jaga flash news

Saturday 23 January 2016

"தை பிறந்தால் வழி பிறக்கும்"

"தை பிறந்தால் வழி
பிறக்கும்" ?
"தை பிறந்தால் வழி பிறக்கும்" - என்ற
பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த
ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில்
எவ்வளவு செய்திகள் அடங்கி இருக்கின்றன
என்பது தெரிந்துகொள்ளுங்கள்.
(க) அண்ட பேரண்டங்களிலிருந்து மூலப்
பதினெண்சித்தர்களும், மூலப்
பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது
துணைவர்களும் இவ்வுலகுக்கு வந்து
கற்பாறைகள் மேல் தங்கி தங்களுடைய
ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அந்த நிகழ்ச்சி
தை மாதத்தில்தான் நடந்தது.
(ஙு) ஆதிசிவனார் இம்மண்ணுலகுக்கு வந்த
காலம் தை மாதமேயாகும்.
(சு) ஆதிசிவனார் இப்பாரில் (பார் + உலகம்)
வாழ்ந்து கொண்டிருந்த (வதிந்து
கொண்டிருந்த = வசித்துக் கொண்டு இருந்த)
பெண்ணான பார்வதியை (பார் + வதி =
இவ்வுலகத்தைச் சேர்ந்த பெண்) மணந்து
கொண்டது தை மாதத்தில்தான் (தைப்பூச
நாளில்). அதுவும் தைப்பூச நாளன்று.
(ரு) ஆதிசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த
முருகன் தை மாதத்தில்தான்; தைப்பூச
மீனில்தான், தைப்பூச யோகத்தில்தான்
பிறந்தான்.
(சூ) தைமாதத்தில்தான் திருப்பாற்கடல்
கடையப்பட்டு இலக்குமியும், அமுதும்,
ஆலகால நஞ்சும் வெளிப்பட்டனர்.
(சா) தேவாசுரப் போர் தைமாதத்தில்தான்
துவங்கியது. தொடர்ந்து பதினெட்டு
ஆண்டுகள் மீண்டும் மீண்டும் இடைவெளி
விட்டு தைமாதத்திலேயே நிகழ்ந்தது
தேவாசுரப்போர். இந்தப் போர் முடிவுக்கு
வந்ததும் தைமாதத்தில்தான்.
(அ) முருகன் தேவாசுரப் போரை நிகழ்த்திட
அருட்படை (தேவர்களுடைய படை)
சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதும் தை
மாதத்தில்தான்.
(கூ) முருகன் தெய்வானையை மணந்ததும்,
வள்ளியை மணந்ததும் தை மாதத்தில்,
தைப்பூசத்தில்தான்.
(ய) ஆதிசிவனார், இளமுறியாக் கண்டம் எனும்
குமரிக் கண்டத்தில் திருவிடம் என்ற தீவை
தேர்ந்தெடுத்து இந்து வேதத்திற்காகவும்,
இந்து மதத்திற்காகவும், தமிழ்
மொழிக்காகவும் செயல்படத் துவங்கியது தை
மாதத்தில்தான்.
(க) ஆதிசிவனார் திருவிடம் எனும் தீவில்
தமிழ்மொழிக்காக மருதமரக் காடுகள் இருந்த
பகுதியில் மதுரை மாநகரை உருவாக்கத்
தொடங்கியதும்; இந்து நதிக் கரையில் இந்து
வேதத்திற்காக ‘அருட்பா’ எனும் நகரை
உருவாக்கத் துவங்கியதும் அதையடுத்து
இந்து மதத்திற்காக ‘மோகம்சிதறா’ நகரை
உருவாக்கத் தொடங்கியதும் தை
மாதத்தில்தான். ஆனால், இம்மூன்றையும்
குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தான்
அமைத்தார். அதாவது முதலில் முத்தமிழ்ச்
சங்கம் நிறுவுவதற்காக மருதை மாநகரை
உண்டாக்கினார். அந்நகர் முழுமை பெற்றதும்
அங்கு தை மாதத்தில்தான் முத்தமிழ்
சங்கத்தைத் தோற்றுவித்தார். அதன் பிறகே
அதாவது, முத்தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து
அங்கு இளமுறியாக் கண்டத்து மக்கள்
தமிழ்மொழியை நன்கு கற்றுக் கொண்டபிறகு
[சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து] அங்கிருந்த
இந்துநதிக் கரையில் இந்து வேதத்திற்காக
அருட்பாநகர் என்ற ஒரு நகரை உருவாக்கினார்.
இந்த அருட்பா நகரில்தான் இந்துவேதங்கள்
நான்கும், இந்துவேத நூல்கள் 392உம்
(முந்நூற்றுத் தொண்ணூற்று இரண்டு),
இந்துவேத சுலோகங்கள் எனப்படும்
சூலகங்கள் 4,42,363உம் (நான்கு இலட்சத்து
நாற்பத்து இரண்டாயிரத்து முன்னூற்று
அறுபத்தி எட்டு) கற்றுக் கொடுக்கப்பட்டன.
இப்படி இந்து வேதாகம பாடசாலை அருட்பா
நகரில் நான்காண்டுகள் (48 மாதங்கள்)
தொடர்ந்து நடத்தப்பட்டு; முழுநிலவு பருவ
பூசைகள் 48 இந்துவேதாகம நெறிமுறைப்படி
நிகழ்த்தப்பட்டிட்ட பிறகுதான் அருட்பா நகரை
யொட்டியே (மோகம் சிதறா நகர்)
மோகஞ்சிதறா நகர் உருவாக்கப்பட்டது.
். தை மாதத்தின் முதல் நாள் தமிழர்
திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளே
பொங்கல் பண்டிகையாகும். கேரளாவிலும்,
வட மாநிலங்களிலும் இந்நாளை "மகர
சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர
். "சங்கரமணம் என்றால்" நகரத் தொடங்குதல்
என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர
ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை
பயணத்தைத் தொடங்குகிறார். இது, உத்ராயண
புண்ணிய காலத்தின் துவக்கமாகும்.
விவசாயிகள் முதன்முதலில் அறுவடை செய்த
பயனுக்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும்
விதத்தில் கொண்டாடுவதே இவ்விழாவின்
அடிப்படையாகும். அன்று, வயலில் விளைந்த
புதிய நெல்லை குத்தி அரிசியாக்கி, அதில்
பொங்கலிட்டு கண்ணிற்கு தெரியும்
கடவுளான சூரியனுக்கு படைப்பர்.
செய்ந்நன்றி மறக்கக்கூடாது என்ற அரிய
தத்துவத்தை உணர்த்தும் நாள் இது.
தைப்பொங்கலன்று வாசலில் அடுப்பு வைத்து
பொங்கலிடுவர். பொங்கல் பானையில் பால்
கொதித்துவரும்போது, ""பொங்கலோ
பொங்கல் என்று குரல் எழுப்புவதும், வயதான
பெண்கள் குரவையிடுவதும் (குலவை)
இப்பண்டிகைக்குரிய சிறப்பாகும். பின்னர்
அப்பொங்கலையும், கரும்பு, ஆகியவற்றை
சூரியனுக்குப் படைத்து வழிபடுவர். தங்கள்
வீட்டில் பிறந்து திருமணம் ஆன
பெண்மக்களுக்கு பொங்கல் படியாக பணம்
கொடுப்பதும் சகோதர பாசத்தை
வெளிப்படுத்தும் விதத்தில்
அமைந்துள்ளது.மறுநாள் மாட்டுப்பொங்கலன
்று பசு, கன்று, காளைகளுக்கு நன்றி
தெரிவிக்கும்விதமாக, அவற்றை குளிப்பாட்டி,
அலங்கரித்து தெய்வமாகவே பாவித்து வணங்க
வேண்டும்.
பலன்: தைப்பொங்கலன்று சூரிய பகவானை
வழிபடுபவர்கள் உடல் ஆரோக்கியம்,செல்வம்,
ஆயுள் ஆகியவற்றை குறைவின்றி பெறுவர்.
செய்நன்றி மறவாத தன்மையும், சகோதர,
சகோதரிகள் மீது பாசமும் வளரும்.
பொங்கல் பூஜை செய்வது எப்படி?
இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக,
வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல்
வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்கா
ரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து
போவது முறையானதல்ல. மேலும், இளைய
தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி
பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து
கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க
வேண்டும்.
வீட்டு வாசலில் பொங்கல் வைக்க
வசதியில்லாவிட்டால், தெருமக்கள்
அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை
தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில்
இணைந்து பொங்கல் வைக்க வேண்டும்.
கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால்
பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து,
""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர
முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு
ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற
நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம்
முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி
சென்றார்களோ, அதுபோல பொங்கலும்
மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும்
விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ்,
மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல்
வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க
வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட,
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளி
க்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை
அல்லது தென்னை ஓலை தருவித்து
பொங்கலிட வேண்டும்.
பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து,
வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான
குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை
இலையைப் போட வேண்டும். அதன் இடது
ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க
வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி,
அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு,
சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய்,
சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு,
காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை)
வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு
ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின்
ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில்
சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக
வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள்
வைக்க வேண்டும்.
பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது
பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க
வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர
ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம்
இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட
வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி
காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன்
நீரை பானையில் விட வேண்டும்.
சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக்
களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட
வேண்டும். அடுப்புக்கும், பொங்கல்
பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற
வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால்
பொங்கும் போது குலவையிட வேண்டும்.
குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ
பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர்
பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி
வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக்
கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும்.
அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது
அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும்.
இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில்
பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை
இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க
வேண்டும்.
இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி
வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும்
பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம்
தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச்
சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த
தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர்
காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும்.
காகம் உணவை எடுத்த பிறகு,
குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்
கொடுக்க வேண்டும். அதன்பிறகே
பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி
வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய
வேளையில் சாப்பிட வேண்டும். இரவில்
முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள்,
புத்தாடை வைத்து வணங்க வேண்டும்.
புத்தாடையை தானமாக கொடுத்து விட
வேண்டும்.
“போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை
எரிக்க வேண்டும்? பொங்கல் திருநாள்
யாருக்காக கொண்டாடப்படுகிறது?” இதற்கான
விளக்கங்களும் வாழ்த்துக்களும் இங்கே…
போகியின் சாரம்!
போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம்
முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம்
வருகிறது. பழையன கழிந்து புதியது புகும்
நாளாக இது கொண்டாடப்படுகிறது.
பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட
பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம்.
ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச்
செய்கிறோம்.
முக்கியமாக விவசாயக் குடும்பங்களில்
பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து
விடுவது வழக்கம். அந்தக் காலத்தில்
உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும்
இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த
பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால்
குழந்தை கருவுறுவதும் தாமதமாகும்.
எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு
புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது.
போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி
டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து
சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய
அவசியமில்லை.
முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில்,
குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள்
அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில்
அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம்.
குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை
கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில
்லை. எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள
குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து
வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது.
அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள்
பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத்
தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான்
போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே
பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு
நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும்,
அர்த்தமும் இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு
இல்லை. எனவே, போகி கொண்டாடுகிறேன்
என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக்
போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை
மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு
வழிவிட வேண்டுமென்ற நோக்கம்
முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை
மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற
வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி
இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு
புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பது
அவசியமல்லவா? எனவேதான் போகிப்
பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம்
வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறவில்லை.
நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய
பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக்
கொடுத்து விடலாம். தை முதல் நாள் புதிய
வாழ்க்கையைத் தொடங்கலாம்.
உழவர் திருநாள்!
இந்தப் பொங்கல் திருநாள் மிகவும்
முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத்
திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில்
இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது.
சூரியசக்திதான் பூமியில் அனைத்து
வளர்ச்சிக்குமான அடிப்படை. தாவரங்கள்
வளரவேண்டும் என்றாலோ, மனிதனின்
வாழ்க்கை மற்றும் உற்பத்தி மேம்பட
வேண்டும் என்றாலோ சூரிய சக்தி மிகவும்
அவசியம். சூரியனின் தன்மையில் மாறுபாடு
காரணமாக தை மாதம் பீடை தொலைந்து புது
வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்தக் காலத்தில்
சூரிய சக்தியை தனக்குள் சேகரித்து
வைத்துக்கொள்ளும் பொருளோ, மனிதனோ
வளர்ச்சியை உற்சாகத்தை உருவாக்க
முடியும். இதனால் மனிதனுக்கும் பிற
உயிர்களுக்கும் தேவையான உணவு
உற்பத்தியும் பெருகும்.
வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி
உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின்
அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர
முடியும்.
உணவை ஒரு பொருளாக நாம் பார்க்கிறோம்.
ஆனால் உண்மையில் அது நமது உயிர்,
வாழ்தலுக்கான இன்றியமையாத சக்தியாகும்.
உணவு கிடைக்காதபோதுதான் நமக்கு இந்த
உண்மை புரியும். எனவே உணவு
உற்பத்திக்கும் பயிர்கள் வளர்வதற்கும்
காரணமான சூரியனுக்கு நன்றி தெரிவித்து
அர்ப்பணம் செய்ய விரும்புகிறோம்.
குறிப்பாக விவசாய குடும்பத்தில் உள்ளவர்கள்
இதை உணர்வுபூர்வமாக செய்வார்கள். தை
முதல் தேதி அதாவது ஜனவரி 14ம் தேதிக்குப்
பிறகு பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி
அடைவதால் அதை சூரியனுக்கு
அர்ப்பணிக்கும் நாளாகவும் அமைகிறது. நாம்
உண்ணும் உணவு உயிருக்கு ஊட்டம்
வழங்குவதால் அதற்கு காரணமான
மண்ணுக்கு, உணவைக் கொடுக்கின்ற
விவசாயிக்கு, அதை சமைத்து வழங்கும்
தாய்மார்களுக்கு, உற்பத்திக்கு உதவியாக
இருக்கின்ற கால்நடைகள் குறிப்பாக
மாடுகளுக்கு, மேலும் சுற்றுச் சூழலுக்கு
அனைத்திற்கும் மூலமாக இருக்கின்ற
சூரியனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக
இருப்பதை உணர்த்துவதுதான் பொங்கல்
கொண்டாட்டம்.
வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி
உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின்
அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர
முடியும். போகிப் பண்டிகை பொங்கல்
திருநாள், மாட்டுப் பொங்கல் ஆகிய
திருவிழாக்கள் நமக்கு இதைத்தான்
உணர்த்துகின்றன. பிற மாநிலங்களில் மகர
சங்கராந்தி என்றழைக்கப்படும் தை முதல் நாள்
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக
கொண்டாடப்படுவதால் இதைத் ‘தமிழர்
திருநாள்’ என்றும் விவசாயக் குடும்பங்களில்
இந்நாளை அறுவடைத் திருநாள் என்று
கொண்டாடப்படுவதால் ‘உழவர் திருநாள்’
என்றும் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment