jaga flash news

Tuesday, 19 January 2016

பீஷ்ம ஏகாதசி

பீஷ்ம ஏகாதசி ! "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்" பிறந்த நாள் ! ( 20-ஜனவரி -2016)
குருக்ஷேத்ரத்தில் தான் கண்ணன் சொன்ன பகவத் கீதையும் தோன்றியது, கண்ணன் கேட்ட "விஷ்ணு சஹஸ்ர நாமமும் " தோன்றியது. எனவேதான் குருக்ஷேத்ரம், தர்மக்ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. இரண்டும் தோன்றியது ஒரு ஏகாதசியில் தான் !
பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் பீஷ்மரை, பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவ்வாறே அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் " ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் " என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இப்படிப்பட்ட ஆயிரம் நாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ மஹா விஷ்ணு வேறு யாரும் அல்லர். அவரேதான் இந்த ஸ்ரீ கிருஷ்ணர் ! என்ற உண்மையையும் கூறி ஸ்ரீ பரந்தாமனை வணங்குகிறார்.
இந்த புண்ணிய நாள், பீஷ்ம பிதாமகரின் பெயரால் "பீஷ்ம ஏகாதசி " என்றே வழங்கபடுகிறது. இந்த வருடம் "பீஷ்ம ஏகாதசி ", வரும் புதன் கிழமை ( 20-ஜனவரி-2016 ) அன்று வருகிறது ( தகவல் : ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம் ).
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அவதரித்த இந்த நன்னாளில் இல்லங்களில் தவறாமல் " ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை" பாராயணம் செய்து, சகல க்ஷேமத்தையும் பெறுவோம்.
( தினமுமே "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் " செய்வது நற்பலன்கள் தரும். )

No comments:

Post a Comment