jaga flash news

Sunday, 18 November 2012

முதுமொழியு‌ம் விளக்கமு‌ம்

முப்பதுக்கு மேல் வாழ்ந்தாரும் இல்லை, முப்பதுக்கு மேல் வீழ்ந்தாரும் இல்லை என்பது முதுமொழி. 

அதாவது ஒருத்தர் தொடர்ந்து 30 வருடத்திற்கு மேல் உயரத்திலேயே இருக்க முடியாது. வியாபாரமாகவே இருந்தாலும் 30 வருடத்திற்கும் ஓடும். அதற்கு மேல் ஓடாது என்பார்கள். அதாவது சனி பகவான் ஒரு வீட்டில் இரண்டுரை ஆண்டுகள் இருப்பார். அவர் மேஷத்திலிருந்து மீனம் வரைக்கு 12 ராசிகளைக் கடப்பதற்கு 30 ஆண்டுகள் ஆகும். அவரவர்கள் ராசியைப் பொறுத்து இது வேறுபடும். 

உதாரணத்திற்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதிலிருந்து அடுத்து ஏழரைச் சனி வரும் வரைக்கும் அவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். அதனால் சனி பகவான் 12 ராசிகளையும் கடப்பதற்கு ஆகும் காலகட்டம் 30 வருடம். சனிதான் காரியன், கரியன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. 

காரண காரியங்களுக்கும், சில உத்தியோக, தொழில் அமைப்புகளுக்கும் உரிய கிரகம் சனிதான். அதனால் அவர் கையில்தான் எல்லாமே இருக்கிறது என்பதை சொல்வதற்காகத்தான் முப்பதுக்கு மேல் வாழ்ந்தாரும் இல்லை, வீழ்ந்தாரும் இல்லை என்று சொல்கிறார்கள்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா. வெ.சாமி அவர்களே..! பழமொழி அருமை அய்யா.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Wed. 30, Oct. 2024 t 9.58 pm.

    *ஜபம் செய்யும் திசை :*

    * கிழக்குத் திசை நோக்கி ஜபம் செய்தால் "வசியமும்"....

    * தென்கிழக்குத் திசை நோக்கி ஜபம் செய்தால் "நோய் நீக்கமும்" ....

    * தென்திசையை நோக்கி ஜபம் செய்தால் "பெரும் தீமையும்" ....

    * தென்மேற்கு திசை நோக்கி ஜபம் செய்தால் "வறுமையும்" ....

    * மேற்கு திசை நோக்கி ஜபம் செய்தால், "சேர்த்து வைத்த பொருட் செலவும்" ....

    * வடமேற்கு திசை நோக்கி ஜபம் செய்தால், "பேய் பிசாசுகளை ஏவுதலும்" ( ஓட்டுதல் )....

    * வடக்கு திசை நோக்கி ஜபம் செய்தால், "தங்கமும், கல்வியும் உண்டாகுதலும்" ......

    * வடகிழக்குத் திசை நோக்கி ஜபம் செய்தால், "முக்தியும்" உண்டாகும் என "சிவாகமங்கள்" சொல்கின்றன. *அண்ணாமலை சதகம் : பாடல் : 57* இவ்வாறு கூறுகிறது.

    மீண்டும் சந்திக்கலாம் !
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete