jaga flash news

Thursday, 15 November 2012

அவசரத்தில் கல்யாணம் பண் ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே !

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண் டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண் ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள் ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மா வின் ராகம் அல்ல; சரீரத்தின் தாள மே! உடல் இச்சையால் உந்தித் தள்ள ப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவ றிவிடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிற து. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட் டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபல த்தை, அகங்காரத்தை, மோச த்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடு கிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவ ளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதி லும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவ ர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசி யை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகா லட் சுமியை போலவும், மன்னிப் பதில் பூமாதேவியை போலவும், அன் போடு ஊட்டுவதில் அன்னை யை போலவும், மஞ்சத்தில் கணிகை யை போலவும் உள்ள பெண் ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கி றது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

எந்தவொரு ஆடவனின் அழ கும் ஒரு பெண்ணின் பார் வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகா லட்சுமி போன்ற குலப் பெண் கள் அந்த அதிர்ச்சிக்கு பலி யாகி விடுவதில்லை. இடி தாங்கி, இடியை இழுத்து பூமி க்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டு ம். மாறாக, அவனது கோபத் தில் எண்ணெய் ஊற்றி குடும் பத்தை இரண்டாக்கி விடக் கூடாது.அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவ ள் தாய்போல் இருக்க வேண் டும்.
பள்ளியறையில் அவள் கணி கையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வே ண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப்போ வதில்லை; வாழ்க்கையில் தோல்விய டைவ தும் இல்லை என்கிறார் கண்ணதாச ன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனா கி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகா சமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாச ன், தவறான பெண்ணை ஒருவன் மனைவி யாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இரு ந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முக த்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறா ர் கண்ணதாசன்..
ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திரும ணங்கள், 100க்கு 90 தோ ல்வியே அடைந்திருக்கின்றன. 
‘தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

2 comments: