jaga flash news

Friday 7 June 2013

ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கும் வழக்கம் ஏன்?

ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கும் வழக்கம் ஏன்?
Temple images
பைரவருக்கும், ஆஞ்சநேயருக்கும் வடைமாலை அணிவிக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது. ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே "வடமால்யா என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது. போதாக்குறைக்கு ஆஞ்சநேயர் வானரமுகம் கொண்டவர் என்பதால், வானரத்துக்குப் பிடித்த வடைமாலை அணியும் வழக்கம் வந்துவிட்டது.
நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு. எப்படியிருப்பினும், பக்தியுடன் இதை அணிவிப்பதால் பலன் உண்டு. பைரவருக்கு வாகனம் நாய். அதற்கும் வடை பிடிக்கும் என்பதால், வடைமாலை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது.

No comments:

Post a Comment