குடும்பம் என்பது ஒரு தற்காலிக பிணைப்பு ,FAMILY IS NOTHING BUT STAYING TOGETHER AT NIGHT IN PILGIRIMAGE
குடும்பம் என்பது அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா அனைவரும் ஒரு இடத்தில் வசிப்பது. அது எப்படி பட்டது தெரியுமா ?
பல மனிதர்கள் புனித
பயணம் செல்வார்கள் . அப்போது பகல் முழுவதும் நடந்து கொண்டே இருப்பார்கள் .
இரவு வரும் போது அங்கே கூடாரங்கள் கட்டப்பட்டு இருக்கும் ( தங்குவதற்காக ).
அங்கே பல இடத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு கூடாரத்தில் தங்குவார்கள்.
அப்போது நண்பர்களை போல் பேசி கொள்வார்கள். உணவுகளை பகிர்ந்து கொள்வார்கள்.
ஒருவருக்கொருவர் உதவி கொள்வார்கள்.
விடிந்ததும் அனைவரும்
குளித்து விட்டு தனித்தனியே நடக்க ஆரம்பித்து விடுவார்கள். மீண்டும் இரவு
வரும் போது ஏதாவது ஒரு கூடாரத்தில் தங்குவார்கள் . அப்போது வேறு ஒரு
வித்தியாசமான மனிதர்களுடன் சேர்ந்து உண்ணுவார்கள் உறங்குவார்கள். நண்பர்களை
போல் சகோதரனை போல் பழகுவார்கள்.
இது தொடர்ந்து கொண்டே இருக்கும் .
எது வரை ?
புனித பயணம் முடியும் வரை.அதாவது இறைவனை தரிசிக்கும் வரை புனிதபயணம் தொடரும்.
இப்போது குடும்பத்தை புனித பயணத்துடன் ஒப்பிட்டு பாப்போம்.
நம்முடைய தினசரி வேலை தான் புனித பயணம் .
அம்மா அப்பா அண்ணன்
தம்பி அக்கா போன்ற உருவத்தில் நம்முடன் சேர்ந்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
நாம் அனைவருமே ஒரே குணத்தை பெற்றிருக்க வில்லை . வேறு பிறவியில் வேறு
எங்காவது பிறந்து இருப்போம். எதாவது வேலை செய்து இருப்போம்.
இந்த பிறவியில் இப்படி ஒரு குடும்பத்தில் இருக்கிறோம்.
புனித பயணத்தின் இரவு
நேரத்தில் தங்கும் போது பலருடன் சேர்ந்து தங்குவோம் அதே போல இந்த
பிறவியில் நாம் இந்த குடும்பத்தில் பிறந்து சேர்ந்து இருக்கிறோம்.
புனித பயணத்தின் பகல்
பொழுது என்பது குடும்பத்தில் இருப்பவர்கள் இறந்து மீண்டும் அந்த ஆன்மா
வேறு உடலை எடுத்து மீண்டும் பயணத்தை தொடரும்.
இந்த பயணம் தொடரும் எதுவரை ?
ஆன்மா இறைவனை அடையும் வரை மறு பிறவி எடுத்து பயணத்தை தொடரும்.
நாம் எப்படி கோயில்
போய் சேரும்வரை புனித பயணம் தொடர்ந்து நடக்கிரோமோ அதை போல் ஆன்மா இறைவனை
அடையும் வரை பிறந்து இறந்து கர்மத்தை செய்யும்.
This comment has been removed by the author.
ReplyDeleteபழையபடியும் முதலில் இருந்தா..;அய்யா வெ.சாமி.. அவர்களே.. ஆனால், எப்போ பார்த்தாலும் புதிதாக படிப்பதுபோன்றுதான் இருக்கிறது. ஆகவே மீண்டும் தொடர்கிறேன். ஆரம்பத்தில் தொடர்ந்ததற்கும், இப்போ தொடர்வதற்கும் இடையில் அதிக மாறுபாடுகள் என் மனதில் மட்டுமே உள்ளன... குடும்பத்தில் மாறுதல்கள் ஏதும் சிறப்பாக நடைபெறவில்லை.
ReplyDelete