மனித உடலில் நிணநீர்க்கணுக்களின் அமைவிடம
மனித உடலின் பல பகுதிகளிலும் இந்த நிணநீர்க்கணுக்கள் பரந்து காணப்படும்.
தலை, கழுத்துப் பகுதிகளில் நிணநீர்க்கணுக்கள்தொகு
- முன் கழுத்தில்: sternocleidomastoid தசைகளுக்கு மேலாகவும், கீழாகவும் அமைந்து, கழுத்துப் பகுதியில் மேற்பரப்பிலும், ஆழமாகவும் சில நிணநீர்க்கணுக்கள் காணப்படும். இவை தொண்டை, குரல்வளை, அடிநாச் சுரப்பிகள், கேடயச் சுரப்பி ஆகியவற்ரில் இருந்து நிணநீரை வடிகட்டும்.
- பின் கழுத்தில்:> sternocleidomastoid தசைகளுக்குப் பின்புறமாகவும் trapezius தசைக்கு முன்புறமாகவும் சில நிணந்ரீக்கணுக்கள் அமைந்திருக்கும். இவை பொதுவாக மேல் சுவாசப்பாதை தொற்றுக்களின்போது வீங்கிக் காணப்படும்.
- Tonsillar OR Sub-mandibular: கீழ்த்தாடை எலும்பின் சாய்வான பகுதிக்குக் கீழாக அமைந்திருக்கும். இவை உள்நாக்கு, வாயின் அடிப்பகுதிகள், தாடைப்பற்கள் போன்ற இடங்களிலிருந்து நிணநீரை வடிகட்டும்.
- நாடிக்குக் கீழ்: நாடிக்குக் கீழாக அமைந்திருக்கும் நிணநீர்க்கணுக்கள் வெட்டுப் பற்கள், கீழுதட்டின் நடுப்பகுதி, நாக்கின் நுனி போன்ற இடங்களில் இருந்து நிணைநீரை வடிகட்டும்.
- காறை எலும்புக்கு மேலாக உள்ள குழிப் பகுதியில், நெஞ்செலும்பை (sternam) சந்திக்கும் இடத்தில் பக்கவாட்டாக நிணநீர்க்கணுக்கள் காணப்படும். இவை நெஞ்சுக்குழி (thoracic cavity), வயிறு ஆகிய பகுதிகளில் இருந்து நிணநீரை வடிகட்டும்.
நெஞ்சுப் பகுதியிலுள்ள நிணநீர்க்கணுக்கள்
நுரையீரல் பகுதியில், மூச்சுக்குழாய், களம், மார்பு வயிற்றிடை மென்றகடு போன்ற இடங்களில் பல நிணநீர்க்கணுக்கள் உள்ளன.
ஏனைய நிணநீர்க்கணுக்கள்
கை, கால், வயிறு போன்ற பகுதிகளிலும் நிணநீர்க்கணுக்கள் காணப்படும்.
நிணநீர்க்கணு
நிணநீர்க்கணு | |
---|---|
இலத்தீன் | nodus lymphaticus |
நிணநீர்க்கணு (Lymph Node) என்பது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் உடல் உறுப்பு. நிணநீர்க்கணுக்கள் உடல் முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க்கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில் நடைபெறுவதற்கு இன்றியமையாதவை ஆகும். வெளியிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு வடிகட்டி போல அல்லது பொறி போல தொழிற்பட்டு, அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
நோயைக் கண்டறிவதிலும், இந்த நிணநீர்க்கணுக்கள் உதவியாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில நோய்நிலைகளில் அழற்சிக்குட்படுவதுடன், இக்கணுக்கள் பெருத்தும் காணப்படும். இந்நிலை தொண்டை அழற்சி போன்ற நோய்களில் எளிமையாகவும், புற்றுநோய் போன்ற நோய்களில் உயிருக்கே இடர் விளைவிப்பதாகவும் இருக்கும். இவ்வாறான நிலைகளில் உயிரகச்செதுக்கு மூலம் இவை ஆராயப்படும். சில நோய்களில் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட விதத்தில் நிணநீர்க்கணுக்கள் இவ்வகையான மாற்றத்தைப் பெறுவதால் நோய் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்
No comments:
Post a Comment