jaga flash news

Thursday 14 January 2016

வெற்றிலைக் கொடி அனுமன்

அசோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு வணங்கி தான் ராமனின் தூதன் என்று எடுத்துரைத்தார். சீதையை நம்ப வைக்க அண்ணலின் கணையாழியைக் காட்டினார்.பெரிதும் மனம் மகிழ்ந்த சீதை மாருதிக்கு ஆசீர்வாதம் செய்ய நினைத்தார் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும்போது அட்சதை அல்லது மலர்களைத்தூவி வாழ்த்துவது வழக்கம். ஆனால் அசோக வனத்தில் அவை ஒன்றுமே இல்லை. அதனால் சீதா பிராட்டியார் பக்கத்தில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளைக் கிள்ளி “ இந்த இலையினால் நான் உன்னை ஆசீர்வாதம் செய்கிறேன் நீ என்றென்றும் சிரஞ்சீவியாக இருப்பாயாக இந்த இலை உனக்கு வெற்றியைத் தரும் அதனால் இன்று முதல் இதன் பெயர் வெற்றிலை அதாவது வெற்றிலை என்று மக்களால் அழைக்கப்படும்” என்று கூறி வாழ்த்தினார். அதனால் வெற்றிலை மாலை அணிவித்தால் அனுமன் மகிழ்ந்து நாம் கேட்டவற்றை நிறைவேற்றி வைப்பார் காரியத்தில் நமக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்ற ஐதிகம் நிலவுகிறது.

1 comment: