jaga flash news

Saturday 17 November 2012

தாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்?

ஒருவருடைய பெயரில் தந்தையின் முதல் எழுத்துடன் தாத்தனின் முதல் எழுத்தும் சேர்க்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் பரிந்துரைக்கிறீர்கள்? 
சாதாரணமாக எண் ஜோதிடம் பார்ப்பவர்கள் ஏதாவது ஒரு எழுத்தை சேர்த்துக்கொண்டு அல்லது ஊர் பெயரையே சேர்த்து அவர்கள் எதிர்பார்க்கும் எண் வந்தவுடன் விட்டுவிடுகிறார்கள். ஆனால் நம்முடையது அப்படி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்துவிட்டு எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ அந்த அடிப்படையில்தான் எழுத்துக்களை இணைக்கிறோம். மாதுர் பாட்டன் என்பது இராகு, பிதுர் பாட்டன் என்பது கேது. ஆனால் சில நூல்கள் மாற்றியும் சொல்கின்றன. இராகு என்பது தந்தை வழி பாட்டனுக்குரியது, கேது என்பது தாய் வழி பாட்டன் என்றும் சொல்லப்படுகிறது. 

இராகுவோ, கேதுவோ ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் பாட்டானாருடைய பெயரின் முதல் எழுத்தையோ, பாட்டியினுடைய பெயரின் முதல் எழுத்தையோ பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் பயன்படுத்தவே கூடாது. அப்பாவினுடைய பெயரை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் அது அடையாளம் காட்டக்கூடியது என்பதால் அதனை தவிர்க்க முடியாது. அதற்பிறகு வரும் எழுத்துக்களையெல்லாம் கிரகங்களைப் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். இராகுவோ, கேதுவோ நன்றாக இருந்தால்தான் மாதா பாட்டனையோ, பிதா பாட்டனையோ எடுத்துக்கொள்ள வேண்டும். 

1 comment: