jaga flash news

Sunday 18 November 2012

ஆடி, மார்கழி மாதத்தில் திருமணத்தை தவிர்ப்பது ஏன்?

பழங்காலத்தில் ஆடி மாதம் என்பது விதை விதைப்பதற்கான மாதமாக இருந்து வந்தது. ஆடி மாதத்தில் சூரியனின் சுழற்சிமுறையில் (பாவன இயக்கம்) மாற்றம் ஏற்படும் என்பதால் விதைப்பதற்கான காலமாக ஆடி மாதத்தை முன்னோர்கள் பின்பற்றினர்.

மார்கழியை பொறுத்தவரை பருவநிலை மாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட வகைப் பயிர்கள் அறுவடைக்காக காத்திருக்கும். எனவே இதனை அறுவடைக் காலமாக முன்னோர்கள் கருதினர். 

தற்போதைய சூழலில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். ஆடியும், மார்கழியும் கூட விதிவிலக்கல்ல. தமிழகத்தில் இன்றளவிலும் குறிப்பிட்ட பிரிவினர் ஆடி மாதத்தில் திருமணம் செய்வார்கள். அவர்களுக்கு விவசாயத்துடன் தொடர்பில்லை. 

ஒரு சிலர் பங்குனி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று கூறுவர். காரணம் கேட்டால், ஆண்டின் கடைசி மாதமாக பங்குனி வருவதால் திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர்.

தம்பதிகளின் நட்சத்திர ராசி, தசா புக்தி, ஜனன ராசிக்கு தகுந்தாற்போல் திருமணத்திற்கு உரிய மாதம், தேதியை தேர்வு செய்யலாம். இதில் பங்குனி, ஆடி, மார்கழி என்று விதிவிலக்கு கிடையாது.

1 comment:

  1. ஆடிமாதம் திருமணம் நடந்தால், பங்குனி R சித்திரையில் குழந்தை பிறப்பது, குளிகை மாதம் மற்றும், கோடைகாலம், நடக்கும். தாய் உடம்பு தாங்காது. மற்றும் குளிகை மாதம் குழந்தை பிறப்பது நல்லது அல்ல எனப் பெரியவர்கள் சொல்வார்கள்.

    ReplyDelete