jaga flash news

Tuesday 16 June 2015

இராகு கேது

இராகு 
சூரியனின் வட்ட பாதையில் சந்திரன் பூமியை சுற்றி வருகிற கிரகம் சந்திரன் பூமியை சுற்றுகிற வட்ட பாதையும் பூமி சூரியனை சுற்றுகிற வட்ட பாதையும் இணையும் இடம்தான் ராகு.அப்படி பார்த்தல் சூரியன் உடைய நிழல் ராகு. சந்திரன் உடைய நிழல் கேது ஆகும்.முதலில் ராகு பத்தி பார்போம். இந்த ராகு பூமியில் உள்ள உயிர்களின் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பாக மனித உடலில் தசை,தசை நார்கள், அவற்றின் செயல்கள், உடலில் உள்ள மின் சக்தி. இந்த மின் சக்தி தூண்டுகிற நரம்பும் தசை நார்களும் தூண்டுகிற இடம் (NERO MUSCULAR JUNCTION) இவைகளை இயக்குகிற சக்தியாக ராகு இருக்கிறது.ஜனன காலத்தில் இராகுவின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பொருத்து அந்த ஜாதகரின் தசை செயல்பாட்டை கணக்கிடலாம். நல்ல இடங்களில் ராகு இருந்தால் நல்ல செயல்களுக்கும் கெட்ட இடத்தில இருந்தால் கெட்ட செயல்களுக்கும் இந்த தசை வலிவு பயன்படும் குறிப்பாக 6 ம் இடம் ராகுவிற்கு சிறந்ததாக கருதலாம்,நோய் எதிரி வேலை போன்ற வற்றிற்கு உரிய ஸ்தானமாக ஜோதிடத்தில் கொள்கிறார்கள். இந்த இடத்தில ராகு இருந்தால் நோய் நொடி எதிர்ப்பு, எதிரியை வெல்லுதல், வேலையில் சிறப்பு இருக்கும். அதேபோல் 9ம் இடம் தன வலிமையால் அனைத்து பாகியங்களையும் பெறுவார். 2 ல் இராகு நாக்கிலும் சொல்லிலும் வலிமை இருக்கும். வார்த்தைகள் கத்தி வைத்து வெட்டியது போல் இருக்கும். 2ம் இடம் வாக்கு ஸ்தானம் மட்டும் இல்ல குடும்ப ஸ்தானம் கூட குடும்பத்தில் அனுசரணையும் அரவணைப்பும் மிக முக்கியம். நேர்கோட்டு செயல் அங்கு பல எதிர் விளைவுகளை உண்டு பண்ணும் என்பதால் தான் 2 ல் இராகு இருப்பவரை இராகு வலுவாக உள்ள ஜாதகருக்குதான் பொருத்துதல் வேண்டும் திருமண பொருத்தத்தில். வலிவோடு வலிவு சேரும்போது சமம் ஆகும். என்று
இராகு வலிமை குறைவாக இருப்பவர்கள் தசையின் வலிமையை கூட் ட கூடிய மொச்சை உளுந்து பயிர் வகைகளை அதிக அளவில் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். இவற்றில் ப்ரோட்டின் அதிகம் இருக்கும் ப்ரோட்டின் தசையை வலு படுத்தும். இருந்தாலும் ஜனன நேரத்தில் இராகுவின் நிலைமயை பொறுத்து தான் அதை முடிவு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை ஒரு மனிதனுடைய அனைத்தும் பிறப்பிலேயே தீர்மானம் செய்யப்பட்டு விடுகிறது. செய்த பொருளை மாற்றவோ திருத்தி உரு மாற்றவோ முடியாத வாறுதான் ப்ரோக்ராம் செய்ய பட்டு அனுப்பி வைக்க பட்டு இருக்கிறோம். எந்த ஒரு பரிகாரமோ எந்திர தந்திர தகடுகளோ இந்த இயல்பை மாற்ற முடியாது. ஆனால் கோவில்கள், சித்தர் சமாதிகள் வேண்டுமானால் 15-20 சதவீதம் வரை தேவை படுகிற சக்தியை தூண்டும் அம்மாதிரி விசயங்களை தான் கோவில் இடத்தில பொருத்தி ஜனன பாதிப்பில் இருக்கிற மக்களை அங்கு வர வைத்து அந்த மாற்று சக்தி இணைய பெறுமாறு செய்தார்கள் அங்கு உபயோகிக்கிற பொருள்களின் வாசனையும் (smell theraphy) மந்திரங்களும் (sound therophy ) பிரசாதங்களும்(food theraphy) அங்கு தீர்மானித்து இருக்கிற சக்தியை ஒட்டியேதான் இருக்கும் அச்சக்தியை தூண்டும்.
சூரிய வட்ட பாதை, சந்திரன் பூமியை சுற்றுகிற வட்ட பாதை, இரண்டும் சூரியனுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும். படத்தை பார்த்தால் தெரியும்.உள்ளே இரு பாதையும் வெட்டு படுகிற இடம் ராகு. வெளியே வெட்ட படுகிற இடம் கேது. ராகு பலமாக இருப்பவர்கள் உடல் வலிமை மிக்கவர்கள் கேது பலமாக இருப்பவர்கள் மூளை வலிமை மிக்கவர்கள், ஒல்லியான குள்ளமான தோற்றத்தில் இருப்பவர்கள். கேது ஞானகாரணக கூறுகின்றனர் ஜோதிடத்தில். மூலையில் இருக்கிற non nervical cavities சொந்தகாரர். கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பவர் எபோழுதும் alert அகவே இருப்பர் அதுவும் லக்ன கேந்திரத்தில் கேது இருந்தால் Brain Cavities System வலுவாக இருக்கும். எப்பொழுது எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து சூழ்நிலையை தமக்கு சாதகமாக மாற்றி கொள்ள வல்லவர்.அதே போல் மூளையின் நரம்பு மண்டலம் இவர்களுக்கு விரைவாக இயங்கும் எந்த file யும் உடனே ஒலித்து வைக்கவும் வெளி கொணரவும் இந்த கேது சாப்ட்வேர் திறமை மிக்கது .
storage capacity அதிகம் இருக்கும் இவர்களிடம் பழைய புராண இதிகாச விசயங்களை அலசுவதில் வல்லவர்கள்.லக்னத்தில் குருவும் கேதும் இருந்தால் சொல்லவே வேண்டாம் ஒட்டு மொத மூளையும் high speed processor high storage ram system.
உடல் தசை வலிமை குறைவாக இருக்கிற காரணத்தினால் சிறிய விபத்துக்களில் கூட அதிகமான காயங்கள் பெறக்கூடும். கேது ஆதிக்கத்தில் இருந்தால் உடலில் வடுக்களோ,அப்ரேசனோ எலும்பு முறிவோ ஒரு நிரந்தர வடு உடலில் இருக்க கூடும்.
கேது மனம்,ஞானம், அறிவு மூன்றின் ஒவ்வொரு பங்கு கலவை. கேது ஜாதகத்தில் கெட்ட இடங்களில் இருந்தாலோ கெட்ட சேர்க்கை பெற்று இருந்தாலோ மிக மோசமான system corrupt போல செயல் இருக்கும். கெட்ட சகவாசம்,துர்சேர்க்கை கீழ் தரமான பெண் சேர்க்கை என மனமும் புத்தியும் போகும்.
ராகு,கேது சந்திக்கிற இடங்கள் சூரிய பாதியில் நேர்க்கு நேர் அதாவது 360 டிகிரியில் 180 டிகிரியில் இருக்கும் இவை பூமி சந்திரனின் நிழல் ஆதலால் இந்த கிரகங்களின் பாதைக்கு எதிர் திசையில் பயணிக்கும்.

1 comment: