jaga flash news

Sunday, 22 November 2015

உண்மை(யில்) ஆன்மீகம் என்றால் என்ன?

உண்மை(யில்) ஆன்மீகம் என்றால் என்ன?

தெய்வம் என ஒன்று உண்டு என நம்பும் மனிதவர்கம், தன் வாழ்வினில் ஏற்படும் துன்பங்கள் தீரவும் மேலும் வராமல் தடுக்கவும், இனி வாரத்தில் ஒரு முறையாவது அருகில் உள்ள கோவில் சென்று, இறை வழிபாடு செய்துவர வேண்டும் என்று நினைப்பதுண்டு... அப்படி கோவில் சென்று வரும் வழியில் நண்பர் ஒருவர் நம்மை பார்த்து...என்னப்பா இப்பல்லாம் அடிக்கடி கோவில் பக்கம், பெரிய ஆன்மீகவாதி ஆகிட்ட.. என்று கேட்பார்கள்...

உண்மையறியாமல் ஒருவர் எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும் அவர் ஆன்மீகவாதியும் அல்ல...! அவர் பிரச்சனை தீரப்போவதும் அல்ல. நாம்.. மற்றொரு உயிரினத்திற்கு பிரதிபலன் பாராமல் செய்யும் நல்ல உதவிக்கு தமிழில் ஆன்மீகம் எனப்படும். ஆன்ம(உயிர்) ஆக்கம் என்று பொருள்.

பசியில்வாடும் ஏழை-எளியோர்க்கு பசியாற்றுவித்தல்(அன்னதானம்) -ஆன்மீகம் ஆகும். அவர்கள் மானம் காக்க தங்களிடம் உள்ள பழைய உடைகளையாவது கொடுத்து உதவுதல் -ஆன்மீகம் ஆகும், கோவில்களுக்கு சென்று பால் அபிஷேகம், பழ அபிஷேகம் செய்யாதிருத்தலும் அதை பாராமல் தவிர்த்தலும் -ஆன்மீகம் ஆகும், புலால்(NON-VEG) உண்ணாமல் இருத்தல் -ஆன்மீகம் ஆகும்,

அது ஏங்க... சாலை விதியின்படி சிக்னலில் நின்று செல்லுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருத்தல், எவன் எவனோ சாப்பிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் மக்களுக்கும் போகும் என்ற நம்பிக்கையில் சரிவர வருமானவரி செலுத்துதல் போன்றவை பெரும்பாலான மக்களுக்கு நன்மை தருவதால் அது சுத்த ஆன்மீக செயலாகும்.

இதுபோன்ற செயல்களை செய்பவரே உண்மையில் ஆன்மீகவாதி ஆவார்.
இதை தொடர்ந்து செய்தால் நம் துன்பங்கள் நீங்கி இன்பமுடன் வாழலாம் என்பது உறுதி. இந்த உண்மையை மக்கள் அறிய ஞானிகளால் அதாவது உண்மை கடவுள்களால் உருவாக்கப்பட்டதே கோவில்களாகும்.

No comments:

Post a Comment