jaga flash news

Saturday, 23 January 2016

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன ???

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன ???
அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு
60 வயது ஆகும் போது நடத்தப்படுவது.
60 வயசுக்கு என்ன விஷேசம்?
சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள்
ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து
பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு
இருக்கும்.
நம்மள போல வேலை செய்பவர்களும்
ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம்.
அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம்
கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது
என்பதைக் காட்டுகிறது...
கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட
நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து
அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள்
சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ
வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..
20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து
கொள்ளும் வாழ்க்கை
20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற
வாழ்க்கை
40-60 வரை பொறுப்பான குடும்பத்
தலைவனின் வாழ்க்கை
60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான
வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை
அனுபவிக்கலாம். 60 க்கு மேலான
வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு
நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.
அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம்
என்ன சொல்லுது?
மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம்,
ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ
குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய
பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக்
கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து
தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59,
60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம்
ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு,
100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய
காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி
சடங்குகளை செய்து கொள்ள வேண்டும்
என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.
இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன
வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி...
குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல
ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக்
கொள்ளுதல் இதில் முக்கியம்..
பெயரிடப்பட்ட தமிழ் ஆண்டுகள் அறுபது.
பிரபவ, விபவ என்று
சாஸ்திரங்களின் படி மனிதனுக்கு என்று
வழங்கப்பட்ட நிறைந்த ஆயுள் என்பது 120.
கிருஷ்ணர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது
புராணங்கள்.
பகல் இரவு என்பது போல 60 ஆண்டுகள்
முதல் சுற்று முடிந்து இரண்டாம் அறுபது
ஆண்டுகள் ஆரம்பமாகிறது.
முதல் அறுபது ஆண்டுகளில் லௌகீக(கர்ம)
வாழ்க்கை வாழ்கிறோம். இரண்டாம் அறுபது
ஆண்டுகள் கடமைகள் முடித்து தர்ம
வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
அறுபதாம் கல்யாணம் செய்வதால்
1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை
வாழ்ந்ததை அறிவிக்கிறோம்.
2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த
பாவங்களுக்கு வருந்தி, பரிகாரம் என்ற பெயரில்
மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம்
3. இனி தர்ம வழியிலான பொதுவான
வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
உறுதிகொண்டு இவ்வளவு காலம் கூட வந்த
மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு
காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற
வாழ்வை தருகிறோம்.
இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய
தவறு இல்லை, நாம் செய்த பாவங்களை
எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா
விட்டாலும்
ஆனால் உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய
மனைவியின் தியாகங்களை எண்ணிப்
பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம்
செய்யலாம்.
புரிந்து கொண்டாடினால் எவ்வளவு
சந்தோஷம்.
80 வருஷம் அப்படீன்னு சொல்ல ஒரு
விஷேசம் இருக்கு தெரியுமா?
ஒரு வருஷத்துக்கு 365.25 நாட்கள்.
அப்படின்னா 80 வருஷங்களுக்கு
29220 நாட்கள். இதை 29 ஆல வகுப்போம்.
1007.58
இன்னாடா தாமரை கணக்கு பண்ணுறாரே
அப்படின்னு யோசிக்காதீங்க..
80 வயசில் 1008 பௌர்ணமி பார்த்திருப்போம்
அப்படீங்கறதை தான் இந்த சின்னக் கணக்கு
சொல்லுது..
இது ஒரு முக்கியமான மேட்டர் இல்லியா?
அப்பால அண்ணாத்தே இன்னா சொன்னாரு
பகல் - இரவு கணக்கு...
எப்படி 20, 40, 60 அப்புடிக்கா வாழ்வில்
எப்படி பொறுப்பு மாறுதோ
அதாவது
0 வயசில பொறந்தோம்
20 வயசுல கண்ணாலம்...
40 வயசுல குழந்தைக்கு கண்ணாலம் பண்ணி
வச்சோம்
இது பகல்
60 வயசில முதுமை வாழ்க்கை ஆரம்பம்
அப்படி 60-80 ல முதியவரா வாழ
கத்துக்கறோம்..
80 - 100 முதியவர்களா வாழறோம்
100-120 முதியவர்களுக்கும்
வழிகாட்டுகிறோம்.
இப்டீக்கா
எப்படி காலை மதியம் மாலை அப்படின்னு
பகலில் மூணு இருக்கோ அதே மாதிரி
முன்னிரவு நள்ளிரவு பின்னிரவுன்னு மூணு
இருக்கோ அப்படி
20, 20 வருஷமா வாழ்க்கையை பிச்சி
பிசைஞ்சு வாழச் சொல்லி அண்ணாத்தேங்க
சொல்லிக் கொடுத்திருக்காங்கோ..
அதான் நூறு வயசு வாழ்ந்திட்டா
கனகாபிஷேகம் செஞ்சு முழுமை அடைந்த
ஆத்மா அப்டீன்னு கொண்டாடறோம்.
நம்மகிட்ட தான் இந்த பிளானும் கிடையாது
ஒரு மண்ணும் கிடையாது
என்ன பிரச்சனை என்றால் இதையெல்லாம்
விளக்கம் சொல்லாம நம்ம பெரியவர்கள்
சொல்லிக் கொடுத்து வருவதுதான்.
சாத்திரங்கள் மறந்து சடங்குகள் மட்டும்
வாழ்வதால் சாதிகளும் சடங்களும் மட்டுமே
நடந்து கொண்டிருக்கின்றன.
இப்ப ஆரம்பத்திலிருந்து வர்ரேன்..
(மறுபடியும் ஆரம்பமா என அழாதீங்க)
1 நிமிடத்திற்கு அறுபது வினாடிகள்.
1 நாளுக்கு அறுபது நாழிகைகள்
மொத்தம் 60 ஆண்டுகள் என அறுபது காலக்
கணக்கில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று.
ஒரு நாளை 12 ஆகப் பிரிப்போம்..
2 மணி நேரம் ஒரு இலக்கினம் அதாவது ஒரு
இராசிமண்டலம் அதாவது வானப்பகுதியின் 30
பாகைகள்.
இரண்டு இலக்கினங்கள் சேர்ந்தால் ஒரு
பொழுது.
அதாவது ஒரு பொழுதுக்கு 4 மணி நேரம்..
பகலில் மூன்று பொழுது, இரவில் மூன்று
பொழுது ஆக ஆறு பொழுதுகள்
காலை, மதியம், மாலை, முன்னிரவு நள்ளிரவு
பின்னிரவு என ஆறு பொழுதுகள்..
பகல் இரவு என இரண்டு வகை.
சரி ஒரு வருடத்தை எடுத்துக் கொள்வோம்
அதிலும் 12 மாதங்கள் (12 லக்கினங்கள்)
ஆறு பொழுதுகள் போல ஆறு பருவங்கள்
கார்காலம், குளிர்காலம், வசந்தகாலம்,
இளவேனில், முதிர்வேனில், இலையுதிர்காலம்
இரண்டு அயனங்கள், இரவு பகல்
போல..உத்தராயணம், தட்சிணாயினம்..
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி
இவை உத்தராயணம்
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,
மார்கழி இவை தஷிணாயனம்
இளவேனில் = சித்திரை, வைகாசி
முதுவேனில் = ஆனி, ஆடி
கார் = ஆவணி, புரட்டாசி
கூதிர் = ஐப்பசி, கார்த்திகை
முன்பனி = மார்கழி, தை
பின்பனி = மாசி, பங்குனி
நன்கு கவனியுங்கள் பின்பனிக் காலத்தில்
ஆரம்பிக்கிறது உத்தராயணம். நமது
விடியலும் அப்படித்தான் குளிராகவே
இருக்கிறது...
அதன் பின் வருவது கோடை,, அதாவது
மதியம்...இள்வேனில் எனலாம்
அதன் பின்வருவது முதுவேனில் அதாவது
மாலை.. முதுவேனிலின் இறுதியில் மழை
பெய்யும். அதே போல் பகல் முழுதும்
வெயிலடித்து மழை மாலையின் இறுதியில்
வரும்..
இதன்பின் தஷிணாயனம் ஆரம்பமாகிறது.
