jaga flash news

Friday, 19 June 2015

ஜாதகப்பொருத்தமும் பத்துப்பொருத்தங்களும்

ஜாதகப்பொருத்தமும் பத்துப்பொருத்தங்களும்

இனி நட்சத்திர அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள பத்துப்பொருத்தங்களுள் எவையெவை முக்கியமான பொருத்தங்களோ அவை நாம் பொருத்தம்பார்க்க எடுத்துக்கொண்ட ஆண் பெண் ஆகிய இருவருக்குமே அமையவில்லை என்று வைத்துக்கொள்வோம் அப்போது அந்த ஆண் பெண் ஜாதகங்கள் நம்மிடம் இருந்தால் அவற்றைக்கொண்டுதான் அவர்களது திருமணத்தை நிச்சயிக்கவேண்டும்.ஆனால் அந்த ஜாதங்களுள் பெண்ணின் ஜாதகத்திலுள்ள இராசியும் நவாம்சதிதையும் பெண்ணின் நடப்புக்கோட்சாரத்தையும் பார்க்கும்போது அந்தப்பெண் தீர்க்கமான மாங்கல்ய பலமுடையவளாகவும் தீர்க்காயுள் உடையவளாகவும் சகலவிதமான செளபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வைநடத்தக்கூடியவளாகவும்
பத்துப்பொருத்தங்களில் தனித்தனியாகச் சொல்லப்பட்ட அமிசங்களில் அனைத்தையுமே ஜாதக்க்கிரக நிலைகளினால் அடைபவளாகவும் இருக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அதைப்போல்வே ஆணின் ஜாதகத்தில் இராசியினையும் நாவம்சத்தையும் தசாபுத்தி நடப்பையும் பார்க்கும் போது அவன் தீர்க்காயுளுடன் வாழ்பவனாகவும் களத்திர சுகத்துடன் புத்திரசம்பத்தையும் அடையக்கூடியனாகவும் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.இப்படி ஜாதக்க்கிரக நிலைகள் அந்த இருவருக்கும் பொருந்தும்போது பத்துப்பொருத்தங்களுள் முக்கியமானவை பொருந்தவில்லையென்றால் அத்தகைய ஆணுக்கு பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா அல்லது பொருத்தங்களில் பலவும் பொருந்தவில்லையே என்பதற்காக அவர்களுக்கு திருமணம் செய்வதுகூடாது என்று நிச்சயிக்கலாமா இத்தகைய நிலைமையில் எடுக்கவேண்டிய முடிவு என்ன
ஜாதக்க் கிரக நிலைகள் ஆண் பெண் ஆகிய இருவருக்கும் சரியாக கணிக்கப்பட்ட அவர்களுடைய ஜாதகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவை பொருத்தமாகஇருப்பதனாலேயே திருமணப் பொருத்தங்கள் பத்துமே ஒவ்வொன்றும் பயனற்றுப்போவதைக்காணலாம்.
1 தினப்பொருத்தம் என்பது ஆயுளையும் ஆரோக்கியத்தையும் விருத்திசெய்வது. ஆண் பெண்இருவர் ஜாதகங்களிலும் ஆயுட்பாவாதிபதியும் ஸ்தானாதிபதியும் சுகஸ்தானாதிபதியும் மிகவும் வலிமையாக இருந்தால் இந்த்த் தினப்பொருத்த்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் அவர்களுக்கு பொருந்திதான் இருக்கும் எனவே சாதகங்கள் சரியாக இருக்கும் போது இந்த்த் தினப்பொருத்தம் பயனற்றுப்போகிறது
2 கணப்பொருத்தம் என்பது ஆண் பெண்ணின் சுகவாழ்வைக்குறிப்பதாகும். இருவர் ஜாதகங்களிலும் சுகபாவம் வலுத்து 2ஆம் வீடுவலிமைபெற்று 7ஆம் பாவம் மிகவும் சிறப்பாக இருந்தால்அவர்கள் நிச்சயமாகச் சுகமாகத்தான்வாழ்வார்கள். இதனால் கணப்பொருத்தம் பார்க்கத் தேவையில்லை இந்த பொருத்த்த்தின் நல்ல பயனை ஆண் பெண்களின் ஜாதகப்பலனே தந்து விடுகின்றன.
3 மகேந்திரப்பொருத்தம் மணமக்களுக்குப் புத்திர விருத்தியை நிச்சயிப்பது ஆண் பெண் ஜாதங்களில் புத்திர ஸ்தானமாகிய பூர்வபுண்ணிய ஸ்தானமும் புத்திர பாவாதிபதியும் புத்திரகாரகனாகிய குருவும் வலிமையாக இருந்தால் அதுவே போதும் புத்திரவிருத்தி நிச்சயமாக உண்டாகிவிடும் இப்போது மகேந்திரப்பொருத்த்த்தைப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை
4 ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் மணமக்களின் பொருளாதார நிலைமையும் சௌகரியங்களையும் வசதிகளையும் நிச்சயிப்பது.ஆண் பெண் ஜாதகங்கள் இரண்டிலும் தனகாரகனாகிய குருவும் தனஸ்தானாதிபதியோ இலாபஸ்தானாதிபதியோ ஐவனஸ்தானாதிபதியோ பலமாக இருந்துவிட்டால் இந்த ஸ்திரீக்கப் பொருத்த்தினால் பெறக்கூடிய பயன்கள் உண்டாகிவிடும் அப்படியாகும் போது இந்தஸ்திரீ தீர்க்கப்பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமில்லாமற்போய்விடும்.
5 யோனிப்பொருத்தம் என்பது மணமக்களின் ஒருங்கிணைந்தசுகவாழ்வை நிச்சயிப்பது ஆண் பெண் ஜாதகங்களில் சயனசுகபோக பாக்கியாதிபதியும் சுக்கிரனும்சகல சுகங்களையும் அளிப்பதற்க்குத் தகுதியுடைய இலக்கினாதிபதியும் மற்ற கிரகங்களும் வலிமையாக இருந்தாலே மணமக்கள் யோனிப் பொருத்த்த்தால் அடையும் நற்பயனை நிச்சயமாக அடைவார்கள் ஆகையால் இந்த யோனிப்பொருத்தம் பார்ப்பதும் அவசியமற்றதாகிவிடுகிறது.
6 இராசிப்பொருத்தம் மணமக்களின் மனப்பொருத்த்தையும் வம்சவிருத்தியையும் நிச்சயிப்பது இருவர் ஜாதகங்களிலும் 5ஆம் வீட்டு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் புத்திரகாரகனும் வலுப்பெற்றிருந்து விட்டால் இராசிப்பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
7இராசியாதிபதிப்பொருத்தம் மணமக்களின் புத்திர்ர்களின் யோகத்தையும் ஆயுளின் தீர்க்கத்தையும் குறிப்பது இருவர் ஜாதகங்களிலும் புத்திர பாவாதிபதியும் புத்திரகாரகனான குருவும் மிகவும் யோக பலமுடையவர்களாக இருந்துவிட்டால் இந்தப்பொருத்த்தின் நற்பயன் நிச்சயமாக ஏற்படத்தான் செய்யும்.எனவே இந்நிலை இராசியாதிபதிப் பொருத்த்தையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை
8வசியப்பொருத்தம் என்பது தம்பதிகள் பரஸ்பரம் உள்ளன்புடன் ஒருவரையொருவர் நேசித்துவாழ்வார்களா என்பதையறிய உதவும். ஆண் பெண் இருவர் ஜாதகங்களிலும் இலக்கினாதிபதியும் சப்தமாதிபதியும் களத்திரகாரகனும் புத்திகாரனும் பலமாகவே அமைந்து அவர்கள் இருவரும் இன்பவாழ்வு வாழ்வதற்குத்தான் பிறந்தவர்கள் என்று நிச்சயிக்கும் போது இந்த வசியப்பொருத்தம் பார்ப்பதும் தேவையற்றதாகிவிடுகிறது.
9 இரஜ்ஜூப்பொருத்தம் மணமகனின் ஆயுளின் வலிமையும் மணமகளின் மாங்கல்யபலத்தையும் நிச்சயிப்பதாகும்.பெண்களின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானாதிபதியும் களத்திரகாரகனும் குருவும் பலமாயிருந்து ஆணின் ஜாதகத்தில் இலக்கினாதிபதியும் ஆயுள் வீட்டு அதிபதியும் பலமாக இருந்துவிட்டால் இந்த ரஜ்ஜூபொருத்தம் எனபது அவசியமில்லை
10வேதைப்பொருத்தம் மணமக்களுக்கு வாழ்க்கையில் துன்பமும் துக்கமும் இல்லாமல் வாழ்வதற்குரிய யோகத்தை நிச்சயிப்பது ஆண் பெண் ஜாதங்களில் சுகஸ்தானமும் ஸ்தானாதிபதியும் இலக்கினாதிபதியும் சப்தமாதிபனும் வலுத்து இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் துக்கம் ஏற்படுமா எனவே இந்த வேதைபொருத்த்தின் பயனையும் இந்த ஜாதக்கிரக நிலைகள் அறிவித்துவிட முடியும் இப்படியிருக்க திருமணப்பொருத்தம் பார்ப்பதற்கு இந்த பத்துப்பொருத்தங்களையும் பார்க்க வேண்டும் என்ற விதிமுறை ஏன்வகுக்கப்பெற்றது. இவற்றை ஏன் பார்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் இந்தக் கேள்விக்கும் பதில்கள் உள்ளன. எந்தக் காரணமுமில்லாமல் எந்தக்காரியமும் நிகழ்வதில்லை

No comments:

Post a Comment