jaga flash news

Monday 11 January 2016

சிரார்த்தம்

திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு 
இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால 
மரணமடைந்தவர்களின் வாரிசுகள் இவர்களுக்கெல்லாம் என்ன தான் வழி?

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் ஸ்ரீ 
லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள்,
 திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த 
பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் 
வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி 
கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள்.

இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி
 நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1
 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து 
செய்கிறாராம். திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 11 மணிக்குள் 
பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும்.

மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் 
ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் 
செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும்
 பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் 
முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க 
வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் 
சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் 
நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல 
வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் 
செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் 
ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.

கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. 
பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்.

நம் தளம் சார்பாக இந்த கோவிலுக்கு (ஆலய தரிசனம்) செல்ல ஏற்பாடுகள் 
நடைபெற்றுவருகிறது. வருபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனம் ஏற்பாடு 
செய்யப்படும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்கள் 
அனைவரும் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நம்முடன் 
வந்திருந்து அவரவர் தத்தங்கள் முன்னோர்களுக்கும் காலம் சென்ற 
பெற்றோருகளுக்கும் 

சிரார்த்தம் செய்யலாம்

1 comment:

  1. Sir, can you please tell me when this should be done. Amavaasai only or any other day.

    ReplyDelete