அதாவது இரவு ஆரம்பமாகிறது..
முன்னிரவு என்பது மழைக்காலத்திற்க
ு சரியாகிறது
நள்ளிரவு என்பது முன்பனிக் காலமாகவும்
விடியல் என்பது பின்பனிக் காலமாகவும்
இருக்கிறது.
அதாவது ஒரு நாளைப் பிரித்த விதத்திலும்
ஒரு ஆண்டைப் பிரித்த விதத்திலும் ஒற்றுமை
இருக்கிறது..
அதுக்கு இந்தப் படத்தைப் பாருங்க...
மனிதன் பிறக்கும் பொழுது அவனுக்கு மிகுந்த
பாதுகாப்பு தேவைப்படுகிறது. போர்வைக்குள்
பதுங்கும் விடியற்காலம் போல.
முதல் 2 மணிநேரம் போல அதாவது தை மாதக்
குளிருக்கு போர்த்துதல் போல முதல் 10
வருடங்கள் குழந்தையாக பொத்திப் பொத்தி
வளர்க்கப்படுகிறான். காலை 6 லிருந்து 8
அடுத்த இரண்டு மணிநேரம் போல அதாவது
காலையில் பணிகள் ஆரம்பம் செய்வதைப்
போல, அடுத்த 10 வருடம் மாசி மாதம்
வசந்தத்தை அனுபவிக்கிறான். மலர்கிறான்..8
லிருந்து 10 வயது 20 வரை
அடுத்து பங்குனி வெயில் ஆரம்பிக்கும் காலம்.
அதாவது 10 மணி முதல் 12 மணிவரை...
இந்தப் பத்துவருடங்கள் கல்யாணம் ஆகி சூடு
ஏற ஆரம்பித்து விட்டது. 20 லிருந்து 30 வரை
அடுத்து சித்திரை மாதம், அதாவது 12 மணி
முதல் 2 மணி வரை அதாவது 30 லிருந்து 40
வயது வரை.. கடுமையாக உழைக்க வேண்டிய
காலம். வெயில் ஏறுவதைப் போல
பொறுப்புகளும் கூடி வியர்த்து விடுகிறது..
கத்திரி வெய்யில் மண்டையைப் பிளக்கும்
காலம்.
அடுத்து வைகாசி கத்திரி வெய்யில் உக்கிரம்
தாண்டி மழை ஆரம்பிக்கும் காலம். அதாவது
மகன் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிக்கும்
காலம்... 40 லிருந்து 50 வரை அதாவது 2
லிருந்து 4 மணி வரை.. வெயில் குறைய
ஆரம்பிக்கிறது..
அடுத்து ஆனி மாதம்.. மழைக்காலம் 4
லிருந்து 6 மணிவரை நமக்கு. நமது மகன்
சம்பாதிக்கிறான். பணம் மழையாய்
கொட்டுகிறது...வயது 50லிருந்து 60 வரை..
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம்
இது முடிந்து இரவு ஆரம்பமாகிறது.
தட்சிணாயனம் ஆரம்பமாகிறது.. அதாவது
நமது இரண்டாம் அறுபது வருட சுழற்சி
ஆரம்பம்..
60 லிருந்து 70 வரை ஆடிமாதம் போல..
ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அது
மாதிரி நல்லவைகளை மனதில் விதைத்துக்
கொள்ள வேண்டிய காலம். இரவு என்பது நான்
உறங்க வேண்டிய நேரம். அதாவது இவ்வளவு
காலம் இருந்த நான் என்ற அகந்தை உறங்க
வேண்டிய காலம்.
70 லிருந்து 80 வரை ஆவணி மாதம் போல..
ஆடியும் ஆவணியும் தென்மேற்கு
பருவக்காற்று காலம், விதைத்து
பயிர்வளர்ப்பது போல ஆன்மீகம் நம்மில்
விதைக்கப்பட்டு வளரவேண்டிய காலம்.
மாலை 6 லிருந்து 10 வரை தூங்கத் தயாராகி
விடுகிறோம் அல்லவா
80ல் இருந்து தொண்ணூறு வரை,
தொண்ணூறிலிருந்து 100 வரை இவை
இரண்டும் அடை மழைக்காலம். நள்ளிரவு 10
லிருந்து 12, 12 ல் இருந்து 2 வரையிலான
காலம். அகந்தை அழிந்து நம்மை மறந்து அடை
மழையாய் உலகிற்கும் அன்பும் நல்வழியும்
அளவான அறிவுரைகளாய் தரும் காலம்.
100 லிருந்து 110, 110 ல் இருந்து 120
இரண்டும் விடியற்காலம். கார்த்திகையும்
மார்கழியும் இறைவனின் மாதங்களாக
கருதப்படுகின்றன்..
மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன்.
விடியற்காலம் 4-6 ப்ரம்ம முகூர்த்தம்
எனப்படுகிறது. இது ஞான ஒளி பிரகாசிக்க
பரம ஞானம் பெறும் காலமாகும்
அதாவது நாள், வருடம், மனித ஆயுள்
மூன்றிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது
நமக்கு இன்றுதான் புரிகிறது..
ஒரு முழு நாள், ஒரு முழு வருடம் ஒரு முழு
வாழ்க்கை என்ன என்பதும் விளங்குகிறது..
இத்தனையும் இங்கேதான் இருந்தது நமக்குத்
தெரியாமல்..
ஆறு காலங்கள், ஆறு பருவங்கள், ஆறு
வாழ்க்கைப் பகுதிகள் அப்படின்னு பார்த்த நாம
ஆறோட இன்னும் பல பரிமாணங்கள் நம்
வாழ்க்கையில் கலந்து ஆறு (வழி )
காட்டுவதைப் பார்க்கலாம்.
எத்தனை நீரென்றாலும் ஆற்று நீர்தான் நல்ல
நீர்
எத்தனை தெய்வமென்றாலும் ஆறுமுகன் தான்
தமிழ் தெய்வம்
அவனுக்கு படை வீடுகளும் ஆறு
ஆறு அறிவுகளும் படைத்தவன் தானே
மனிதன்.
ஆறின்றி ஆருண்டு?
தேன் கூட்டின் அறுகோண வடிவம் வேற
கண்முன் வந்து கண்ணா மூச்சி ஆடுது.
உயிருக்கு ஆதாரமான கரிமத்தின்
அடிப்படையும் ஆறு புரோட்டான்கள்
எலெக்ட்ரான்கள் கொண்ட அமைப்புதான்.
உலக எரிபொருளின் அடைப்படை மூலக்கூறு
பென்சீனின் அடிப்படையும் ஆறு..
அட்ட போங்கப்பா.. ஆறு ஆறுன்னு யோசிக்க
யோசிக்க ஆறாம சூடா எண்ணங்கள்
வந்துகிட்டே இருக்கே...
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
அப்படின்னு இப்ப பாடறப்ப, புதுச் சந்தோசம்
கிடைக்கிறதே..
அதனால ஆறு என்பதின் அடிப்படைய பலமா
ஆராய வேண்டியதிருக்கு,
முதலில் சொன்னதை கொஞ்சம் அங்க இங்க
தட்டி ஒடுக்கெடுத்து டிங்கரிங் செய்து
மீண்டும் தெளிவா
ஒரு நாளின் காலம், ஒரு ஆண்டின் பருவம், ஒரு
மனிதனின் பருவங்கள் எனப் பிரிச்சு
மேய்கிறேன்
ஒரு நாள் - ஒரு வருடம் – ஒரு வாழ்க்கை!
காலம் காட்டும் இவை மூன்றும்
ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. எப்படிப்
பேரண்டம் ஒழுங்கற்றது போலத்
தோன்றினாலும் ஆழ்ந்து ஆராய்ந்தால் எப்படி
ஒரு ஒழுங்கு நியதி அமைந்திருக்கிறத
ோ அப்படி இந்தக் கால அமைப்பிலும் ஒரு
ஒழுங்கு அமைப்பு உள்ளது.
ஒரு நாளை இரண்டிரண்டு மணி நேரமாக 12
ஆக பிரிக்கலாம்.
ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரிக்கலாம்
ஒரு வாழ்க்கையை 10 ஆண்டுகள் கொண்ட 12
பகுதிகளாகப் பிரிக்கலாம்
ஒரு நாளில் இரவு – பகல் என இரண்டு
பகுதிகள்
ஒரு ஆண்டில் உத்தராயணம் தட்சிணாயனம்
என இரு பகுதிகள்
ஒரு வாழ்க்கையில் கர்ம வாழ்க்கை – தர்ம
வாழ்க்கை என இரு பகுதிகள்
ஒரு நாளில் காலை நண்பகல் மாலை
முன்னிரவு நள்ளிரவு பின்னிரவு என 6
பிரிவுகள்
ஒரு வருடத்தில் பின்பனி, வசந்தம்(இளவேனில
்), கோடை (முதுவேனில்), கார்(மழை), கூதிர்
(பின் மழைக் காலம்), முன்பனி என ஆறு
பருவங்கள்
ஒரு வாழ்க்கையில் குழந்தை, இளமை,
நடுத்தரமனிதன், முழுமனிதன், பெரியவர்,
தெய்வீகம் என ஆறு பருவங்கள்
இவ்வளவு மட்டும் தானா? இன்னும்
நுணுக்கமான ஒற்றுமைகள் உண்டு.
முதல் காலகட்டம் – காலை – குளிர்காலம் –
குழந்தைப் பருவம்
நாள் பிரிவு : காலை 6:00 மணி முதல் 8:00
மணி வரை . விழித்து உடல்சுத்தி செய்து நம்
உடல்பேண வேண்டிய காலம்
வருடப் பிரிவு : தை மாதம் – பின்பனி –
குளிருக்கு வாடைக்காற்றுக்கு நம் உடலை
பேணிக்காக்கும் காலம் அறுவடை முடிந்து
நமைக் காக்க களஞ்சியங்கள் நிறைந்துள்ள
காலம்,
வாழ்க்கைப் பிரிவு : 0- 10 வயது வரை.
நம்மை பெற்றோரும் மற்றோரும் பேணும்
காலம். குழந்தைப் பருவம்
இரண்டாம் காலகட்டம் – முன்பகல் – வசந்தம்
– இளமைப் பருவம்
நாள் பிரிவு : 8:10 மணிவரை உணவுண்டு நம்
தொழிலுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு
போய் தொழில் ஆரம்பிக்கும் காலம்,
வருடப் பிரிவு : மாசி மாதம் – வசந்தத்தின்
ஆரம்பம். வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க..
உலகே பசிமையாய் மாறும்
வாழ்க்கைப் பிரிவு : 10-20 வயது வரை..
கல்வி கேள்விகளில் தேர்ந்து தொழில் கற்று
வளரும் காலம்.
மூன்றாம் காலகட்டம் – முற்பகல் – வசந்தம் –
இளமைப் பருவம்
நாள் பிரிவு : காலை 10:00 மணி முதல் 12:00
மணி வரை . உழைக்கும் காலம்.
வருடப் பிரிவு : பங்குனி மாதம் – வசந்தம் –
வரப்போகும் கோடைக்கும் மாரிக்காலத்திற்கும்
தயாராகும் காலம்,
வாழ்க்கைப் பிரிவு : 20- 30 வயது
வரை.இளமைப் பருவம். திருமணம், மக்கட்
பேறு என வசந்தங்கள் வாழ்க்கையில்
நான்காம் காலகட்டம் – நண்பகல் – கோடை –
நடுத்தரப் பருவம்
நாள் பிரிவு : 12:00 2:00 மணிவரை மதிய
உணவுண்டு மறுபடி முழு உழைப்பு
செய்யும் காலம் (மதிய தூக்க நேரமல்ல)
வருடப் பிரிவு : சித்திரை மாதம் – கோடை.
வெயில் அதிகரித்து சூரியன் உச்சியைச்
சுட்டெரிக்கும் காலம்.
வாழ்க்கைப் பிரிவு : 30-40 வயது வரை..
நடுத்தர வயது. உழைப்பி குடும்ப மேன்மை
என கடமைகள் சுட்டெரிக்கும் காலம்
ஐந்தாம் காலகட்டம் – நண்பகல் – கோடை –
நடுத்தரப் பருவம்
நாள் பிரிவு : 2:00 4:00 மணிவரை முழு
உழைப்பு செய்யும் காலம் (மதிய தூக்க
நேரமல்ல)
வருடப் பிரிவு : வைகாசி மாதம் – கோடை.
வெயில் அதிகரித்து சூரியன் உச்சியைச்
சுட்டெரிக்கும் காலம். இதன் இறுதியில்
தென்மேற்கு பருவ மலை ஆரம்பம்.
வாழ்க்கைப் பிரிவு : 40-50 வயது வரை..
நடுத்தர வயது. உழைப்பி குடும்ப மேன்மை
என கடமைகள் சுட்டெரிக்கும் காலம். இதன்
இருதியில்குழந்தைகள் வளர்ந்து உதவ தயார்
ஆறாம் காலகட்டம் – பிற்பகல் – மழை – முழு
மனிதன்
நாள் பிரிவு : 4:00 6:00 மணிவரை
வேலைகளை, கடமைகளை முடித்து
இரவிற்குத் தயாராகும் காலம்.
வருடப் பிரிவு : ஆனி மாதம் – தென் மேற்கு
பருவ மழை. .
வாழ்க்கைப் பிரிவு : 50-60 வயது வரை..முழு
மனிதன். வாரிசுகள் மணம் முடித்து தொழில்
ஆரம்பிக்கும் காலம்.
ஏழாம் காலகட்டம் – மாலை –மழை – முழு
மனிதன்
நாள் பிரிவு : 6:00 8:00 அமைதியான
உறக்கத்திர்கு தயாராகும் காலம்.. நல்ல
விஷயங்களை சிந்திக்க கேட்க வேண்டிய
காலம்,
வருடப் பிரிவு : ஆடி மாதம் – மழைக் காலம்.
விதைப்பு நடக்கும் காலம். அதிகரித்து
சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம்.
வாழ்க்கைப் பிரிவு : 60-70 வயது வரை.. முழு
மனிதன். மகன் பொறுப்பேற்றாயிற்று. நல்
கருத்துக்களை சிந்தித்து தது குடும்பத்தில்
விதைக்க வேண்டிய காலம்.
எட்டாம் காலகட்டம் – முன்னிரவு – பின் மழை
– பெரியவர்
நாள் பிரிவு : 8:00 10:00 அமைதியாக உறங்க
வேண்டிய காலம்.
வருடப் பிரிவு : ஆவணி மாதம் – பின்மழைக்
காலம். அதாவது அடை மழைக் காலம். பயிர்
வளரும். சேதமில்லாமல் பாதுகாக்க வேண்டிய
காலம்.
வாழ்க்கைப் பிரிவு : 70-80 வயது வரை..
குடும்பம் மற்றும் சுய அமைதி நாடும் காலம்,
குடும்பம் வளர்வதைக் கண்டு மகிழும் காலம்
ஒன்பதாம் காலகட்டம் – இரவு – பின்மழை –
மூத்தவர்
நாள் பிரிவு : 10:00 12:00 மணிவரை உறங்கும்
நேரம்
வருடப் பிரிவு :புரட்டாசி மாதம் –தென்மேற்கு
பருவமழையின் இறுதிக் காலம்
வாழ்க்கைப் பிரிவு : 80-90 வயது வரை..
முதியவர். தான் என்ற அகங்காரம் இன்றி
அமைதியான வாழ்க்கை.
பத்தாம் காலகட்டம் – நள்ளிரவு – கூதல்
காலம் –மூத்தவர்
நாள் பிரிவு : 12:00 2:00 மணிவரை ஆழ்ந்த
உறக்ககாலம்.
வருடப் பிரிவு : ஐப்பசி மாதம் – வட மேற்கு
பருவ மழை. . குளிர்காற்று அடிக்கும்
வாழ்க்கைப் பிரிவு : 90-100 வயது
வரை..பெரியவர். அமைதியான உறக்கம்
போன்ற வாழ்க்கை. .
பதினோராம் காலகட்டம் – அதிகாலை –கூதல்
காலம் – முன்னோர்
நாள் பிரிவு : 2:00 4:00 உறக்கத்தின் இறுதிக்
காலம்.
வருடப் பிரிவு : கார்த்திகை மாதம் – மழை
குறைந்து குளிர் வளரும் காலம்.. முகில்களற்ற
வானம். தீப காலம்
வாழ்க்கைப் பிரிவு : 100-110 வயது வரை..
தீபம் போல ஞானம் தோன்றும் காலம்
பனிரெண்டாம் காலகட்டம் – விடியற்காலை –
குளிர் – முன்னோர்
நாள் பிரிவு : 4:00 6:00 உறக்கம் விழிக்கும்
காலம். பிரம்ம முகூர்த்தம். தெளிவான மாசற்ற
காற்று கிடைக்கும் காலம்.
வருடப் பிரிவு : மார்கழி மாதம் – குளிர் காலம்.
இறைவனின் மாதமாக அறியப்படுவது
வாழ்க்கைப் பிரிவு : 110-120 வயது வரை..
குடும்பம் மற்றும் சுய அமைதி நாடும் காலம்,
தெய்வமாய் வாழும் காலம். குழந்தை போன்ற
பாதுகாப்பும் தேவை
குழந்தைக்கு உபநயனம் - வசந்த விழா (நம்ம
ஹோலி, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம்)
திருமணம் - கோடை விழா (சித்திரைத்
திருவிழா)
குழந்தைகளின் திருமணம் - ஆடிப் பெருக்கு.
அறுபதாண்டு நிறைவு - முன்னோர் வழிபாடு
(மஹாளய அமாவாசை)
எண்பதாண்டு நிறைவு - தீபத்திருவிழா
(தீபாவளி, கார்த்திகை தீபம்)
நூறாண்டு நிறைவு - அறுவடைத் திருவிழா
(பொங்கல்)
காலமும் பருவமும் பின்னிப் பிணைய
திருவிழாக்களும் சேர்ந்திருப்பது எவ்வளவு
ஆழமான தத்துவம்.
அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு
60 வயது ஆகும் போது நடத்தப்படுவது.
சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள்
ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து
பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு
இருக்கும்.
நம்முடைய தமிழ் ஆண்டுகள்
அறுபதாகும்.ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி
முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது
ஆண்டுகள் பிடிக்கின்றது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த
நட்சத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ
அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது
ஆண்டுகளுக்கு பின்னும். இந்த அறுபதாம்
ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும்
சேர்த்து ஒருபெரும் விழாவாக அவர்கள் பெற்ற
குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய்
இருந்து வருகிறது.
இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும்
அல்லது அறுபதாம் கல்யாணம் என்பார்கள்.தன்
துணையுடான அறுபதாம் கல்யாணம்
பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது அதற்கு
தெய்வ அருள் நிச்சயம் வேண்டும்.
அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம்
கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது
என்பதைக் காட்டுகிறது...
கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட
நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து
அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள்
சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ
வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..
20 வயது வரை நம்மை தயார் செய்து
கொள்ளும் வாழ்க்கை
20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற
வாழ்க்கை
40-60 வரை பொறுப்பான குடும்பத்
தலைவனின் வாழ்க்கை
60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான
வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை
அனுபவிக்கலாம்.
60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான
ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட
வரங்கள்.
அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம்
என்ன சொல்கிறது?
மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம்,
ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ
குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய
பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக்
கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து
தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59,
60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம்
ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு,
100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய
காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி
சடங்குகளை செய்து கொள்ள வேண்டும்
என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.
இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன
வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி...
குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல
ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக்
கொள்ளுதல் இதில் முக்கியம்..
உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன்
இன்ப,துன்பங்களை ஏற்று அனுபவிக்க
வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான்.அவன
ுடைய அறுபதாவது வாழ்வில் மீண்டும் ஒரு
புதுப்பிறவி எடுக்கிறான்.
அதாவது இளமையில் திருமணம் செய்து
குடும்பத்தை கவனித்து,பிள்ளகளை ஆளாக்கி
வளர்த்து,நல்ல வாழ்வை அமைத்துகொடுத்து
இல்லற கடமையை முடிக்கிறான்.
இதற்கு பின் பிள்ளை மற்றும் உறவுகளையும்,
வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக
விடுவித்து, கடவுளை முழுமையாகச்
சரணடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த
நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
அறுபதிலும் எண்பதிலும் என்ன விசேஷங்க?
அசிந்தயா வ்யக்தரூபாய நிர்குணாய
குணாத்மனே |
ஸமஸ்த ஜகதாரமூர்தயே ப்ரம்ஹணே நம: ||
கர்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸாரஸாரம்
புஜகேந்த்ர ஹாரம் |
ஸதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே பவம்
பவானீஸஹிதம் நமாமி ||
யத்ரைவ யத்ரைவ மனோ மதீயம் தத்ரைவ
தத்ரைவ தவ ஸ்வரூபம் |
யத்ரைவ யத்ரைவ ஸிரோ மதீயயம் தத்ரைவ
தத்ரைவ பதத்யம்தே ||
ஸாக்ஷாத் ஸர்வேச்வரனான பரப்ரம்ஹத்தின்
லீலையினால் தோன்றிய ஜகத் ஸ்ருஷ்டியில்
எண்ணற்ற ஜீவராசிகள் இப்பூமண்டலத்தில்
வாழ்ந்து வருகின்றன. இவற்றுள்
கிடைத்தற்கரிய விவேகமுள்ள மனிதப்
பிறவியில்தான் வேத, சாஸ்த்ரங்களில் சரியாக
விதிக்கப்பட்ட தர்மங்களையும்
கர்மாக்களையும் அனுஷ்டிக்க முடியும்.
விவேகம் என்னும் பகுத்தறிவின் மூலம்
மனிதன் தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாகச்
செய்து கொள்ள வேண்டும். ச்ருதி, ஸ்ம்ருதிகள்
கூறும் ஸ¨க்ஷ்மமான (நுட்பமான)
தர்மங்களையும் தத்வங்களையும் கதைகள்
மூலம் எளிதாக்கித் தருகின்றன இதிகாச,
புராண காவியங்கள்.
உபநயனம் ஆகிய ப்ரம்ஹசாரிக்கு சில
நியமங்கள், தர்மங்கள்; விவாஹம் ஆகிய
க்ருஹஸ்தனுக்கு பற்பல தர்மங்கள், கர்மாக்கள்;
மேலும் அநேக புண்ய காலங்களில் செய்ய
வேண்டிய தர்மங்கள்; ஆகியன காலத்தைக்
குறிப்பிட்டே தர்மங்கள் விதிக்கப்
பட்டிருப்பதால் இத்தகைய தர்மங்களை
அனுஷ்டிக்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்
வேண்டும். மனிதனுக்கு ஆயுள் (வயது) 100
ஆண்டுகள் என வேதம் வாழ்த்துகிறது.
“சதாயுர்வை புருஷ: |
சத ஸம்வத்ஸரம் தீர்கமாயு: |”
ஜோதிஷ சாஸ்த்ரமோ மனிதனின் பூர்ணாயுள்
120 வருஷங்கள் எனக் கணக்கிட்டுள்ளது.
நவக்ரஹ நாயகர்கள் பின்வரும் காலக்ரமப்படி
மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கின்றனர்.
கேது=7, சுக்கிரன்=20, சூரியன்=6,
சந்திரன்=10, செவ்வாய்=7, ராகு=18, குரு=16,
சனி=19, புதன்=17 ஆக மொத்தம் 120
வருஷங்கள்.
சாந்திகள் ஏன்?
ஒரு குழந்தைக்கு பிறந்தது முதல் 4வருஷம்
மாதாவின் பாபத்தாலும் அடுத்த 4வருஷம்
பிதாவின் பாபத்தாலும் பின் 4வருஷம் தன்
பாபத்தாலும் அரிஷ்டம் ஏற்படுகிறது. பிறந்தது
முதல் 8 வயது வரை பாலாரிஷ்டம். பிறகு 20
வயது வரை யோகாரிஷ்டம். இவ்வாறு பல
அரிஷ்டங்கள் ஜோதிஷ சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment