jaga flash news

Saturday 30 January 2016

“கொடுமை” செய்பவனுக்கு இறையருள் கிடையாது

“கொடுமை” செய்பவனுக்கு இறையருள் கிடையாது
அறியாமை உள்ள மனிதன்தான், நல்ல்ல்லா... ஆடு, கோழி போன்ற “வலியுள்ள” உயிரினத்தை கொன்று

உணவாக உட்கொண்டு, எதாவது கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்துவிட்டால், கடவுள் அருள்

பெற்றுவிடலாம் என்று கற்பனை செய்வார்கள்.
இன்னும் சில பேர் நாற்பது நாள் மட்டும் சைவம் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள், ஏனென்றால் அந்த

கடவுள் அப்படி இருந்தால்தான் அருள் செய்யுமாம். நாற்பதுநாள் மட்டும்- தானும் தன் குடும்பமும்

நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்தான் இதை செய்யவேண்டும்.
இதுபோன்ற அறியாமைக்கு காரணம் நாம் முன்பு பல பிறவிகளில் செய்த பாவமே..! சைவத்திற்கு ஒரு

கடவுள், அசைவத்திற்கு ஒரு கடவுள் என்றெல்லாம் கிடையாது. அப்படி நீங்கள் இருந்தால் உங்களுக்கு

“கடவுள்” என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை என்றுதான் பொருள்.
“மரணத்தை வென்று” கடவுள் என்று பெயரெடுத்த ஆசான் திருவள்ளுவர், இதையே தனது “புலால்

மறுத்தல்” என்ற அதிகாரத்தில் சொல்லியது-
தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எனில்


எங்ஙனம் ஆளும் அருள்?
உலகத்தையும், அதில் உயிரினத்தையும் படைத்த அந்த ஆதி சக்தி, நாம் உணவு உட்கொண்டு,

அதன்மூலமாக “சத்து- அசத்து” பிரித்து வாழவேண்டும் என்ற ஒரு இயக்கம் வைத்துள்ளது.

அது(இயற்கை அன்னை) நேராக வந்து நமக்கு உணவளிக்க முடியாது என்பதால், உண்பதற்காக

வலியற்ற தாவரங்களைப் படைத்துள்ளது.
அப்படி “அசைவம்” சாப்பிட்டுக்கொண்டே நாங்கள் நல்லபடியாகத்தான் இருக்கின்றோம் என்ற நினைப்பு

இருந்தால் அதுவும் உங்கள் அறியாமைதான். அது முன் செய்த ஏதோ ஒரு வகையான புண்ணியம்

மிச்சம் இருந்து நம்மை காக்கிறது என்று பொருள். அது தீர்ந்ததும் வாழ்கை “பிடித்தது சனியன்”

என்றாகிவிடும்.
“ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி”

1 comment:

  1. அந்த காலத்தில், மாமிசம் சாப்பிடுகிறவர்கள், வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி, மற்றும் திருமண வீடு, குரங்கணி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் போது போன்ற வைபவங்களில் மட்டும், மாமிசம் சேர்த்துக் கொள்வார்கள். மற்ற நேரங்களில், அவரவர் வீடுகளிலே விளைவிக்கும் காய்கனிகள் தான் உணவாக எடுத்துக் கொண்டார்கள். இப்போ காலம் கலிகாலம். தினசரி அசைவச் சாப்பாடு எடுத்துக் கொள்கி
    றார்கள். ஆகவே, அவர்கள் குணங்களும் அதற்குத் தகுந்தாற்போல்
    மாற்றமடைகிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

    ReplyDelete