jaga flash news

Sunday 16 December 2012

இஸ்லாத்திலும் இந்து மத சடங்கு


 இஸ்லாமிலும் / இஸ்லாத்திலும் இந்து மத சடங்கு -- hindu rituals are being followed in islam / muslim religion

முகம்மது நபி அவர்கள் இறைவன் அவரிடம் கூறியதை எழுதி வைத்தாரா அல்லது அவருக்கு முன்பே உள்ள வழிப்பாட்டு முறையை தொகுத்து வெளியிட்டாரா என்பதை யோசித்தால் சில உண்மைகள் குழம்ப செய்கின்றன.

அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே அங்கு விக்கிரக வணக்க மதமும் யூத மதமும் கிருஸ்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.
யூத கிருஸ்துவ மதங்கள் உருவாவதற்கு முன்பே அங்கே சூரிய வழிபாடும் லிங்க வழிபாடும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது.

மெக்கா வில் உள்ள புனித காபா வில் முன்னுற்று அறுபது சிலைகள் இருந்ததாம். ஒவ்வொரு நாளும் ஒரு சிலையை வணங்கி வருட கடைசியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து மூலத்தில் உள்ள லிங்கத்தை வழிபட்டார்களாம்.
மேலும் இயேசு பிறப்பதற்கு முன்னுற்று அறுபது வருடம் முன்பே அங்கே யூத மதம் காலுன்றி விட்டது.
யூத மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம்.
மேலும் அரேபியாவில் குரேஷியர்கள் சிலை வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர்.

இப்படி ஆதி மதம் சிலை வணக்க மதம் என்று கூறபடுவது எந்த மதம் ? என்று ஆராந்து பார்த்தால் மேலை நாடுகளின் மண்ணுக்கடியில் கிடக்கும் லிங்கங்கள் எந்த மதம் என்றால் நமக்கு எளிதாக புரியும் அது இந்து மதம் என்று.
ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாறாயிரம் குதிரை படையுடன்  போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் , காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்கா வை ஆக்கிரமித்து காபா வில் உள்ள முன்னூற்று அறுபது சிலையையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும்  உடைத்து சின்னா பின்ன படுத்தினர்.
அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கியது.
மேலும் குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.
இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை உணரலாம்.
தொப்பி அணிய கூடாது. வெள்ளை வஸ்திரம் மேலும் இடுப்பிலும் அணிய வேண்டும்.

பிரமசரியம் கடைபிடிக்க வேண்டும்.

உயிர்கொலை செய்ய கூடாது.
இவை அனைத்தும் இந்து மத நடைமுறை ஆகும்.
மேலும் ஹஜ் உள்ள காபா வில் ஒரு கல் உள்ளது  அதை தொட்டு முத்தமிடுவதில் வழிபாடு முடிவடைகிறது.
அந்த கல் ஏறக்குறைய சிவ லிங்க வடிவத்தில் உள்ளது.
சுன்னத் என்ற பழக்கம் யூத மக்களும் பின்பற்றியதே ஆகும்.
நன்றி : http://www.ujiladevi.in/2011/06/blog-post_08.html

No comments:

Post a Comment