படம் அடுத்த பதிவில் இனைக்கப்படும்.
ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் அணைத்து நல்ல உள்ளங்களூக்கும், என் நன்றிகள். நம் கையில் என்னற்ற ரேகையில் இருந்தாலும் மிக முக்கியமான ரேகைளை மட்டும் கொடுத்திருக்கின்றேன். படத்தை சேமித்து வைத்துக்கொள்ளூஙகள்.
விதி ரேகை நம் கையில் உள்ள செல்வத்தையும் , நாம் வாழ்க்கையில் பெறும் வெற்றியையும்.
இருதய ரேகை‍‍ = நமது மன நிம்மதியையும், மற்றும் ஞானத்தையும்.
புத்தி ரேகை = நம் வாழ்க்கையில் கிடைக்க இருக்கும் வெகுமதி, புத்தியால் கிடைக்கும் வெற்றியையும், அறிவாற்றலையும்.
ஆயுள் ரேகை = நம் ஆயுளையும், நம் உடல் ஆரோக்கியத்தையும்.
செவ்வாய் ரேகை = ஆயுள் ரேகைக்கு துனையாக செயல்படும்.மற்றும் தெய்வபக்தியும், வீடு நிலம், குறிக்கும்.
காதல் ரேகை = நம் காதல் வாழ்க்கையும். தோல்வி அடையபோகும் சமயம் சரியாக அதன் மீது குறுக்கீட்டு ரேகை வளரும்.
ஞான ரேகை அல்லது குரு ரேகை = ஒருவர் ஆன்மிக எண்ணத்தையும், எதையும் பகுத்து ஆராயதலையும், ஆபத்து வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உடையவராகவும் இருப்பார்.
படத்தில் காட்டப்பட்ட சூரிய ரேகை நம் கையில் இருப்பது= மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவதை குறிக்கும். மேலும் 35 வயதிற்கு மேல் ஒரு ஸ்திரமான வாழ்க்கை அமையும்.
படத்தில் உள்ள ரேகைகளில் ஏதேனும் குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால் அந்த ரேகை பாதிப்பு அடைந்துள்ளது என்று அர்த்தம்.
அதன் பாதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்றால் எந்த இடத்தில் பாதிப்பு தெரிகிறதோ அந்த ரேகையின் இடம் குறிக்கும் வயதில் அப் பாதிப்பானது தெரியும்.
வயதிற்கான படம் அடுத்த பதிவில் இனைக்கப்படும்.
ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் அணைத்து நல்ல உள்ளங்களூக்கும், என் நன்றிகள்.

1 comment: