jaga flash news

Monday 11 January 2016

சிரார்த்தம் ,விரதம்

இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும்
 சிரார்த்தம் ஏற்புடையதுதானா? விளக்கம் தேவை.
பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் 
கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் 
வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம்
 கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் 
செய்யலாம்.
* விரதநாட்களில் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று
 சொல்கிறார்களே உண்மையா?
"விரதம்' என்ற சொல்லுக்கு "கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். விரதமிருப்பவர்,
 அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். 
சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் 
பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் 
முதன்மையாகக் கூறியுள்ளனர். "உபவாசம்' என்றால் "இறைவனுக்கு அருகில் இருத்தல்' 
என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், 
வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு 
இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை 
வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment