jaga flash news

Sunday 18 November 2012

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்?


பீடை என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. நமது உடலை நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம். 

தட்சணாயணம் அந்த மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் அந்த மாதத்துடன் முடிகிறது. அந்த மாதத்தில் உடலுறவு என்றெல்லாம் இல்லாமல், அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதா‌ல், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் அந்த மாதத்தை அப்படி ஒதுக்கி வைத்தார்கள். 

லெளகீகங்களுக்காக எல்லாம் இல்லாமல், ஆன்மிக நிகழ்வுகளுக்காக என்று ஒதுக்கி வைத்தார்கள். தட்சணாயண மாதத்தில் அது முடியக்கூடிய மாதம். சூரியனுடைய தெற்கு இயக்கம் முடியக்கூடியது. அந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. 

அதனா‌ல் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.

3 comments:

  1. Found usefull articles of varied interest at one place. Please continue.....

    ReplyDelete
  2. மார்கழி மாதம் அழகான மலர்கள் மலரக்கூடிய மாதம். மட்டுமின்றி, அது இறைவனுக்கான மாதம் என்றுகூட சொல்லலாம். மற்ற நாட்களில் மாமிசம் சாப்பிட்டு, உடலை கெடுத்து வைத்திருப்பார்கள். அதற்கு இந்த மாதம் உகந்தது. மார்கழிப் பனி குளிர்ந்த நீரில் அதிகாலையில் குளிப்பது, நரம்புத் தளர்ச்சிக்கு நல்லது. மார்கழி மாதம் எவ்வளவு குளிரில் குளித்தாலும் ஜலதோஷம் பிடிக்காது என்பது குறிப்பிடத் தக்கது. அதிகாலையில் குளித்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, ஒரு சாணி உருண்டையில் பூசனிப்பூ வைத்து, சிறு அகல்விளக்கு ஏற்றினால், எந்த பீடைகளும் நம்மை நெருங்காது. மார்கழி மாதம் அத்தனை சிறப்புகள் அமைந்த மாதம்.

    ReplyDelete
  3. பூசணி என்று வரவேண்டும்."னி" தவறு.

    ReplyDelete